"சோழீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
சிலந்தி பின்னிய வலை மிகப் பெரிய சிவ சேவையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சோழகுலம் செழிக்க அரசனுக்கு மகனாகப் பிறக்கும் பெரும் பேற்றினை வழங்கினார், ஈசன். சோழ மன்னன் சுபதேவர்- அரசி கமலவதி மணிவயிற்றில் பிற்காலத்தில் 74 யானைப் புகா மாடக் கோயில்களைக் கட்டிய சிவநேசச் செல்வன் உதித்தான். பிள்ளைப் பேறு நடக்கவிருந்த சமயத்தில் ஜோதிட வல்லுநர் ஒருவர், ‘‘இன்னும் ஒரு மணி நேரம் கழித்து குழந்தை பிறந்தால் மூன்று உலகங்களையும் கட்டியாளப் போகும் சோழகுல விளக்காகத் திகழ்வான்’’ என்று கூறியதைக் கேட்ட கமலவதி தேவியார், ‘‘அப்படியானால் என் கால்களை மேலே தூக்கி, என்னைத் தலைகீழாகக் கட்டிப் போடுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டாள். ஒரு நாழிகை கழித்து பிள்ளை பிறந்தது; ஆனால் தாய் இறந்தாள். இருவர் நிலையும் தலைகீழாக மாறியதால் பெரிய உயிர் பிரிய, சிறிய உயிரின் கண்களுக்கு ரத்தம் அதிகமாகப் பாய, செக்கச் சிவந்த கண்களுடன் பிறந்தது குழந்தை. அதனால் செங்கட்சோழன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.
 
சிவபக்தியில் சிறந்து விளங்கிய செங்கட்சோழன் பேராற்றலுடன் திகழ்ந்தான். சேரமான் கணைக்கால் இரும் பொறைக்கும் இவனுக்கும் இடையே பகை முற்றியது. முதலில் நடந்த போரில் கழுமலம் என்ற இடத்தில் சேரன், சோழனை வென்று சிறைபிடித்தான். இரண்டாவதாக பொன்கலூர் நாட்டுத் திருப்பூரிலும் பூந்துறை நாட்டு [[பெருந்துறை|பெருந்துறையிலும்]] நடந்த போரில் பெருந்துறை கோட்டையில் சேரனை, சோழன் வென்று சிறைபிடித்து குடவாயில் கோட்டம் எனும் கும்பகோணத்தில் சிறை வைத்தான். சிறையில், சேரன் காவலாளியிடம் குடிக்க நீர் கேட்க, அவனை அலட்சியப்படுத்தும் வகையில், காவலன் வெகு நேரம் கழித்து கொண்டு வர, அதைக் குடிக்க மறுத்தான் சேரன். பிறகு தன் அவைப் புலவரும் உயிர்த் தோழனும் ஆன பொய்கையாருக்கு, நடந்த சம்பவத்தை பாடலாக எழுதி அனுப்பிவிட்டு ஒரு சொட்டு நீரோ, ஒரு பருக்கை உணவோகூட எடுத்துக் கொள்ளாமல், தன் உயிரை விட மானத்தைப் பெரிதாக எண்ணி, பட்டினி கிடந்து, சிறையில் நாட்களைக் கழித்தான்.
பல நாட்கள் கழித்து, தன்னை வந்தடைந்த அந்தப் பாடலைப் படித்த பொய்கையார், நண்பன் சேரனின் நிலையறிந்து துடித்துப் போனார். சேரன் இருக்கின்றானா, இறந்துவிட்டானா எனத் தெரியாத நிலைமையில் சோழனைச் சென்று சந்திக்க மேலும் சில நாட்கள் ஆகிவிட்டன. சோழனை வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் சேரனை விடுதலை செய்ய மாட்டான். கொலை பட்டினி இருக்கும் சேரன் மீது துளியும் ஈவு இரக்கம் காட்டாதவன், புலவர் சொல்லியா கேட்கப் போகின்றான் என்று தயங்கினார். ஆனால், புகழுக்கு மயங்காதோர் உண்டோ என்ற கருத்து மனதில் தோன்ற, திருப்பூர் மற்றும் பெருந்துறை போர்க்களத்தில் சோழனின் போர்த்திறத்தை வர்ணித்து ‘களவழி நாற்பது’ எனும் தலைப்பில் 41 (நாற்பதல்ல) வெண்பாக்களை இயற்றினார். பெரும்பாலும் யானைப் போரையே மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளார். பொய்கையார், அந்த நூலை அரசவையில் சோழன் முன் பாடி அரங்கேற்றினார். பாடல் முடிந்த உடன் சேரனின் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன. சோழனின் மனக்கதவுகளை திறக்க வைத்த அற்புதம் வாய்ந்த பாடல்கள் அவை!
 
785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3300805" இருந்து மீள்விக்கப்பட்டது