கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பாக்கித்தானில் உள்ள வானியல் ஆய்வகம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"KU Observatory" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:24, 19 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம் (Karachi University Observatory) பாக்கித்தான் நாட்டிலுள்ள கராச்சி பல்கலைக்கழகத்தின் வளாகப் பகுதியில் அமைந்துள்ளது. கே.யூ வான் ஆய்வகம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இந்த விண்வெளி ஆய்வகம் பாக்கித்தான் நாட்டின் விண்வெளி மற்றும் கோள்வானியல் இயற்பியல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. [1] [2] கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம் கடைசியாக 1995 ஆம் ஆண்டு பாக்கித்தான் உயர்கல்வி ஆணையத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இந்த ஆய்வகம் அனைத்து நில அதிர்வு சவால்களையும் எதிர்க்க முடியும், ஏனெனில் இதன் தூண்கள் தரையில் 15 அடி ஆழத்திற்கு செல்கின்றன. [3] [4] தொலைநோக்கியில் ஒரு மோட்டார் உள்ளது, அது பூமியின் இயக்கத்துடன் ஒத்திருக்குமாறு தன் வேகத்தை வைத்திருக்கும்.

முக்கியமான அவதானிப்புகள்

1976 ஆம் ஆண்டு வார்தெல் -76 ஏ என்ற வால்மீனின் கண்காணிப்பு முதலில் மேற்கொள்ளப்பட்டது. வால்மீனின் சுற்றுப்பாதை காலம் 20,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆரம்ப கட்ட அளவீடுகள் மூலம் பூமியின் மீது மோதும் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்

  1. Jamal, Meera (June 29, 2007), The Pathetic State of KU's Observatory!, பார்க்கப்பட்ட நாள் 31 December 2009
  2. Jamal, Meera (June 25, 2007), "Karachi: Observatory low on govt's list of priorities", Dawn News, பார்க்கப்பட்ட நாள் 31 December 2009
  3. http://javeria.wordpress.com/2007/06/29/the-pathetic-state-of-kus-observatory/
  4. http://www.dawn.com/2007/06/25/local18.htm

புற இணைப்புகள்