புஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
இது சா'தியின் முதல் படைப்பு. இந்த நூலில் சா'தியின் வாழ்நாள் அனுபவங்களின் பலன்களாக வாழ்க்கையின் மீதான அவரது பார்வைகள் பற்றிய சிந்தனைகள் உள்ளன. இதில் பல முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. சா'தியின் பயணங்கள் மற்றும் மனித உளவியல் பற்றிய அவரது பகுப்பாய்வுகள் ஆகியவை இதில் அடங்கும். இந்நூலில் அவர் தனது அறிவுரைகளை உணர்வுபூர்வமாகவும் ஈசோப்பின் நீதிக்கதைகளைப் போன்றும் குறிப்பிடுகிறார். இந்நூலில் அறநெறிமுறைகள் பற்றியும் அவற்றைப் பயிலும் விதங்களைப் பற்றியும் பத்து அத்தியாயங்களில் நூலாசிரியர் தந்துள்ளார். அவையாவன முறையே நீதி, கருணை, அன்பு, பணிவு, மனநிறைவு, பக்தி, கல்வி, நன்றியுணர்வு, மனந்திருந்துதல் மற்றும் பிரார்த்தனை ஆகும்.
 
நார்வேயின் பொக்லப்பன் உலக நூலகம் இந்நூலை எல்லா காலத்திலும் தலைச்சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. இது மத்னாவி என்னும் எதுகைகளுடன் கூடிய பாரசீக ஈரடிப் பாவகையில் இயற்றப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலும் டச்சிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1688-இல் டேனியல் ஹவர்ட் என்பவரால் புஸ்தான் டச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது