திரு (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியத் திரைப்பட இயக்குநர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Thiru (director)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:44, 25 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

திரு கிருஷ்ணமூர்த்தி (Thiru ; பிறப்பு: சூலை 6, 1979) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார் . [1] இவர் தீராத விளையாட்டு பிள்ளை (2010), சமர் (2013) , நான் சிகப்பு மனிதன் (2014) போன்ற படங்களை இயக்கியுள்ளார். [2]

தொழில்

சத்யம் (2008) படத்தில் இயக்குநர் ஏ. ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு, மூன்று முன்னணி நடிகைகளுடன் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை (2010) மூலம் திரு இயக்குநராக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. [3] அதன் பிறகு இவர் மீண்டும் விஷாலுடன் சேர்ந்து "சமர் "(2013), "நான் சிகப்பு மனிதன்" (2014) ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.[4] [5]

சொந்த வாழ்க்கை

இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் கனி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு தியா, தஷ்மாய் என இரு மகள்கள் உள்ளனர். [6]

திரைப்பட வரிசை

ஆண்டு தலைப்பு நடிகர்கள் மொழி
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை விஷால், நீது சந்திரா, சாரா-ஜேன் டயஸ், தனுஸ்ரீ தத்தா தமிழ்
2013 சமர் விஷால், த்ரிஷா, சுனைனா தமிழ்
2014 நான் சிகப்பு மனிதன் விஷால், லட்சுமி மேனன், இனியா தமிழ்
2018 திரு.சந்திரமௌலி கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் தமிழ்
2019 சாணக்யா கோபிசந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ஜரீன் கான் தெலுங்கு

சான்றுகள்

  1. "Director Thiru climbing his way to success". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30429435_1_vishal-director-thiru-prakash-raj. பார்த்த நாள்: 21 November 2012. 
  2. "Director Thiru ready with 'Samar', the Vishal-starrer". Indian Express. http://newindianexpress.com/entertainment/tamil/article563782.ece. பார்த்த நாள்: 21 November 2012. 
  3. "Review : (2010)". Sify.com. 2010-02-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  4. "Review : (2013)". Sify.com. 2013-01-13. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  5. "Naan Sigappu Manidhan: A doze of action". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  6. "Thoranai, Vishal and Thiru - Behindwoods.com - Tamil Movies News - Thoranai Vishal Agathiyan". Behindwoods.com. 2009-02-18. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_(இயக்குநர்)&oldid=3304058" இலிருந்து மீள்விக்கப்பட்டது