டாணா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2020இல் வெளியான தமிழ் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Taana (film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:45, 25 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

டாணா (Taana) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை யுவராஜ் சுப்ரமணி இயக்கியிருந்தார். இப்படத்தில் வைபவ் , நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [1]

கதைச் சுருக்கம்

காவலர்களின் குடும்பத்தில் ஒரே மகனாக பிறந்த சக்தி ( வைபவ் ) தனது குரல் கோளாறு காரணமாக காவல் துறையில் சேர மறுக்கிறார். சக்தி கவலைப்பட்டாலோ அல்லது பதற்றம் அடைந்தாலோ பெண் குரலில் பேசுவார். ஒரு அப்பாவிப் பெண்ணின் கொலைக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சக்தி தனது குறைகளை எப்படிக் களைந்து காவல்துறையில் இணைகிறார் என்பதுதான் படம்.

நடிகர்கள்

தயாரிப்பு

வைபவ் 2018இல் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் இயக்கத்தில் டாணா என்ற படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டார். "டாணாகாரன்" (காவல்துறை) என்ற தமிழ் சொல்லை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு :டாணா" என்று பெயரிடப்பட்டுள்ளது. நந்திதா, பாண்டியராஜன், யோகி பாபு, , ஹரீஷ் பேரடி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஹரீஷ் பேரடி எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். பாண்டியராஜன் வைபவ் கதாபாத்திரத்தின் தந்தையாக நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ராணிப்பேட்டையில் நடைபெற்றது . [2]

விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறிப்பாக 'நீ மயக்குர' என்ற பாடலுக்கு 40 வயலின்களைப் பயன்படுத்தினார். [3] அனைத்துப் பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார்.[4]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

  1. CR, Sharanya (20 September 2018). "Vaibhav and Nandita get set to make you laugh in 'Taana'". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vaibhav-and-nandita-get-set-to-make-you-laugh-in-taana/articleshow/65871092.cms. 
  2. "Vaibhav and Nandita get set to make you laugh in 'Taana' - Times of India". The Times of India.
  3. Subramanian, Anupama (2019-09-27). "Vishal's unusual music for Taana". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  4. "Taana Songs Download, Taana Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs - A World Of Music". Raaga.com (in டாகாலோக்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாணா_(திரைப்படம்)&oldid=3304072" இலிருந்து மீள்விக்கப்பட்டது