நார்மெர் கற்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 12:
}}
 
'''நார்மெர் தட்டு''' அல்லது '''நார்மெரின் கல் தட்டு''' (''Narmer Palette'' / ''Palette of Narmer''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|துவக்க கால அரச மரபு காலத்தின்]] [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச]] மன்னர் [[நார்மெர்]] நிறுவிய கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ [[கிமு]] 3200 – 3000 ஆகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை [[தொல்பொருள்]] என [[எகிப்தியவியல்]] அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கற்பலகையின் இருபுறத்தில் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுளான]] [[பசு தேவதை (பண்டைய எகிப்து)|பசு தேவதையின் சிற்பம்]], மன்னர் [[நார்மெர்|நார்மெரின் சிற்பம்]], [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்சத்தினரின்]] [[குலக்குறிச் சின்னம்|குலக்குறி சின்னமான]] தேள் மற்றும் விலங்குகள் சிற்பம் மற்றும் பண்டைய [[எகிப்திய மொழி]]யை விளக்கும் [[பட எழுத்து]] குறிப்புகள் கொண்டது. இக்கற்பலகையை 1897–1898-ஆம ஆண்டுகளில் [[அகழ்வாய்வு|அகழாய்வின்]] போது கண்டெடுக்கபட்டது. தற்போது நார்மெர் கற்பலகlllைகற்பலகை எகிப்து நாட்டின் தலைநகரான [[கெய்ரோ]]வில் உள்ள [[எகிப்திய அருங்காட்சியகம்|எகிப்திய அருங்காட்சியகத்தில்]] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.britannica.com/topic/Narmer-Palette Narmer Palette, ancient Egyptian sculpture]</ref><ref name="Shaw, Ian 2004">Shaw, Ian. ''Ancient Egypt: A Very Short Introduction.'' p.4. Oxford Press, 2004.</ref>
 
ஏறத்தாழ 5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் [[தொல்பொருள்]] ஆகும். [[மேல் எகிப்து|தெற்கு எகிப்தையும்]], [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தையும்]] ஒன்றிணைத்ததை நினைவு கூறும் வகையில் மன்னர் [[நார்மெர்]] இக்கற்பலகை சின்னத்தை நிறுவினார் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை வலியுறுத்தும் வகையில் இக்கற்பலகையில் [[மேல் எகிப்து|தெற்கு எகிப்திய]] மன்னர்கள் அணிந்த வெள்ளை நிற மகுடமும், [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்திய]] மன்னர்கள் அணிந்த சிவப்பு நிற நீண்ட மகுடமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்பலகையில் பண்டைய எகிப்திய கலைகள், [[பட எழுத்து]] முறைகள் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.<ref>Wilkinson, Toby A.H. <cite>Early Dynastic Egypt</cite>. p.6 Routledge, London. 1999. {{ISBN|0-203-20421-2}}</ref>நார்மெர் கற்பலகையை, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வரலாற்று ஆவணம் என [[எகிப்தியவியல்]] அறிஞரான பாப் பெரியர் குறிப்பிட்டுள்ளார்.<ref>Brier, Bob. ''Daily Life of the Ancient Egyptians'', A. Hoyt Hobbs 1999, p.202</ref>
 
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] தொல்லியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. குயுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 1897–1898-ஆண்டுகளில் [[நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்த [[எட்ஃபூ கோயில்]] வளாகத்தை [[அகழ்வாய்வு|அகழாய்வு]] செய்த போது நார்மெரின் கற்பலகையை கண்டுபிடித்தனர்.<ref>[http://www.ancient-egypt.org/kings/0101_narmer/palette.html The Ancient Egypt Site – The Narmer Palette]{{webarchive|url=https://web.archive.org/web/20060615113238/http://www.ancient-egypt.org/kings/0101_narmer/palette.html |date=2006-06-15 }} accessed September 19, 2007</ref> what are these are plugging language thinks??
 
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/நார்மெர்_கற்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது