இருக்கு வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
No edit summary
அடையாளங்கள்: Reverted blanking கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''இருக்கு வேதம்''' ([[சமசுகிருதம்]]: {{Unicode|ऋग्वेद}} - ''ரிக்வேத'') [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. [[சமசுகிருதம்|சமசுகிருத மொழியில்]] அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 - 1100¹ க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
இருக்கு வேதம் என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்கு வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
 
இருக்கு வேதம், பல ருக்குகள் அடங்கியுள்ளதால் இதற்கு ருக்வேதம் என காரணப்பெயர் ஆயிற்று.
ருக்வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 1028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 ருக்குகளாக(மந்திரங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. ’ருக்’ என்பதற்கு எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ, அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ, அதற்கு ’ருக்’ என்று பெயர். இந்த 1028 சூக்தங்களில் பல [[வேள்வி|வேள்விக்]] கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை.
 
இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சூக்தங்கள், தங்களுக்கு நல்ல உணவு,
நல்ல பானம் ([[சோமபானம்]]), நல்ல மழை,
தானிய விளைச்சல், தானம்,(தட்சனை)
அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள்,
நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக [[ஆரியர்|ஆரியர்களுக்கும்]], அவர்களது எதிரிகளான ''தாசர்'' எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் [[கிராதர்கள்]] என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
[[File:Map of Vedic India.png|thumb|350px|ரிக்வேத கால நிலவியல் வரைபடம்]]
 
==உள்ளடக்கம்==
===கடவுள்கள்===
"https://ta.wikipedia.org/wiki/இருக்கு_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது