மாதம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

408 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
 
'''மாதம்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Madambakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்த [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால [[தேனுபுரீசுவரர் கோயில், மாடம்பாக்கம்|தேனுபுரீசுவரர் கோயில்]] அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
==தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்==
{{முதன்மை|தாம்பரம் மாநகராட்சி}}
3 நவம்பர் 2021 அன்று இந்த பேரூராட்சியானது [[தாம்பரம் மாநகராட்சி]]யுடன் இணைக்கப்பட்டது.
 
==அமைவிடம்==
மாதம்பாக்கம் பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 11 கிமீ தொலைவில் உள்ள [[தாம்பரம்|தாம்பரத்தில்]] உள்ளது. இதன் கிழக்கில் [[பள்ளிக்கரணை]] 11 கிமீ; மேற்கில் [[சேலையூர்]] 3 கிமீ; வடக்கில் [[செம்பாக்கம்]] [[நகராட்சி]] 2 கிமீ மற்றும் தெற்கில் [[அகரம் ஊராட்சி]] 2 கிமீ தொலைவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3310860" இருந்து மீள்விக்கப்பட்டது