அனுராதபுரம் குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
'''அனுராதபுரம் குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள்''' என்பது, [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] பழங்காலச் சிவாலய அழிபாடுகளிடையே கண்டெடுக்கப்பட்ட இரண்டு தமிழ்க் [[கல்வெட்டு]]க்களைக் குறிக்கும். 1983ல் இடம்பெற்ற [[அகழ்வாய்வு]]களின்போது கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள் இரண்டும் ஒரே கல்லில் எழுதப்பட்டுள்ளன. இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வெட்டியலாலர்களில் ஒருவரான கிருஷ்ண சாஸ்திரி, இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் வேண்டுகோளின்படி இக்கல்வெட்டுக்களை வாசித்தார். இது தென்னிந்திய சாசனங்கள் என்னும் தொகுப்பின் நான்காம் தொகுதியில் படங்களுடன் வெளியிடப்பட்டது.<ref>பத்மநாதன், சி., 2006. பக். 48.</ref>
 
இக்கல்வெட்டுக்கள் இரண்டும் ஒரேமாதிரியானவை. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுவன. இத்தானங்கள் ஒவ்வொன்றும் 30 ஈழக்காசுகள் பெறுமதியானவை என்பதுடன் "முதல் கெடாமல்" ஒரு திருவமுது வழங்குவதற்கும், ஒரு நந்தா விளக்கு ஏற்றுவதற்குமானவை. இத்தானங்களைக் கோயிலின் சார்பில் பெற்றுக்கொண்ட குமாரகணத்துப் பேரூரார் என்னும் குழுவினர் சார்பில் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்குமாரகணத்துப் பேரூரார் என்பவர்கள் இக்கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படுகிறது. இவர்கள் குமாரகணம் எனப்படும் வணிகர் குழுவினரால் நிறுவப்பட்ட பேரூர் ஒன்றைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அத்தகைய பேரூர் அனுராதப்புரப் பகுதியில் இருந்திருக்கலாம் எனப் [[சி. பத்மநாதன்|பத்மநாதன்]] கருதுகிறார்.<ref>பத்மநாதன், சி., 2006. பக். 51.</ref>
வரிசை 15:
* [[இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]