பளமோட்டைக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 2:
 
==காலம்==
இக்கல்வெட்டின் அரசன் பெயரும் ஆட்சியாண்டும் குறிக்கப்பட்ட பகுதி தெளிவாக இல்லை. ஆனால், இதனை வாசித்த பரணவிதான, இது சயவாகு என்னும் அரசனின் 8வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது எனத் தற்காலிகமான முடிவுக்கு வந்தார். எனினும், பரணவிதானவின் வேண்டுகோளின்படி இதை வாசித்த [[கே. வி. சுப்பிரமணிய ஐயர்]], இந்தக் கல்வெட்டு விசயவாகு தேவரின் 42ம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது என்று கருத்து வெளியிட்டார். பரணவிதானவும் பின்னர் இதை ஏற்றுக்கொண்டார். இந்த மன்னன் [[முதலாம் விஜயபாகு|முதலாம் விசயவாகு]] என அடையாளம் காணப்பட்டுள்ளான்.<ref name="பத்மநாதன், சி., 2006. பக். 133">பத்மநாதன், சி., 2006. பக். 133.</ref>
 
==உள்ளடக்கம்==
இந்தக் கல்வெட்டு, நங்கைசானி என்னும் பிராமணப் பெண்ணொருத்தி காலஞ்சென்ற தனது கணவனின் பெயரால் கந்தளாய் விசயராச சதுர்வேதி மங்கலத்திலிருந்த விசயராச ஈச்சுரம் என்ற சிவன் கோயிலுக்குக் கொடுத்த தானத்தின் அடிப்படையிலான அறக்கட்டளை தொடர்பானது. இப்பெண் இதற்காகக் குறிப்பிடத்தக்க அளவில் பொன்னைத் தானமாக வழங்கியுள்ளாள்.<ref> name="பத்மநாதன், சி., 2006. பக். 133.<"/ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 16:
* [[இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பளமோட்டைக்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது