யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு''' என அறியப்படும் கல்வெட்டானது, [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணத்தின்]] ஐரோப்பியர் நகரப் பகுதியின் பிரதான வீதியில் இருந்த உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் கீழ்ப் பகுதியில் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு [[கல்வெட்டு]] ஆகும். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டு கோட்டை அரசனான [[ஆறாம் பராக்கிரமபாகு]]வின் பெயரால் பொறிக்கப்பட்டது. இது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
 
1968 இல் தொல்பொருட் திணைக்களத்தினர் இதன் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். இந்த மைப்பிரதி போதிய தெளிவின்றி இருந்ததால், 1969 இல் பேராசிரியர் [[கா. இந்திரபாலா]] இன்னொரு மைப்பிரதியை எடுத்து இக்கல்வெட்டை வாசித்துப் பதிப்பித்தார்.<ref name="இந்திரபாலா, கா., 1989. பக். 45">இந்திரபாலா, கா., 1989. பக். 45.</ref>
 
== கல்வெட்டுச் செய்தி ==
தெரியக் கூடிய பக்கத்தில் இருந்த 25 வரிகளில் 10 வரிகள் வாசிக்க முடியாதபடி அழிந்துவிட்டன. வாசிக்கக் கூடியதாக இருந்த 15 வரிகளில் காணப்பட்டவை ஒரு அரசனின் பெயர் விபரங்கள் மட்டுமே. இந்த விபரங்களை வைத்து இக்கல்வெட்டு ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரால் வெட்டப்பட்டது என இந்திரபாலா கூறுகின்றார். இப்பகுதியில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலம் குறித்த தகவல் இருந்த போதிலும் அது தெளிவாக இருக்கவில்லை. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காரணம் குறித்த விபரங்கள் வேறு கல்லிலோ அல்லது இதே கல்லின் மற்றப் பக்கங்களிலோ இருந்திருக்கக்கூடும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இக்கல்லின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக்கூடிய நிலையில் இருந்தது. இதன் மற்றப் பக்கங்களிலும் எழுத்துக்கள் இருக்கக்கூடும் என்பது இந்திரபாலாவின் கருத்தாக இருந்தது.<ref> name="இந்திரபாலா, கா., 1989. பக். 45.<"/ref>
 
== வரலாற்றுப் பின்னணி ==
வரிசை 24:
 
[[பகுப்பு:இலங்கை வரலாற்று மூலங்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத் தொல்லியல்]]