திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நூலாசிரியர்: சொற்சுவைக்காகச் சாெற்களை இடம்மாற்றுதல்
வரிசை 86:
வள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால் அதனைப் பல விதங்களில் பொருட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாகக் குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.{{sfn|Zvelebil|1973|p=156}} வள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர்க் [[கிறிஸ்தவம்|கிறித்தவ சமயமும்]] குறளைத் தனது வழித் தோன்றலாகக் கருதுவதைக் காணமுடிகிறது.{{sfn|Zvelebil|1973|p=156}} எடுத்துக்காட்டாக, 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ போதகரான [[ஜி. யு. போப்]] தனது நூலில் வள்ளுவர் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் [[அலெக்சாந்திரியா|அலெக்சாந்திரியாவைச்]] சேர்ந்த கிறித்தவ போதகரான [[பான்டேனசு|பான்டேனசுடன்]] தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்சாந்திரிய கிறித்தவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு [[இயேசு|இயேசுநாதரின்]] [[மலைச் சொற்பொழிவு|மலைச் சொற்பொழிவின்]] சாரமாய்த் தனது "அழகிய திருக்குறளை" யாத்தாரென்றும் கூறுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=125}} போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அறிஞர்களால் விலக்கப்பட்டுவிட்டன.{{sfn|Manavalan, 2009|p=42}} வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறித்தவ அறநெறிகளல்ல என்று சுவெலபில் நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|D|d|none}}{{Ref label|E|e|none}} "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாகச் "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறித்தவ போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினைக் கிறித்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.{{sfn|Schweitzer, 2013|pp=200–205 (cited in ''Shakti'', Volume 5, 1968, p. 29)}}
 
வள்ளுவர் [[சமணம்|சமண சமயத்தையோ]] [[இந்து சமயம்|இந்து சமயத்தையோ]] சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.{{sfn|Kamil Zvelebil|1973|pp=156–171}}{{sfn|Mohan Lal|1992|pp=4333–4334}}{{sfn|Kaushik Roy|2012|pp=152–154, இடம்: 144–154 (அத்தியாயம்: Hinduism and the Ethics of Warfare in South Asia)}}{{sfn|Swamiji Iraianban|1997|p=13}}{{sfn|Sundaram, 1990|pp=xiii–xvii, குறள் 1103-இக்கான பின்குறிப்பு விளக்கம்}}{{sfn|Johnson, 2009}} இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|A|a|none}} வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819-ஆம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் [[பிரான்சிசு வைட் எல்லிசு|எல்லீசன் (பிரான்சிசு வயிட் எல்லீசு)]] குறிப்பிடுகிறார்.{{sfn|Blackburn|2000|pp=463–464}} வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் சுவெலபில்,{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|A|a|none}} கடவுளுக்கு வள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார்.{{sfn|Zvelebil|1973|p=155}} வள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்ற "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவே" இருந்திருக்கக்கூடும் என்பது சுவெலபில்லின் கருத்து.{{sfn|Zvelebil|1973|p=155}} எனினும் பண்டைய [[திகம்பரர்|திகம்பர]] சமண நூல்களிலோ [[சுவேதம்பரர்கள்|சுவேதம்பர]] சமண நூல்களிலோ வள்ளுவரைப் பற்றியோ குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. குறைந்தபட்சம் 8-ஆம் நூற்றாண்டுவாக்கில் [[பக்தி இலக்கியம்|இந்து சமய பக்தி இலக்கியங்களில்]] வள்ளுவரும் குறளும் குறிப்பிடப்படுகையில் சமண நூல்களில் வள்ளுவர் குறிப்பிடப்படுவதுமுதன்முதலாகக் முதன்முதலாககுறிப்பிடப்படுவது 16-ஆம் நூற்றாண்டில்தான்.{{sfn|Zvelebil|1974|p=119, பக்க அடிக்குறிப்பு 10 உடன்}}
 
{{Quote box|bgcolor = #E0E6F8|align=left|quote=<poem>
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது