திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎கோயில்களும் நினைவிடங்களும்: படத்தைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎கோயில்களும் நினைவிடங்களும்: படத்திற்கு கட்டம் வரைதல்
வரிசை 417:
குறளும் அதன் ஆசிரியரும் வழிவழியாக மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர். பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவ சமூகத்தினர் [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] உள்ள [[மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்|ஏகாம்பரேசுவரர்–காமாட்சி ஆலய]] வளாகத்தில் திருவள்ளுவருக்குக் கோயில் ஒன்றை நிறுவினர்.{{sfn|Waghorne, 2004|pp=120–125}} இங்குள்ள ஒரு [[இலுப்பை மரம்|இலுப்பை மரத்தடியில்]] தான் வள்ளுவர் பிறந்தார் எனவும் அதே இடத்தில் தான் வள்ளுவரது சீடரான [[ஏலேலசிங்கன்]] முதன்முதலில் அவருக்கு ஒரு வழிபாட்டுத் தலத்தை கட்டியதாகவும் நம்பப்படுகிறது. இம்மரத்திற்கடியில் குறளின் ஓலைச்சுவடியினை கையில் ஏந்திவாறு யோக நிலையில் வீற்றிருக்கும் வள்ளுவரது சிலை உள்ளது.{{sfn|Waghorne, 2004|pp=120–125}} அவ்விலுப்பை மரத்தையே ஸ்தல விருட்சமாகக் கொண்ட இக்கோயிலின் சன்னிதியில் வள்ளுவரின் சிலையோடு இந்துக் கடவுளான காமாட்சியம்மனின் உருவோடு ஒத்த வடிவில் அமைக்கப்பட்ட அவரது மனைவி [[வாசுகி (திருவள்ளுவரின் மனைவி)|வாசுகியின்]] சிலையும் உள்ளது. பண்டைய புராண நிகழ்வுகளோடு அக்கால வாழ்க்கை முறைகளையும் சித்தரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயிலின் கோபுரத்தில் வள்ளுவர் வாசுகிக்கு திருக்குறளை ஓதும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.{{sfn|Waghorne, 2004|pp=120–125}} இக்கோயில் 1970-களில் பெரிய அளவில் புனரமைக்கப்பட்டது.{{sfn|Chakravarthy and Ramachandran, 2009}}
 
[[File:ValluvarShrineAtMylaporeTemple.jpg|left|thumb|210px|மயிலாப்பூரில் அமைந்துள்ள கோயிலில் உள்ள வள்ளுவர் சந்நிதி]]
வள்ளுவருக்கு மேலும் பல கோயில்கள் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை தமிழகத்தில் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்திலுள்ள]] [[திருச்சுழி]]{{sfn|Kannan, ''The New Indian Express'', 11 March 2013}} [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள]] [[பெரிய கலையம்புத்தூர்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள]] [[தொண்டி]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள]] [[வில்வாரணி]] ஆகிய ஊர்களும் [[கேரளா|கேரள மாநிலத்தில்]] [[எர்ணாகுளம் மாவட்டம்|எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள]] [[கஞ்சூர்|கஞ்சூர் தட்டன்பாடி]], [[இடுக்கி மாவட்டம்|இடுக்கி மாவட்டத்திலுள்ள]] [[சேனாபதி]] ஆகிய ஊர்களும் ஆகும்.{{sfn|Vedanayagam, 2017|p=113}} இவற்றில் மயிலாப்பூர், திருச்சுழி உள்ளிட்ட இடங்களில் வள்ளுவர் சைவ மதத்தினரால் 64-ஆவது [[நாயன்மார்|நாயன்மாராகப்]] போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.{{sfn|Kannan, ''The New Indian Express'', 11 March 2013}}
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது