திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎குறிப்புகள்: எழுத்துத் திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மொழிபெயர்ப்புகள்: சிவப்பிணைப்பைச் சரிசெய்தல்
வரிசை 342:
ஆங்கிலத்தில் குறள் முதன்முறையாக 1794-ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரியான [[என். இ. கின்டர்ஸ்லி]] என்பவராலும் 1812-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிகாரியான [[எல்லீசன்]] என்பவராலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவை இரண்டுமே பகுதி மொழிபெயர்ப்புகள் மட்டுமே. கின்டர்ஸ்லி குறளின் ஒரு பகுதியை மட்டும் மொழிபெயர்க்கையில் எல்லீசன் 69 குறட்பாக்களை செய்யுள் நடையிலும் 51 குறட்பாக்களை உரைநடையிலும் என மொத்தம் 120 குறட்பாக்களை மொழிபெயர்த்தார்.{{sfn|Blackburn|2006|pp=92–95}}{{sfn|Zvelebil|1992}} [[எட்வார்டு ஜெவிட் ராபின்சன்]] என்ற மதபோதகர் 1873-ஆம் ஆண்டில் பதிப்பித்த "தி டமில் விஸ்டம்" என்ற நூலிலும் அதன் பின்னர் 1885-ஆம் ஆண்டில் விரிவாக்கிப் பதிப்பித்த "தி டேல்ஸ் அன்ட் போயம்ஸ் ஆஃப் செளத் இன்டியா" என்ற நூலிலும் குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழிபெயர்த்திருந்தார்.{{sfn|Manavalan, 2010|pp=xxi–xxii}}{{sfn|Robinson, 1873|p=4}} மற்றுமொரு மதபோதகரான [[வில்லியம் ஹென்றி ட்ரூ]] 1840-ல் அறத்துப்பாலையும் 1852-ல் பொருட்பாலின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நூலில் தனது உரைநடை மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் மூலத்தையும் பரிமேலழகரின் உரையையும் [[இராமானுஜக் கவிராயர்|இராமானுஜக் கவிராயரின்]] விளக்கவுரையையும் பதிப்பித்தார். ஆனால் பொருட்பாலில் காணப்படும் குறளின் 63-ஆவது அதிகாரம் வரை மட்டுமே ட்ரூ மொழிபெயர்த்திருந்தார். பெச்கியைப் போலவே ட்ரூவும் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்காது இருந்துவிட்டார்.{{sfn|Ramasamy|2001|p=31}} இவற்றை 1885-ஆம் ஆண்டு [[ஜான் லாசரஸ்]] என்ற மதபோதகர் மெருகேற்றி கூடவே ட்ரூ மொழிபெயர்க்காது விட்டிருந்த பொருட்பாலின் மீதமிருந்த அதிகாரங்களையும் இன்பத்துப்பால் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே குறள் முழுவதற்குமான முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக உருவானது.{{sfn|Ramasamy|2001|p=31}} 1886-ஆம் ஆண்டு [[ஜி. யு. போப்|ஜார்ஜ் யுக்ளோ போப்]] என்ற மதபோதகர் செய்த செய்யுள் நடை மொழிபெயர்ப்பு குறள் முழுவதற்கும் ஒரே நபரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக மாறியது. இதுவே குறளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நூலாகவும் அமைந்தது.{{sfn|Ramasamy|2001|p=32}}
 
இருபதாம் நூற்றாண்டில் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.{{sfn|Zvelebil|1975|p=127 with footnote 99}} இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் குறளுக்குச் சுமார் 24 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இவற்றில் சில ஆங்கிலேய அறிஞர்களாலும் மற்றவை இந்திய அறிஞர்களாலும் செய்யப்பட்டவையாகும். குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திய அறிஞர்களில் [[வ. வே. சு. ஐயர்]], கே. எம். பாலசுப்பிரமணியம், [[சுத்தானந்த பாரதியார்]], ஆ. சக்கிரவர்த்தி, [[மு. சி. பூரணலிங்கம் பிள்ளை]], [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|சி. இராஜகோபாலசாரி]], பி. எஸ். சுந்தரம், [[வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்]], ஜி. வான்மீகநாதன், [[கஸ்தூரி சீனிவாசன்]], எஸ். என். ஸ்ரீராமதேசிகன், [[கே. ஆர். சீனிவாச ஐயங்கார்]] ஆகியோர் முக்கியமானவர்களாவர்.{{sfn|Ramasamy|2001|p=36}} கிட்டு சிரோமனி என்பவரால் குறள் [[நரிக்குறவர்|நரிக்குறவர்களின்]] மொழியான [[வாக்ரி பூலி மொழி|வாக்ரி போலி]] மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.{{sfn|''The Hindu'', 25 March 2013}} 2020-ஆம் ஆண்டு முடிய குறள் 42 உலக மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை இதுவரை 100-ஐத் தாண்டியுள்ளது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை [[தரமணி]]யில் இயங்கிவரும் [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது.{{sfn|''Dinamalar'', 20 October 2021}}
 
===மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் திரிபுகளும்===
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது