தெளிப்பு நீர்ப்பாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{பகுப்பில்லாதவை}} {{Mergeto|மழைத்தூவான்}} '''தெளிப்பு நீர் பாசனம்''' தெளிப்பு நீர் பாசனம் முறை என்பது நவீன பாசன முறைகளில் ஒரு தொழில் நுட்பமாகும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

06:37, 27 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

தெளிப்பு நீர் பாசனம்

தெளிப்பு நீர் பாசனம் முறை என்பது நவீன பாசன முறைகளில் ஒரு தொழில் நுட்பமாகும்.இம்முறையில் HDPE என்னும் அதிக அடர்த்தி கொண்ட பாலியெத்திலீன் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கபட்ட குழாய்கள்,GI எனப்படும் இரும்பு குழாய்கள் மற்றும் தெளிப்பான்கள் கொண்டு  பரவலாக தாவரத்தின் மேல் நீர் பாசனம் செய்யப்படுகிறது.

தெளிப்பு நீர் பாசனம் செய்ய பயன்படும் உபகரணங்கள்;


பம்ப்செட்(Pumpset);

நீர் நிலைகளில் உள்ள நீரை குழாய்கள் வழியாக தாவரங்களுக்கு குறிப்பிட்ட திறன் கொண்ட மின் மோட்டர் (அ) எண்ணெய் மோட்டர் உதவியுடன் தேவையான அளவு வேகத்தில் கொண்டு நீரை பாய்ச்சுகிறது


மெயின் பைப்புகள் (Main pipe)&சப் மெயின் பைப்புகள்(Sub Main pipes) ;

  ஹை டென்சிட்டி HDPE என்னும் அதிக அடர்த்தி கொண்ட பாலியெத்திலீன்

கொண்டு பாசனத்திற்கு என்றே பிரத்யேகமாக வெவ்வேறு அளவுகளில்    2.5 KG/cm2  அழுத்தம் தங்குமாறு (63mm-90mm )மிகச்சிறந்த தரத்துடன் தயாரிக்கிப்படுகிறது.இதனுடன் coupler இணைந்து வருவதால் குழாய்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது அகற்றுவது மிக எளிது.


ஷாடல் (Saddle);

மெயின் குழாய்களில் இருந்து ரைசர் குழாய்களில் இணைக்க உதவுகிறது. HDPE குழாய்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து,ரைசர் பைப்புகளையும் இணைக்கிறது. ரைசர் பைப்புகளை இணைத்து நிலத்தில் நிற்க செய்ய  இரும்பு க்ளாம்பு ஒன்று கொண்டிருக்கும்.


HDPE இணைப்பான்கள் ;

குழாய்களை ஒன்றோடு ஒன்று இணைக்க பயன்படும் இணைப்பான்கள் HDPE எனப்படும் அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலீன் மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. HDPE Bend, HDPE Tee, HDPE PCN, HDPE End cap, போன்றவைகளை தேவைக்கேற்ப உபயோகித்து கொள்ள வேண்டும்.

ரைசர் பைப் (RAISER PIPE)

ரைசர் பைப்  என்பது இரும்பு உலோகத்தால் தயாரிக்கப்படும் இரும்பு குழாய்களாகும். இது நிலப்பகுதியில் இருந்து இரண்டு மூன்று அடி  தெளிப்பான்களை உயர்த்தி நிற்க வைத்து செயல்பட உதவுகிறது.

நீர் தெளிப்பான் (SPRINKLER)

;

தோட்டப் புல் பரப்பு மற்றும் தாவரங்களுக்கு நீர் தெளிக்க, தனது துளைகள் வழியாக அனைத்து திசைகளிலும் சிறு துளிகளாக நீரை வெளியேற்றும்கருவி நீர் தெளிப்பான் ஆகும்.  

பராமரித்தல்;


குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள் மற்றும் தெளிப்பான் தலைகள் பராமரிப்பு தொடர்பான பொதுவான கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


1. குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்

குழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு கிட்டத்தட்ட பராமரிப்பு தேவையில்லை, ஆனால் பின்வரும் நடைமுறைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

(அ) ​​ரப்பர் சீல் வளையம் பொருந்திய கப்ளரில் உள்ள அழுக்கு அல்லது மணலை அவ்வப்போது சுத்தம் செய்யவும். அழுக்கு அல்லது மணல் குவிவது ரப்பர் சீல் வளையத்தின் செயல்திறனை பாதிக்கும்.

(ஆ) அனைத்து நட் மற்றும் போல்ட்களையும் இறுக்கமாக வைத்திருங்கள்.

(இ) புதிய ஈரமான கான்கிரீட் அல்லது உரக் குவியல்களில் குழாய்களைப் போடாதீர்கள். குழாயில் உர சாக்குகளை வைக்கக் கூடாது.


2. தெளிப்பான்கள்

(அ) ​​தெளிப்பான்களை நகர்த்தும்போது, ​​தெளிப்பான்கள் சேதமடையாமல் அல்லது மண்ணுக்குள் தள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும்.

(ஆ) தெளிப்பான்களுக்கு எண்ணெய், கிரீஸ் அல்லது லூப்ரிகண்ட் ஆகியவற்றைப்  பயன்படுத்துவதால்  துரு பிடித்தலை  தடுக்கலாம்.

(இ) தெளிப்பான்கள் பொதுவாக சீல் செய்யப்பட்ட தாங்கி மற்றும் தாங்கியின் அடிப்பகுதியில் ரப்பார் வாசர்கள்  இருக்கும். ஒரு பருவத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாசர்கள் தேய்ந்து இருக்கிறதா என்று சோதிக்கவும், இது தண்ணீர் மணலாக இருக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானது. வாசர்கள் தேய்ந்திருந்தால் மாற்றவும்.

(ஈ) பல பருவங்களின் செயல்பாட்டிற்குப் பிறகு, ஸ்விங் ஆர்ம் ஸ்பிரிங் இறுக்கப்பட வேண்டியிருக்கும். மேலே உள்ள ஸ்பிரிங் முனையை வெளியே இழுத்து மீண்டும் பிணைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. . பொதுவாக, பருவ  முடிவில் அனைத்து உபகரணங்களையும் சரிபார்த்து, ஏதேனும் பழுது மற்றும் மாற்றங்களைச் செய்து, உதிரி பாகங்களை உடனடியாக AGS Irrigation -ல் ஆர்டர் செய்யுங்கள், இதனால் அடுத்த பருவம் தொடங்குவதற்கு உபகரணங்கள் சரியான நிலையில் இருக்கும்.


பயன்கள்

·      50 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது.

·      வேலையாட்களின் தேவை குறைவு.

·      மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

·      மற்ற பாசன முறைகளில் அதிக அளவு மண்ணில் உள்ள கீழ் அடுக்குகளுக்கு சென்று விடுகிறது.

·      மற்ற பாசன முறைகளில் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அடிமண் அடுக்குகளுக்கு நீர் மூலம் சென்றுவிடுகிறது. மேலும் மேல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண் அரிமாணம் மூலம் அடித்து செல்லப்படுகிறது. ஆனால் மழைத்தூவான் மூலம் நாம் பாசனம் செய்தால் இவை தவிர்க்கப்படுகின்றது.

·      தெளிப்பான்கள் மூலம் நாம் நீரை மழைபோல பாசனம் செய்வதால் காற்று மண்ணுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

·      நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கிறது. நோய் காரணிகள் மற்றும் சிறு பூச்சிகள் நீரில் அடித்து செல்லப்படுகிறது.

·      தெளிப்பான்கள் மூலம் பாசனம் செய்கின்ற நீரில் நாம் ஊட்டச்சத்துக்களை கரைத்து உரப்பாசனம் செய்யலாம்.

·      தெளிப்பான்கள் மூலம் பூச்சிக்கொல்லி மற்றும் புஞ்சைக் கொல்லி மருந்துகளையும் பாசன நீருடன் கலந்து தேவையான போது தெளிக்கலாம். இதன் மூலம் வேலையாள் செலவு குறைவதுடன் நிலத்தில் உள்ள எல்லா இடத்திற்கும் ஈடுபொருட்களை இடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளிப்பு_நீர்ப்பாசனம்&oldid=3324472" இலிருந்து மீள்விக்கப்பட்டது