திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மொழிபெயர்ப்புகள்: சிவப்பிணைப்பைச் சரிசெய்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பிழைத்திருத்தம்
வரிசை 21:
| genre = [[செய்யுள்]]
| set_in =
| published = அனேகமாக [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்தில்]] [[எழுத்தோலை]] (கி.பி. 5-ஆம்ம் நூற்றாண்டுக்கு முன்னர்)
| publisher =
| publisher2 =
வரிசை 44:
{{சங்க இலக்கியங்கள்}}
 
'''திருக்குறள்''', சுருக்கமாகக் '''குறள்''' ([[ஆங்கிலம்]]: ''Tirukkuṟaḷ''), ஒரு தொல் [[தமிழ்|தமிழ் மொழி]] [[இலக்கியம்|இலக்கியமாகும்]]. [[சங்க இலக்கியம்|சங்க இலக்கிய]] வகைப்பாட்டில் [[பதினெண்கீழ்க்கணக்கு]] எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் [[குறள் வெண்பா]] என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது.{{sfn|Pillai, 1994}} இந்நூல் முறையே [[அறம்]], [[பொருள்]], [[காமம்]] (அல்லது [[இன்பம்]]) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.{{sfn|Sundaram|1987|pp=7–16}}{{sfn|Blackburn|2000|pp=449–482}}{{sfn|Zvelebil|1973|pp=157–158}} இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்குப் பெயர் பெற்றது.{{sfn|Lal, 1992|pp=4333–4334, 4341}}{{sfn|Holmström, Krishnaswamy, and Srilata, 2009|p=5}} இதனை இயற்றியவர் [[திருவள்ளுவர்]] என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் கி.மு.300 முதல் கி.பி.5-ஆம்ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியயமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் கி.பி.450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.{{sfn|Zvelebil|1975|p=124}}
 
"உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Cutler, 1992}} [[அகிம்சை]]யை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல்,{{sfn|Krishnamoorthy, 2004|pp=206–208}} தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக [[அகிம்சை|இன்னா செய்யாமை]] மற்றும் [[நனிசைவம்|தார்மீக சைவத்தை]] வலியுறுத்துகிறது.{{sfn|Das|1997|pp=11–12}}{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{sfn|Sundaram, 1990|p=13}}{{sfn|Manavalan, 2009|pp=127–129}}{{Ref label|A|a|none}} இவற்றோடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக்{{sfn|Zvelebil|1973|pp=160–163}} கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது.{{sfn|Hikosaka|Samuel|1990|p=200}}{{sfn|Ananthanathan, 1994|pp=151–154}}{{sfn|Kaushik Roy|2012|pp=151–154}} மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும்.{{sfn|Zvelebil|1973|pp=160–163}}{{sfn|Lal, 1992|pp=4333–4334}} சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குறைகளையும் குற்றங்களையும் மறுத்துரைத்து பண்பாட்டு முரண்களைத் திருத்திப் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றித் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.{{sfn|Thamizhannal, 2004|p=146}}
 
இயற்றப்பட்ட காலத்திலிருந்து குறள் அற, சமூக, அரசியல், பொருளாதார, மத, தத்துவ மற்றும் ஆன்மீகத் துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.{{sfn|Sundaramurthi, 2000|p=624}} இவர்களில் [[இளங்கோவடிகள்]], [[கம்பர்]], [[லியோ டால்ஸ்டாய்]], [[மகாத்மா காந்தி]], [[ஆல்பர்ட் சுவைட்சர்]], [[வீரமாமுனிவர்]], [[காரல் கிரவுல்]], [[ஜி. யு. போப்]], [[அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி]] மற்றும் [[யூசி|யூ ஹ்சி]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழ் இலக்கியங்களில் மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்படக்கூடிய நூலாகவும் திருக்குறள் திகழ்கிறது.{{sfn|Maharajan, 2017|p=19}} நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812-ஆம்ம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=29}} திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பாகவும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.{{sfn|Manavalan, 2009|p=24}} அனைத்து நூல்களிலும் காணப்படும் சிறந்த அறங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக குறளின் ஆசிரியர் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.{{Sfn | Chellammal, 2015 | p = 119}} காலவெள்ளத்தில் தொன்றுதொட்டுத் தமிழக மக்களாலும் அரசாலும் பயபக்தியுடன் போற்றிப் பாதுகாத்து வரப்படும் நூலாகக் குறள் திகழ்கிறது.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}
 
== பெயர்க்காரணம் ==
வரிசை 64:
திருக்குறளின் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. [[சோமசுந்தர பாரதியார்]], [[மா. இராசமாணிக்கனார்|மா. இராஜமாணிக்கனார்]] முதலானோர் இக்கருத்தை நிறுவிக் குறளின் காலம் கி.மு. 300 என்று உரைக்கின்றனர். வரலாற்று அறிஞர் [[கே.கே.பிள்ளை]] குறளின் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=124}} செக் நாட்டு தமிழ் ஆய்வாளர் [[கமில் சுவெலபில்]] இவற்றை ஏற்க மறுக்கிறார். அவரது கணிப்பின்படி வள்ளுவரது காலம் சங்கப் புலவர்களுக்குப் பின்னரும் பக்திப் புலவர்களுக்கு முன்னருமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். நூலின் நடை, இலக்கணம், சொல்லமைப்பு போன்றவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இல்லாதிருப்பதும், வள்ளுவரது சொல்லாடலில் காணப்படும் வடமொழிச் சொற்களின் பயன்பாடும், தம் காலத்திற்கு முந்தைய நூல்களிலிருந்து வள்ளுவர் எடுத்தாண்டமையுமே சுவெலபில் தனது கணிப்பிற்குச் சுட்டும் காரணங்களாகும்.{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Zvelebil|1975|p=124 பக்க அடிக்குறிப்புகளுடன்}}
 
1959-ஆம்ம் ஆண்டு [[எஸ். வையாபுரிப்பிள்ளை]] தனது ஆய்வின் முடிவாகத் திருக்குறள் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தோ அதற்குப் பிற்பட்டதோ ஆகும் என்று குறிப்பிட்டார். குறளில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதையும், நூலில் வள்ளுவர் சுட்டும் வடமொழி நூல்கள் கி.பி. முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்களாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதற்கு முன்புவரை இல்லாத இலக்கணங்களைக் குறளில் வள்ளுவர் பயன்படுத்தியிருப்பதையும் வையாபுரிப்பிள்ளை தனதிந்தக் கருத்துக்குக் ஆதாரமாகக் காட்டுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=124 பக்க அடிக்குறிப்புகளுடன்}}{{Ref label|B|b|none}} இதன் ஒரு பகுதியாகக் குறளில் காணப்படும் 137 வடமொழிச் சொற்களின் பட்டியலொன்றையும் அவர் பதிப்பித்தார்.{{sfn|Zvelebil|1973|pp=170–171}} பின்னர் வந்த [[தாமசு பறோ|தாமஸ் பரோ]], [[மரே எமெனோ|முர்ரே பார்ன்ஸன் எமீனோ]] உள்ளிட்ட அறிஞர்கள் இப்பட்டியலிலுள்ள சொற்களில் 35 வடமொழிச் சொற்களல்ல என்று கருதினர். இவற்றில் மேலும் சில சொற்களின் தோற்ற வரலாறு சரியாகத் தெரியவில்லை என்றும் வரவிருக்கும் ஆய்வுமுடிவுகள் இவற்றில் சில தமிழ்ச் சொற்கள் என்றே நிறுவ வாய்ப்புள்ளது என்றும் சுவெலபில் கருதுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=170–171}} ஆயினும் மீதமுள்ள 102 வடமொழிச் சொற்களை ஒதுக்கிவிட முடியாதென்றும் வள்ளுவர் கூறும் கருத்துகளில் சில ஐயப்பாடின்றி [[அர்த்தசாஸ்திரம்]], [[மனுதரும சாத்திரம்|மனுதர்ம சாஸ்திரம்]] முதலிய வடமொழி இலக்கியங்களிலிருந்து வந்தவையே என்றும் சுவெலபில் கூறுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=170–171}}
 
குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த நூல் அன்று என்றும் அதன் காலம் கி.பி. 450 முதல் கி.பி. 500 வரை இருக்கலாம் என்றும் 1974-இல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய தனது ஆய்வில் சுவெலபில் நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=124}} நூலில் மொழியமைப்பையும், அதில் வரும் முந்தைய நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், வடமொழி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சில கருத்துகளையும் தனது கூற்றுக்குச் சான்றாக அவர் காட்டுகிறார்.{{sfn|Zvelebil|1973|p=156}} குறளில் வள்ளுவர் சங்கநூல்களில் காணப்படாத பல புதிய இலக்கண நடைகளைக் படைத்துள்ளார் என்று குறிப்பிடும் சுவெலபில், குறள் இதர பண்டைய தமிழ் நூல்களைவிட அதிகமாக வடமொழிச் சொற்பயன்பாட்டைக் கையாள்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.{{sfn|Zvelebil|1973|p=169}} குறளின் தத்துவங்கள் பண்டைய இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட மெய்யியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டும் சுவெலபில், வள்ளுவர் தமிழ் இலக்கிய மரபுடன் மட்டும் தொடர்புடையவர் அல்லர் என்றும் அவர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் வியாபித்திருந்த ஒருங்கிணைந்த பண்டைய இந்திய அறநெறி மரபையும் சார்ந்தவர் என்றும் நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1973|p=171}}
 
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் கிறித்தவ மதபோதகர்களும் குறளின் காலத்தைக் கி.பி. 400-இல் தொடங்கிக் கி.பி. 1000 வரை பலவாறு வரையறை செய்தனர்.{{sfn|Blackburn|2000|p=454 பக்க அடிக்குறிப்பு 7 உடனாக}} தற்காலத்தைய அறிஞர்கள் குறளின் காலம் என்று ஒருமித்தமாக ஏற்பது சுமார் கி்.பி.5-ஆம்ம் நூற்றாண்டு என்றே பிளாக்பர்ன் கருதுகிறார்.{{sfn|Blackburn|2000|p=454 பக்க அடிக்குறிப்பு 7 உடனாக}}
 
இந்த வாதங்களுக்கிடையில் 1921-ஆம்ம் ஆண்டு தமிழக அரசு [[மறைமலை அடிகள்]] செய்த ஆராய்ச்சியினை ஏற்று கி.மு. 31-ஆம்ம் ஆண்டினை வள்ளுவர் பிறந்த ஆண்டாக அறிவித்தது.{{sfn|Zvelebil|1975|p=124}}{{sfn|Arumugam, 2014|pp=5, 15}}{{sfn|Thamizhannal, 2004|p=141}}{{sfn|''Hindustan Times'', 16 January 2020}} இதன் விளைவாக அன்று தொடங்கி தமிழகத்தில் ஆண்டுகளைக் குறிக்கத் [[திருவள்ளுவர் ஆண்டு|திருவள்ளுவர் ஆண்டும்]] பயன்படுத்தப்படுகின்றது. தமிழக நாட்காட்டிகளில் ஜனவரி 18, 1935 அன்று முதல் வள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது.{{sfn|''Thiruvalluvar Ninaivu Malar'', 1935|p=117}}{{Ref label|C|c|none}}
 
==நூலாசிரியர்==
வரிசை 78:
|source=—[[இ. எஸ். ஏரியல்]], 1848{{sfn|Pope, 1886|p=i (அறிமுகம்)}}}}
 
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.{{sfn|Blackburn|2000|pp=449–482}} வள்ளுவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன.{{sfn|Zvelebil|1973|p=155}} அவரது இயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.{{sfn|Zvelebil|1975|p=125}} திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை.{{sfn|Ramakrishnan, ''The Hindu'', 6 November 2019|p=4}} குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய [[சைவ சமயம்|சைவமத]] நூலான [[திருவள்ளுவமாலை|திருவள்ளுவமாலையில்]] தான் முதன்முறையாகத் திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது.{{sfn|Blackburn|2000|pp=449–482}} ஆயினும் இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைப்பதற்கில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படியான பண்டைய நூல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை. 19-ஆம்ம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் வள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன.{{sfn|Blackburn|2000|pp=456–457}}
 
[[File:Thiruvalluvar Statue at Kanyakumari 02.jpg|thumb|left|upright=1.0|[[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]]யில் ஒரு பாறைத்திட்டில் தமிழகக் கடற்கரையைப் பார்த்த வண்ணம் எழுப்பப்பட்டுள்ள வள்ளுவரின் சிலை]]
வரிசை 84:
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நூல்களில் வள்ளுவரைப் பற்றிப் பழங்கால ஏடுகளிலிருந்தும் மரபுவழியும் கிடைக்கப்பெற்றதும் வள்ளுவரது நூலிலிருந்தே அறியப்பட்டதுமான பலதரப்பட்ட தகவல்கள் காணப்படுகின்றன.{{sfn|Blackburn|2000|pp=458–464}} வள்ளுவர் குறித்து மரபுவழி வந்த தகவல்கள் அவர் [[பறையர்]] குலத்து நெசவாளர் என்றும்,{{sfn|Zvelebil|1975|pp=124–125}} அவர் உழவினைப் போற்றியதால் விவசாயத் தொழில் புரிந்த [[வேளாளர்]] குலத்தவர் என்றும்,{{sfn|Zvelebil|1973|p=156}} அவர் ஒரு பறையர்குலத் தாய்க்கும் [[அந்தணர்|அந்தணர்க்குலத்]] தந்தைக்கும் பிறந்தவர் என்றும்{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Blackburn|2000|pp=458–464}} பலவாறு உரைக்கின்றன. [[மு. இராகவையங்கார்|மு. இராகவ ஐயங்காரது]] கருத்துப்படி "வள்ளுவர்" என்ற அவரது பெயர் "வல்லபா" என்ற ஓர் அரச அலுவலரது பதவியைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும்.{{sfn|Zvelebil|1973|p=156}} [[எஸ். வையாபுரிப்பிள்ளை]] தனது கருத்தாக "வள்ளுவன்" என்பது அரசவையில் பறை முழங்குவோரைக் குறிக்கும் சொல் என்றும் அதனால் அவர் அரசனின் படையில் முரசு கொட்டுபவராகப் பணிபுரிந்தவர் என்றும் உரைக்கிறார்.{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Pavanar, 2017|pp=24–26}} மரபுவழி வந்த தகவல்கள் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகவும் சில நம்பகத் தன்மையற்றவையாகவும் விளங்குகின்றன. வள்ளுவரது பிறப்பு பற்றிய பலதரப்பட்ட செய்திகளில் சில வள்ளுவர் ஒரு மலைக்குப் பயணமாகச் சென்று [[அகத்தியர்|அகத்தியரையும்]] இன்னபிற முனிவர்களையும் சந்தித்ததாகவும் கூறுகின்றன.{{sfn|Blackburn|2000|pp=460–464}} அவர்களைச் சந்தித்துத் திரும்பி வரும் வழியில் வள்ளுவர் ஒரு மரத்தடியில் அமர அவரது நிழலானது அவர் மீது ஒரு நாள் முழுவதும் அசையாமல் நிலைகொண்டது என்றும் அங்கு அவர் ஓர் அரக்கனைக் கொன்றார் என்றும் பலதரப்பட்ட புராணத் தகவல்களும் காணப்படுகின்றன.{{sfn|Blackburn|2000|pp=460–464}} அறிஞர்கள் இவற்றிற்கு வரலாற்றுப் பதிவுகள் கிடையாது என்றும் இவையாவும் இந்திய மற்றும் உலகப் [[புராணம்|புராண இலக்கியங்களில்]] காணப்படுவதைப் போன்ற புனையப்பட்ட கதைகளாகும் என்றும் உரைக்கின்றனர். வள்ளுவரைப் பற்றிய குல வரலாறுகளும் நம்பகத்தன்மையற்றவை என்றே அவர்களால் கருதப்படுகிறது.{{sfn|Blackburn|2000|pp=459–464}} வள்ளுவருக்கு [[வாசுகி (திருவள்ளுவரின் மனைவி)|வாசுகி]] என்ற மனைவியும்{{sfn|Waghorne, 2004|pp=120–125}} [[ஏலேலசிங்கன்]] என்ற பெயரில் ஒருவர் உற்ற நண்பனாகவும் சீடனாகவும் இருந்தார் என்றும் நம்பப்படுகிறது.{{sfn|Manavalan, 2009|p=232}}{{sfn| Desikar, 1969|pp=128–130}}
 
வள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால் அதனைப் பல விதங்களில் பொருட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாகக் குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.{{sfn|Zvelebil|1973|p=156}} வள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர்க் [[கிறிஸ்தவம்|கிறித்தவ சமயமும்]] குறளைத் தனது வழித் தோன்றலாகக் கருதுவதைக் காணமுடிகிறது.{{sfn|Zvelebil|1973|p=156}} எடுத்துக்காட்டாக, 19-ஆம்ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ போதகரான [[ஜி. யு. போப்]] தனது நூலில் வள்ளுவர் 9-ஆம்ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் [[அலெக்சாந்திரியா|அலெக்சாந்திரியாவைச்]] சேர்ந்த கிறித்தவ போதகரான [[பான்டேனசு|பான்டேனசுடன்]] தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்சாந்திரிய கிறித்தவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு [[இயேசு|இயேசுநாதரின்]] [[மலைச் சொற்பொழிவு|மலைச் சொற்பொழிவின்]] சாரமாய்த் தனது "அழகிய திருக்குறளை" யாத்தாரென்றும் கூறுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=125}} போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அறிஞர்களால் விலக்கப்பட்டுவிட்டன.{{sfn|Manavalan, 2009|p=42}} வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறித்தவ அறநெறிகளல்ல என்று சுவெலபில் நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|D|d|none}}{{Ref label|E|e|none}} "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாகச் "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறித்தவ போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினைக் கிறித்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.{{sfn|Schweitzer, 2013|pp=200–205 (cited in ''Shakti'', Volume 5, 1968, p. 29)}}
 
வள்ளுவர் [[சமணம்|சமண சமயத்தையோ]] [[இந்து சமயம்|இந்து சமயத்தையோ]] சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.{{sfn|Kamil Zvelebil|1973|pp=156–171}}{{sfn|Mohan Lal|1992|pp=4333–4334}}{{sfn|Kaushik Roy|2012|pp=152–154, இடம்: 144–154 (அத்தியாயம்: Hinduism and the Ethics of Warfare in South Asia)}}{{sfn|Swamiji Iraianban|1997|p=13}}{{sfn|Sundaram, 1990|pp=xiii–xvii, குறள் 1103-இக்கான பின்குறிப்பு விளக்கம்}}{{sfn|Johnson, 2009}} இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|A|a|none}} வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819-ஆம்ம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் [[பிரான்சிசு வைட் எல்லிசு|எல்லீசன் (பிரான்சிசு வயிட் எல்லீசு)]] குறிப்பிடுகிறார்.{{sfn|Blackburn|2000|pp=463–464}} வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் சுவெலபில்,{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{Ref label|A|a|none}} கடவுளுக்கு வள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார்.{{sfn|Zvelebil|1973|p=155}} வள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்ற "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவே" இருந்திருக்கக்கூடும் என்பது சுவெலபில்லின் கருத்து.{{sfn|Zvelebil|1973|p=155}} எனினும் பண்டைய [[திகம்பரர்|திகம்பர]] சமண நூல்களிலோ [[சுவேதம்பரர்கள்|சுவேதம்பர]] சமண நூல்களிலோ வள்ளுவரைப் பற்றியோ குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. குறைந்தபட்சம் 8-ஆம்ம் நூற்றாண்டுவாக்கில் [[பக்தி இலக்கியம்|இந்து சமய பக்தி இலக்கியங்களில்]] வள்ளுவரும் குறளும் குறிப்பிடப்படுகையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16-ஆம்ம் நூற்றாண்டில்தான்.{{sfn|Zvelebil|1974|p=119, பக்க அடிக்குறிப்பு 10 உடன்}}
 
{{Quote box|bgcolor = #E0E6F8|align=left|quote=<poem>
"எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும்<br/>பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு."
</poem>
|source=—[[பரிமேலழகர்]] (வள்ளுவரைப்<br/>பற்றிக் குறிப்பிடுகையில்),<br/>கி.பி. 13-ஆம்ம் நூற்றாண்டு{{sfn|Aravindan, 2018|p=384}}}}
 
வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர்.{{sfn|Swamiji Iraianban|1997|p=13}}{{sfn|Sundaram, 1990|pp=xiii–xvii, குறள் 1103-இக்கான பின்குறிப்பு விளக்கம்}} அறம், பொருள், இன்பம் என்ற வீடுபேற்றினை நோக்கிய குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும்,{{sfn|Johnson, 2009}}{{sfn|Sundaram, 1990|pp=7–16}} அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறள் பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்தசாஸ்த்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும்{{sfn|Kaushik Roy|2012|pp=152–154, இடம்: 144–154 (அத்தியாயம்: Hinduism and the Ethics of Warfare in South Asia)}} அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது.{{sfn|Ananthanathan, 1994|p=325}}{{Ref label|F|f|none}} வள்ளுவர் குறட்பாக்கள் 610 மற்றும் 1103-களில் [[திருமால்|திருமாலைக்]] குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் [[இலக்குமி|இலக்குமியைக்]] குறிப்பிடுவதும் [[வைணவ சமயம்|வைணவ]] தத்துவங்களைக் குறிக்கின்றன.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|pp=145–148}}{{sfn|Natarajan, 2008|pp=4–5}} இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் வள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி. ரா. நடராசன் பட்டியலிடுகிறார்.{{sfn|Natarajan, 2008|pp=4–5}} தருக்க ரீதியான முறையில் குறளை அலசினால் வள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான [[பூர்ணலிங்கம் பிள்ளை]] கூறுகிறார்.{{sfn|Blackburn|2000|pp=464–465}} வள்ளுவர் தென்னிந்திய சைவ மரபினைச் சேர்ந்தவர் என்று [[மாத்தேயு ரிக்கா]] கருதுகிறார்.{{sfn|Ricard, 2016|p=27}} குறளானது [[அத்வைத வேதாந்த தத்துவம்|அத்வைத்த வேதாந்த மெய்யியலை]] ஒத்து இருப்பதாக தென்னக மக்கள் போற்றுவதாகவும் அது அத்வைத்த வாழ்வு முறையினை போதிப்பதாகவும் தென்னிந்தாவில் வசித்த இறையியல் அறிஞரான தாமஸ் மன்னினேசாத் கருதுகிறார்.{{sfn|Manninezhath, 1993|pp=78–79}}
வரிசை 278:
இவ்வாறு இயல் பாகுபாடுகள் பிற்காலச் சேர்க்கைகளாகவே அறியப்பட்டாலும், குறட்பாக்கள் அனைத்தும் பலதரப்பட்ட உரைகளுக்கிடையிலும் பிற்சேர்க்கைகள் ஏதுமின்றி அவற்றின் உண்மை வடிவம் மாறாது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.{{sfn|Zvelebil|1973|pp=158–160}}{{sfn|Aravindan, 2018|pp=346–348}} அறத்துப்பாலிலுள்ள அதிகாரங்கள் இல்லறம், துறவறம் என இரு இயல்களாக இடைக்கால உரையாசிரியர்களால் பகுக்கப்பட்டாலும், இவை நூலாசிரியரது பகுப்பன்று என்பதால் அவற்றில் இருக்கும் அனைத்துமே நூலாசிரியரால் இல்லறத்தானுக்கு அல்லது சாமானியனுக்குச் சொல்லப்பட்டவை தான் என்பது புலப்படுகிறது.{{sfn|Gopalakrishnan, 2012|p=144}} "திருவள்ளுவர், ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாகத் தந்தையாகக் கணவனாக, நண்பனாகக் குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறிப்பிட்டுள்ளார்" என்று [[தாய்வான்|தாய்வானிய]] அறிஞர் யூசி கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.{{sfn|''The Hindu (Tamil)'', 16 January 2014}} குறளில் உள்ள "துறவறம்" என்பது இல்லற வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதைக் குறிப்பதோ துறவிகளுக்காகக் கூறப்பட்டவையோ அல்ல. மாறாக, தனிநபர் ஒவ்வொருவரும் தனது அளவற்ற ஆசைகளைக் கைவிடுவதையும் அறநெறி பிறழாது சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதையுமே "துறவற" அதிகாரங்கள் கூறுகின்றன என்று ஏ. கோபாலகிருட்டிணன் நிறுவுகிறார்.{{sfn|Gopalakrishnan, 2012|p=144}}{{Ref label|J|j|none}} வடக்குக் காரோலைனா மற்றும் சிரகியூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜோஅன் பன்ஸோ வாக்ஹார்ன் குறளை "ஒரு இல்லறத்தானுக்குக் கூறப்பட்ட அறவழி வாழ்வுக்கான பிரசங்கம்" என்று கூறுகிறார்.{{sfn|Waghorne, 2004|pp=120–125}}
 
முப்பால் எனும் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர் தான். இயல் எனும் பகுப்பு மற்றும் அதிகார வைப்புமுறையினை மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிட்டாளும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோரதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் [[சோ. ந. கந்தசாமி]] கூறுகிறார்.{{sfn|Kandasamy, 2017|p=12}} மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார்.{{sfn|Kandasamy, 2017|p=12}} இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஓர் அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78-ஆம்ம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெலிந்திரங்கல்" அதிகாரமும் (117-வது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன.{{sfn|Kandasamy, 2017|pp=12–13}} இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே வள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம்.{{sfn|Kandasamy, 2017|p=13}} குறளின் முதலதிகாரத்தின் தலைப்பு தொல்காப்பிய மரபின் வழியே சூட்டப்பட்டதென்றே கந்தசாமி துணிகிறார்.{{sfn|Kandasamy, 2017|p=13}}
 
சுவெலபிலின் கூற்றுப்படி குறளானது ஐயத்திற்கிடமின்றிச் சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும்.{{sfn|Zvelebil|1973|p=163}} கருத்துகளில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} ஒவ்வொரு குறட்பாக்களும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் அமைகின்றன.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துகளைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல்முழுதும் இழைந்தோடும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்விலும் தினசரி வாழ்விலும் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்றுகிறது என்கிறார் சுவெலபில்.{{sfn|Zvelebil|1973|p=159}}
வரிசை 305:
 
===உவமைகள், உருவகங்கள், மற்றும் முரண் தோற்றங்கள்===
[[File:Tamil Wisdom, by Edward Jewitt Robinson, 1873.jpg|thumb|right|[[எட்வார்டு ஜெவிட் ராபின்சன்]] 1873-ஆம்ம் ஆண்டு பதிப்பித்த ''தமிள் விஸ்டம்'' என்ற நூலில் காணப்படும் வள்ளுவரது பண்டைய ஓவியம்.{{sfn|Robinson, 1873}}]]
உவமைகளுக்கும் உருவகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது அறங்களை வலியுறுத்தும் நோக்குடன் மட்டுமே வள்ளுவர் அவைகளைப் பயன்படுத்தியிருப்பதைக் குறள் முழுவதிலும் காணமுடிகிறது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=167}} ஓர் அதிகாரத்தில் நேர்மறையாகவோ புகழ்ந்தோ பயன்படுத்திய அதே உவமைகளையும் உருவகங்களையும் மற்றொரு அதிகாரத்தில் எதிர்மறையாகவோ இகழ்ந்தோ பயன்படுத்த அவர் தயங்குவதில்லை.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=167}}{{sfn|Desikar, 1969|pp=109–111}} இவ்வகையில் அறங்களை விளக்க முரண்போல் தோன்றும் கருத்துகளையும் வேண்டுமென்றே அவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.{{sfn|Vanmeegar, 2012|pp=vii–xvi}} எடுத்துக்காட்டாகக்,
 
வரிசை 321:
தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமாக அலசப்பட்ட நூலான திருக்குறள், அனேகமாக தமிழின் அனைத்து தலைசிறந்த அறிஞர்களாலும் கையாளப்பட்டு இவர்களுள் பலரால் ஏதோ ஒரு வகையில் உரையெழுதப்பட்ட நூல் என்ற பெருமையும் உடையது.{{sfn|Aravindan, 2018|p=337}}{{Ref label|K|k|none}} குறட்பாக்களைக் தங்கள் பாக்களில் எடுத்தாண்ட [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], [[கம்பராமாயணம்]], [[பெரியபுராணம்]] உள்ளிட்ட பண்டைய தமிழிலக்கியங்கள் யாவும் குறளுக்குச் செய்யுள் வடிவில் எழுந்த முதல் உரைகள் என்று அறிஞர்களால் கருதப்படுகின்றன.{{sfn|Aravindan, 2018|pp=337–338}}
 
உரைநடையில் குறளுக்கான பிரத்தியேக உரைகள் எழத் தொடங்கியது சுமார் 10-ஆம்ம் நூற்றாண்டு வாக்கில்தான். 10-ஆம்ம் நூற்றாண்டு தொடங்கி 13-ஆம்ம் நூற்றாண்டு வரை இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் பத்து அறிஞர்கள் குறளுக்கு முதன்முறையாக உரைநடை பாணியில் உரை வரைந்தனர். பதின்மர் என்றழைக்கப்படும் இவர்கள் [[மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)|மணக்குடவர்]], [[தருமர் (உரையாசிரியர்)|தருமர்]], [[தாமத்தர்]], [[நச்சர்]], [[பரிதியார்]], [[திருமலையர்]], [[மல்லர்]], [[பரிப்பெருமாள்]], [[காலிங்கர்]], மற்றும் [[பரிமேலழகர்]] முதலானோர் ஆவர். இவர்களில் மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிபெருமாள், பரிமேலழகர் ஆகியோரது உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளின் ஒரு சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருமலையரது உரையும் மல்லரது உரையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பதின்மரது உரைகளின் வாயிலாகவே திருக்குறள் இன்று நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பதின்மர் உரைகளில் சிறப்பாகக் கருதப்படுவது பரிமேலழகர், மணக்குடவர், மற்றும் காலிங்கர் ஆகியோரது உரைகள்தான்.{{sfn|Lal, 1992|pp=4333–4334}}{{sfn|Aravindan, 2018|p=337}}{{sfn|Natarajan, 2008|p=2}} பதின்மருரைகளில் 900 குறட்பாக்களில் அறிஞர்கள் பாடபேதங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுள் 217 இடங்கள் அறத்துப்பாலிலும், 487 இடங்கள் பொருட்பாலிலும், 196 இடங்கள் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருக்கின்றன.{{sfn|Perunchithiranar, 1933|p=259}}
 
குறளுரைகளில் வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்ததும் அறிஞர்களால் போற்றப்படுவதும் பரிமேலழகர் விருத்தியுரை ஆகும். இது கி.பி. 1272-ஆம்ம் ஆண்டு வாக்கில் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] வாழ்ந்த வைணவ குலத்தைச் சேர்ந்த அறிஞரும் உரையாசிரியர்கள் பதின்மரில் கடையாக வாழ்ந்தவருமான பரிமேலழகரால் இயற்றப்பட்டது.{{sfn|Zvelebil|1975|p=126 பக்க அடிக்குறிப்புகளுடன்}} குறளின் மூலத்திற்கு இணையாகப் பரவலாகப் பதிப்பிக்கப்பட்டு பயிலப்படும் இவ்வுரை தமிழிலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.{{sfn|Cutler, 1992|pp=558–561, 563}} இவ்வுரை பல நூற்றாண்டுகளாக அறிஞர் முதல் பாமரர் வரை அனைத்து நிலைகளிலும் ஆக்கம் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களுக்கான இதன் ஆராய்ச்சித் தொகுப்பு ஒன்று 1965-ஆம்ம் ஆண்டு [[வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்|வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்]] என்பவரால் பதிப்பிக்கப்பட்டது.{{sfn|Zvelebil|1975|p=126 பக்க அடிக்குறிப்புகளுடன்}} பரிமேலழகர் தனது வைணவ இந்து சமய நெறிகளின் பார்வையின் அடிப்படையில் உரையினைக் கொண்டு சென்றுள்ளார் என்று நார்மன் கட்லர் கூறுகிறார். தாம் வாழ்ந்த 13-ஆம்ம் மற்றும் 14-ஆம்ம் நூற்றாண்டின் தமிழகத்து இலக்கிய, சமய, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தழுவியவாறு குறள் கூறும் அறங்களை வழுவாது தனது உரையில் பரிமேலழகர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பல்வேறு கோணங்களில் ஆராயவும் விளங்கிக்கொள்ளவும் ஏதுவான ஓர் உரையாக அவரது உரை உள்ளது என்றும் கட்லர் கருதுகிறார்.{{sfn|Cutler, 1992|pp=558–561, 563}}
 
பதின்மர்களின் உரைகளைத் தவிர மேலும் மூன்று உரைகளேனும் இடைக்காலத்தில் இயற்றப்பட்டுள்ளன.{{sfn|Aravindan, 2018|p=339}} ஆயின் இவற்றின் ஆசிரியர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.{{sfn|Aravindan, 2018|p=339}} இவற்றில் ஒன்று "பழைய உரை" என்ற பெயரிலும் மற்றொன்று பரிதியாரின் உரையைத் தழுவியும் இயற்றப்பட்டுள்ளன. மூன்றாவது "ஜைன உரை" என்ற பெயரில் [[தஞ்சை சரசுவதிமகால் நூலகம்|தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தால்]] 1991-ஆம்ம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது.{{sfn|Balasubramanian, 2016|p=129}} இவ்வுரைகளைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் [[சோமேசர் முதுமொழி வெண்பா]], முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, [[இரங்கேச வெண்பா]], வடமாலை வெண்பா, [[தினகர வெண்பா]], ஜினேந்திர வெண்பா உள்ளிட்ட சுமார் 21 வெண்பா உரைகள் இயற்றப்பட்டன. இவையாவும் குறளுக்கான செய்யுள் வடிவ உரைகளாகும்.{{sfn|Nedunchezhiyan, 1991|p=ix}}{{sfn|Iraikuruvanar, 2009|pp=53–59}}{{sfn|Mohan and Sokkalingam, 2011|pp=15–16}}
 
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல புதிய உரைகள் குறளுக்கு இயற்றப்பட்டன. இவற்றுள் கவிராச பண்டிதர், [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சுவாமிநாத ஐயர்]] ஆகியோரது உரைகள் அறிஞர்களால் நவீனகால சிறப்புறு உரைகளாகக் கருதப்படுகின்றன.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=115}} இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான உரைகளில் திருமேனி இரத்தினக் கவிராயர்,{{sfn|Chellammal, 2015|p=123}} [[இராமாநுஜ கவிராயர்]],{{sfn|Chellammal, 2015|p=123}} [[கோ. வடிவேலு செட்டியார்]],{{sfn|Kolappan, ''The Hindu'', 18 October 2015}} கிருஷ்ணாம்பேட்டை கி. குப்புசாமி முதலியார்,{{sfn|Kolappan, ''The Hindu'', 2 October 2017}} [[அயோத்தி தாசர்]], [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ. உ. சிதம்பரம் பிள்ளை]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. கா.]], [[பாரதிதாசன்]], [[மு. வரதராசன்]], [[நாமக்கல் கவிஞர்]], [[வீ. முனிசாமி|திருக்குறளார் வே. முனுசாமி]], [[தேவநேயப் பாவாணர்]], [[மு. கருணாநிதி]], [[சாலமன் பாப்பையா]] ஆகியோரது உரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். மு. வரதராசனின் 1949-ஆம்ம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்ட "திருக்குறள் தெளிவுரை" என்ற உரை ஒரே பதிப்பகத்தாரால் 200-க்கும் அதிகமான பதிப்புகளில் வெளிவந்து மிக அதிகமாக அச்சிடப்பெற்ற நவீன உரையாகத் திகழ்கிறது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=469}}
 
பத்தாம் நூற்றாண்டில் மணக்குடவர் உரையில் தொடங்கி 2013-ஆம்ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 382 அறிஞர்களால் இயற்றப்பட்ட சுமார் 497 குறளுரைகள் தமிழில் வெளிவந்துள்ளன என்றும் இவற்றில் 277 அறிஞர்களேனும் குறளுக்கு முழுமையாக உரையெழுதியுள்ளனர் என்றும் கு. மோகனராசு கணக்கிடுகிறார்.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=463}}
 
=== மொழிபெயர்ப்புகள் ===
[[File:1856 CE Translation 1865 edition, Kural of Thiruvalluvar Tirukkural Graul.jpg|thumb|upright=1.4|1856-ஆம்ம் ஆண்டு [[காரல் கிரவுல்|கார்ல் கிரவுல்]] பதிப்பித்த குறளின் இலத்தீன் மொழிபெயர்ப்பு (வில்லியம் ஜெர்மன் என்பவரது ஆங்கிலக் குறிப்புகளுடன்). குறளின் முதல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பினையும் கிரவுல் பதிப்பித்தார்.{{sfn|Graul, 1856}}]]
 
தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் உலகின் மிக அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட நூல்களில் ஒன்றாகவும் திருக்குறள் திகழ்கிறது. 1975-ஆம்ம் ஆண்டின் முடிவில் குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாக சுவெலபில் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார்.{{sfn|Zvelebil|1975|pp=126–127 with footnotes}} வடமொழி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளிலும் அதுவரை குறளானது மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.{{sfn|Zvelebil|1975|pp=126–127 with footnotes}}
 
இடைக்காலங்களில் குறளுக்கு உரைகள் எழுந்த காலகட்டத்தில் திருக்குறள் சக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் இக்கூற்றினை நிரூபிக்கும் விதமான மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடிகள் இதுவரை மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழக]] நூலகராக இருந்த எஸ். ஆர். ரங்கநாதன் என்பவர் குறளின் மலையாள மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார். மலையாள நாட்காட்டி ஆண்டு 777 என்று குறிக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடியின் இயற்றப்பட்ட ஆண்டினை சுவெலபில் 1595 என்று அறுதியிடுகிறார்.{{sfn|Zvelebil|1975|p=127 with footnote 99}} ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் குறள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குறிப்பாகக் கிறித்தவ மதபோதகர்கள் தங்களது மதப் பிரசார செயல்களின் ஒரு பகுதியாக குறள் உள்ளிட்ட இந்திய இலக்கியங்களை மொழிமாற்றம் செய்யத் துவங்கினர். இதன் விளைவாக குறளின் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு எண்ணிக்கை மேலும் கூடியது.{{sfn|Ramasamy|2001|pp=28–47}}
 
குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு 1730-ல் '[[வீரமாமுனிவர்]]' என்றழைக்கப்படும் கான்ஸ்டான்ஷியஸ் ஜோசஃப் பெச்கி என்பவரால் [[இலத்தீன்]] மொழியில் செய்யப்பட்டது. ஆனால் அவர் குறளின் முதல் இரண்டு பால்களை மட்டுமே மொழிபெயர்த்தார். காமத்துப்பாலை படிப்பதென்பதும் மொழிபெயர்ப்பதென்பதும் ஒரு கிறித்தவ மதபோதகருக்கு உகந்ததல்ல என்று அவர் கருதியதால் அதை மொழிமாற்றம் செய்யாமல் விட்டுவிட்டார். குறளின் முதல் [[பிரெஞ்சு]] மொழிபெயர்ப்பு 1767-ஆம்ம் ஆண்டு பெயர் தெரியாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது. எனினும் இது விரைவில் வழக்கின்றி உலகறிது போய்விட்டது. வழக்கிலுள்ள முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ஆம்ம் ஆண்டு [[இ. எஸ். ஏரியல்]] என்பவரால் செய்யப்பட்டது. அவரும் குறளை முழுவதுமாக மொழிமாற்றம் செய்யாது சில பகுதிகளை மட்டுமே மொழிபெயர்த்தார். குறளின் முதல் [[ஜெர்மன்]] மொழிபெயர்ப்பு [[காரல் கிரவுல்|கார்ல் கிரவுல்]] என்பவரால் செய்யப்பட்டு 1856-ஆம்ம் ஆண்டு இலண்டன்]], [[லைப்சிக்]] ஆகிய இரு நகரங்களிலும் பதிப்பிக்கப்பட்டது.{{sfn|Graul, 1856}}{{sfn|Ramasamy|2001|pp=30–31}} கூடுதலாக 1856-ஆம்ம் ஆண்டு கிரவுல் குறளை இலத்தினிலும் மொழிபெயர்த்தார்.{{sfn|Maharajan, 2017|p=19}}
 
ஆங்கிலத்தில் குறள் முதன்முறையாக 1794-ஆம்ம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரியான [[என். இ. கின்டர்ஸ்லி]] என்பவராலும் 1812-ஆம்ம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிகாரியான [[எல்லீசன்]] என்பவராலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவை இரண்டுமே பகுதி மொழிபெயர்ப்புகள் மட்டுமே. கின்டர்ஸ்லி குறளின் ஒரு பகுதியை மட்டும் மொழிபெயர்க்கையில் எல்லீசன் 69 குறட்பாக்களை செய்யுள் நடையிலும் 51 குறட்பாக்களை உரைநடையிலும் என மொத்தம் 120 குறட்பாக்களை மொழிபெயர்த்தார்.{{sfn|Blackburn|2006|pp=92–95}}{{sfn|Zvelebil|1992}} [[எட்வார்டு ஜெவிட் ராபின்சன்]] என்ற மதபோதகர் 1873-ஆம்ம் ஆண்டில் பதிப்பித்த "தி டமில் விஸ்டம்" என்ற நூலிலும் அதன் பின்னர் 1885-ஆம்ம் ஆண்டில் விரிவாக்கிப் பதிப்பித்த "தி டேல்ஸ் அன்ட் போயம்ஸ் ஆஃப் செளத் இன்டியா" என்ற நூலிலும் குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழிபெயர்த்திருந்தார்.{{sfn|Manavalan, 2010|pp=xxi–xxii}}{{sfn|Robinson, 1873|p=4}} மற்றுமொரு மதபோதகரான [[வில்லியம் ஹென்றி ட்ரூ]] 1840-ல் அறத்துப்பாலையும் 1852-ல் பொருட்பாலின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நூலில் தனது உரைநடை மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் மூலத்தையும் பரிமேலழகரின் உரையையும் [[இராமானுஜக் கவிராயர்|இராமானுஜக் கவிராயரின்]] விளக்கவுரையையும் பதிப்பித்தார். ஆனால் பொருட்பாலில் காணப்படும் குறளின் 63-ஆவது அதிகாரம் வரை மட்டுமே ட்ரூ மொழிபெயர்த்திருந்தார். பெச்கியைப் போலவே ட்ரூவும் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்காது இருந்துவிட்டார்.{{sfn|Ramasamy|2001|p=31}} இவற்றை 1885-ஆம்ம் ஆண்டு [[ஜான் லாசரஸ்]] என்ற மதபோதகர் மெருகேற்றி கூடவே ட்ரூ மொழிபெயர்க்காது விட்டிருந்த பொருட்பாலின் மீதமிருந்த அதிகாரங்களையும் இன்பத்துப்பால் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே குறள் முழுவதற்குமான முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக உருவானது.{{sfn|Ramasamy|2001|p=31}} 1886-ஆம்ம் ஆண்டு [[ஜி. யு. போப்|ஜார்ஜ் யுக்ளோ போப்]] என்ற மதபோதகர் செய்த செய்யுள் நடை மொழிபெயர்ப்பு குறள் முழுவதற்கும் ஒரே நபரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக மாறியது. இதுவே குறளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நூலாகவும் அமைந்தது.{{sfn|Ramasamy|2001|p=32}}
 
இருபதாம் நூற்றாண்டில் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.{{sfn|Zvelebil|1975|p=127 with footnote 99}} இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் குறளுக்குச் சுமார் 24 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இவற்றில் சில ஆங்கிலேய அறிஞர்களாலும் மற்றவை இந்திய அறிஞர்களாலும் செய்யப்பட்டவையாகும். குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திய அறிஞர்களில் [[வ. வே. சு. ஐயர்]], கே. எம். பாலசுப்பிரமணியம், [[சுத்தானந்த பாரதியார்]], ஆ. சக்கிரவர்த்தி, [[மு. சி. பூரணலிங்கம் பிள்ளை]], [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|சி. இராஜகோபாலசாரி]], பி. எஸ். சுந்தரம், [[வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்]], ஜி. வான்மீகநாதன், [[கஸ்தூரி சீனிவாசன்]], எஸ். என். ஸ்ரீராமதேசிகன், [[கே. ஆர். சீனிவாச ஐயங்கார்]] ஆகியோர் முக்கியமானவர்களாவர்.{{sfn|Ramasamy|2001|p=36}} கிட்டு சிரோமனி என்பவரால் குறள் [[நரிக்குறவர்|நரிக்குறவர்களின்]] மொழியான [[வாக்ரி பூலி மொழி|வாக்ரி போலி]] மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.{{sfn|''The Hindu'', 25 March 2013}} 2020-ஆம்ம் ஆண்டு முடிய குறள் 42 உலக மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை இதுவரை 100-ஐத் தாண்டியுள்ளது. 2021-ஆம்ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை [[தரமணி]]யில் இயங்கிவரும் [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது.{{sfn|''Dinamalar'', 20 October 2021}}
 
===மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் திரிபுகளும்===
வரிசை 354:
==அச்சிடப்படுதல்==
[[படிமம்:Thirukkural Madras 1812.JPG|thumb|200px|1812-இல் முதன் முதலாக அச்சிடப்பட்ட திருக்குறள் மூலம்]]
நூல்கள் யாவும் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் ஆசானிடமிருந்து மாணாக்கர்களுக்கும் வழிவழியாகக் கற்பிக்கப்பட்டு வாயால் விளக்கிச் சொல்லியும் செவியால் கேட்டு உணர்ந்தும் கற்கும் வழக்கம் பண்டைய இந்திய மரபாகும்.{{sfn|Mohan and Sokkalingam, 2011|p=11}} குறளும் இவ்வாறே கற்பிக்கப்பட்டு தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களால் பரம்பரை பரம்பரையாகக் கற்கப்பட்டு வந்திருக்கிறது.{{sfn|Mohan and Sokkalingam, 2011|p=11}} இவ்வகையில் குறள் இயற்றப்பட்டு பல நூற்றாண்டுகளாக இந்திய மண்ணுக்கு வெளியே அறியப்படாமலேயே இருந்திருக்க வேண்டும். குறளின் முதல் மொழிபெயர்ப்பு 1595 [[மலையாளம்|மலையாளத்தில்]] செய்யப்பட்டது என்று சுவெலபில், சஞ்சீவி ஆகியோர் கூறுகின்றனர்.{{sfn|Sanjeevi, 1973|pp=44–49}}{{sfn|Zvelebil|1975|p=127 அடிக்குறிப்பு 99 உடன்}} எனினும் இம்மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படாமலும் 1933–34-ஆம்ம் ஆண்டு [[கொச்சி]] அகழ்வாராய்ச்சித் துரை தனது ஆண்டு அறிக்கையில் இதைப்பற்றிய விவரத்தினை வெளியிடும்வரை வெளியுலகுக்குத் தெரியாமலும் இருந்திருக்கிறது.{{sfn|Sanjeevi, 1973|pp=44–49}}
 
திருக்குறள் முதன்முதலில் தாளில் அச்சிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 1812-ஆம்ம் ஆண்டில் ஆகும். [[தஞ்சை ஞானப்பிரகாசர்]] என்பவர் மரத்தால் செய்யப்பட்ட அச்சுக்களைக் கொண்டு குறள் மற்றும் [[நாலடியார்|நாலடியாரின்]] ஓலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலப் பிரதிகளை அச்சிட்டார்.{{sfn|Zvelebil|1992|p=160}} 1835-ஆம்ம் ஆண்டில்தான் ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு அச்சிட அனுமதி வழங்கியது என்பதால் குறள் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகவும்{{sfn|Madhavan, ''The Hindu'', 21 June 2010}} நாலடியார் இரண்டாவது நூலாகவும் ஆயின.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=184}} ஆங்கிலேய அரசு அதிகாரியும் தமிழ் மற்றும் வடமொழி ஆர்வலருமான எல்லீசன் 1825-ஆம்ம் ஆண்டு சென்னையில் தமிழ் சங்கமொன்றை நிறுவி மக்களைப் பழைய தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிட தன்னிடம் எடுத்து வருமாறு அழைப்பு விடுத்தார்.{{sfn|Geetha and Rajadurai, 1993|p=2094}} [[மதுரை]]யில் ஐரோப்பிய அரசு அதிகாரியான ஜார்ஜ் ஹார்ங்டன்னிடம் சமையல் பணிபுரிந்த கந்தப்பன் என்பவர் 1825 மற்றும் 1831 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகியவற்றின் ஏடுகளைச் சமையலுக்கு எரிக்கப்படவிருந்த விறகுகளுக்கு மத்தியில் கண்டெடுத்து எல்லீசனிடம் கொடுக்க 1831-ஆம்ம் ஆண்டு இவையாவும் எல்லீசனின் மேலாளர் முத்துசாமி பிள்ளை மற்றும் தமிழறிஞர் [[தாண்டவராய முதலியார்]] ஆகியோரது உதவியுடன் பதிப்பிக்கப்பட்டன.{{sfn|Geetha and Rajadurai, 1993|p=2094}} இதனைத் தொடர்ந்து 1833, 1838, 1840, மற்றும் 1842 ஆகிய ஆண்டுகளில் திருக்குறள் அடுத்தடுத்து அச்சிடப்பட்டது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=29}} [[மகாலிங்க ஐயர்]] குறளின் 24 அதிகாரங்களுக்கு மட்டும் உரையினைப் பதிப்பிக்க, அதன் பின்னர்ப் பல குறளுரைகள் அச்சுக்கு வரத் தொடங்கின.{{sfn|Kolappan, ''The Hindu'', 3 October 2018}} அது முதல் குறள் தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்துள்ளது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=29}} 1925-ஆம்ம் ஆண்டு காலகட்டம் வரை குறள் சுமார் 65 பதிப்புக்கு மேல் வெளிவந்துள்ளது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=29}} 21-ஆம்ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=313}}
 
குறளின் முதல் ஆராய்ச்சியுரை இந்து சமய மடங்களில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளிலிருந்தும் தனியே கிடைக்கப்பெற்ற சுவடிகளிலிருந்தும் 1861-ஆம்ம் ஆண்டு [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரால்]] பதிப்பிக்கப்பட்டது.{{sfn|R Parthasarathy|1993|pp=347–348}}{{sfn|Zvelebil|1992|pp=153–157 அடிக்குறிப்புகளுடன்}} பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறள் மற்றும் இதர தமிழிலக்கிய நூல்களைப் பலதரப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து சந்திப்பிரித்த வெண்பாக்களை முறைப்படுத்தி அச்சிடுவதில் ஆறுமுக நாவலர் அனைவருக்கும் முன்னோடி என்று சுவெலபில் பாராட்டுகிறார்.{{sfn|Zvelebil|1992|pp=153–157 அடிக்குறிப்புகளுடன்}}
 
குறளுக்கான பரிமேலழகருரை முதன் முதலில் 1840-ஆம்ம் ஆண்டு அச்சிடப்பட்டது.{{sfn|John Lazarus|1885}} 1850-ஆம்ம் ஆண்டு [[வேதகிரி முதலியார்|வேதகிரி முதலியாரின்]] உரையோடு திருக்குறள் அச்சிடப்பட்டது.{{sfn|Kolappan, ''The Hindu'', 3 October 2018}} இதன் மறுபதிப்பு 1853-இல் வெளிவந்தது. இப்பதிப்பே திருக்குறள் முழுவதும் முதன்முறையாக உரையோடு வெளிவந்த பதிப்பாகும்.{{sfn|Kolappan, ''The Hindu'', 3 October 2018}} 1917-ஆம்ம் ஆண்டு முதன்முறையாக மணக்குடவருரை [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]]யால் தொகுத்து வெளியிடப்பட்டது.{{sfn|Kumaravelan, 2008|pp=4–17}}{{sfn|Manakkudavar, 1917}} ஆயின் அவர் அறத்துப்பாலை மட்டுமே பதிப்பித்தார்.{{sfn|Kumaravelan, 2008|pp=4–17}} மணக்குடவருரை முழுவதும் முதன்முதலாக [[கே. பொன்னுசாமி நாடார்|கே. பொன்னுசாமி நாடாரால்]] 1925-ஆம்ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 2013-ஆம்ம் ஆண்டு முடிய பரிமேலழகருரை 30-இக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் 200-இக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=469}} முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட அன்று முதல் இதுவரை அதிகமாக அச்சிடப்பட்ட குறளுரையாகப் பரிமேலழகருரை திகழ்கிறது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=469}}
 
திருக்குறள் 1970-களில் தொடங்கி [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்]] கிட்டு சிரோமணி என்பவரால் [[தமிழ்ப் பிராமி]] எழுத்துகள், [[பல்லவர்]] காலத்து எழுத்துகள், [[வட்டெழுத்து]]கள் உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழெழுத்துகளில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.{{sfn|Siromoney et al., 1976}}{{sfn|Siromoney et al., 1980}}
 
== பண்டைய இலக்கியங்களுடனான ஒப்பீடு ==
[[File:Thiruvalluvar 1960 stamp of India.jpg|thumb|180px|right|1960-ஆம்ம் ஆண்டு இந்திய தபால்துறை வெளியிட்ட வள்ளுவரின் உருவம் தாங்கிய தபால் தலை.]]
குறள் பண்டைய தமிழ் இலக்கிய மரபினைச் சேர்ந்த நூல் மட்டுமன்று; அது "பண்டைய இந்திய ஒருங்கிணைந்த அறநெறி மரபினைச் சேர்ந்த" ஓர் அற இலக்கியப் படைப்பு ஆகும்.{{sfn|Zvelebil|1973|p=171}} குறளில் காணப்படும் சிந்தனைகளும் மேற்கோள்களும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் [[மனுதரும சாத்திரம்|மனுஸ்மிருதி]], [[அர்த்தசாஸ்திரம்]], [[நித்திசாரா]], [[காமசூத்திரம்]] போன்ற பண்டைய இலக்கியங்கள் பலவற்றையும் பல இடங்களில் ஒத்து இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.{{sfn|Sundaram, 1990|pp=7–16}} குறளின் போதனைகளில் சில அன்றைய காலகட்ட வடமொழி நீதி இலக்கியங்களான அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளைத் தழுவியிருக்கிறது என்பதை ஐயமின்றித் துணியலாம் என்று சுவெலபில் நிறுவுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=170–171}}
 
குறள் தனக்கு முந்தைய தமிழிலக்கிய நூல்களிலிருந்து பெரிய அளவில் சிந்தனைகளையும் செய்யுள் வரிகளையும் பெற்றுள்ளது என்று சுவெலபில் கருதுகிறார்.{{sfn|Zvelebil|1975|pp=15–16}} எடுத்துக்காட்டாகக், குறளின் காலத்துக்கு முந்தைய [[குறுந்தொகை]]யிலிருந்து பல சொல்லமைப்புகளையும், [[திருமால்|திருமாலைத்]] துதித்துத் தொடங்கும் [[நற்றிணை]]யிலிருந்து பல வரிகளையும் திருக்குறளில் காணலாம்.{{sfn|Zvelebil|1975|pp=15–16}} அதுபோலவே குறளுக்குப் பிந்தைய நூல்கள் பலவும் குறளின் சொல்லாட்சியினைப் பெரிதும் பின்பற்றுவதையும் காணமுடிகிறது. 10-ஆம்ம் நூற்றாண்டுக்கு முன் குறளைப் போற்றிப் பல புலவர்களால் இயற்றப்பட்ட [[திருவள்ளுவமாலை]]யும் ஏனைய பிரபந்தங்களும் குறள் வரிகளைத் தங்களுக்குள் பதித்துக்கொண்டுள்ளன.{{sfn|Zvelebil|1975|pp=58–59}} 9-ஆம்ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட காதல் இலக்கியமான [[பெருங்கதை]] பல இடங்களில் குறளின் வரிகளையும் சிந்தனைகளையும் சுட்டுகிறது.{{sfn|Zvelebil|1975|pp=135–136}} 6-ஆம்ம் நூற்றாண்டு வாக்கில் படைக்கப்பட்ட பெளத்த இலக்கியமான [[மணிமேகலை]] தனது 22.59–61 பாடல்களில் குறளைக் மேற்கோள் காட்டுகிறது. சமணத்தைச் சாடும் இந்நூலானது குறளின் சிந்தனைகளைத் தன்னில் ஏற்பது நோக்கத்தக்கது.{{sfn|Zvelebil|1975|pp=140–141 பக்க அடிக்குறிப்புகளுடன்}}
 
திருக்குறளின் இரண்டாம் பாலிலுள்ள கருத்துக்கள் பலவும் அர்த்தசாஸ்திரத்தை ஒத்து இருந்தாலும் சில முக்கிய அம்சங்களில் குறள் அர்த்தசாஸ்திரத்திலிருந்து வேறுபடுகிறது. [[சாணக்கியர்|கெளட்டிலியர்]] கூறுவதைப் போலல்லாது வள்ளுவர் தனது நூலில் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாக அதன் படையினைக் கருதுகிறார். எப்பொழுதும் போரினை எதிர்கொள்ளும் ஆயத்த நிலையில் சீராகவும் சிறப்பாகவும் பயின்று வைக்கப்பட்டு திறன்பட ஒழுகுவோரது தலைமையில் நடத்தப்படும் ஒரு படையானது ஒரு நாட்டின் இன்றியமையா அங்கமாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.{{sfn|Kaushik Roy|2012|pp=144–151, 152–154}}
வரிசை 393:
[[File:Keezhadi and Thirukkural 43rd Chennai Book Fair 2020.jpg|thumb|left|250px|2020 [[சென்னை புத்தகக் காட்சி|சென்னைப் புத்தகக் கண்காட்சியில்]] வைக்கப்பட்டிருந்த வள்ளுவரின் [[மணற்சிற்பம்]]]]
 
குறளைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் தமிழகத்தில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் [[கொங்கு மண்டலம்|கொங்கு மண்டலத்தின்]] பிரதான ஆட்சி நூலாகத் திருக்குறள் திகழ்ந்துள்ளது.{{sfn|Polilan et al., 2019|p=779}} [[சேலம் மாவட்டம்]] [[மல்லூர்]] அருகிலுள்ள [[பொன்சொரிமலை]]யில் 15-ஆம்ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கல்வெட்டு ஒன்றில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்" என்ற புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறட்பா காணப்படுகிறது. இது அக்காலத்து கொங்கு நாட்டு மக்கள் அகிம்சையையும் கொல்லாமையையும் தங்கள் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடித்து வந்ததைக் காட்டுவதாக உள்ளது.{{sfn|Polilan et al., 2019|pp=774–779, 783}} 1617-ஆம்ம் ஆண்டின் கொங்கு நாட்டு பூந்துறை நாட்டார் மேலோலை, 1798-ஆம்ம் ஆண்டின் கொங்கு நாட்டுப் நாரணபுரத்து பல்லடம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேடு, [[நாமக்கல் மாவட்டம்]] கபிலக்குறிச்சிப் பகுதியில் காணப்படும் 18-ஆம்ம் நூற்றாண்டின் [[கபிலர்மலை|கபிலமலைச்]] செப்பேடு, [[பழனி]] வீரமுடியாளர் மடத்துச் செப்பேடு, கொங்கு நாட்டு காரையூர் செப்பேடு, [[பழையகோட்டை ஊராட்சி|பழையகோட்டை]] ஏடு, மற்றும் [[சென்னை]] [[இராயப்பேட்டை]] பெரிய பாளையத்தம்மன் கோயிலில் காணப்படும் 1818-ஆம்ம் ஆண்டின் எல்லீசன் கல்வெட்டுகள் போன்றவை திருக்குறளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மேலும் சில வரலாற்று ஆவணங்களாகும்.{{sfn|Polilan et al., 2019|pp=774–784}}
 
===சமூகத் தாக்கம்===
திருவள்ளுவரின் உருவப்படங்கள் நெடுங்காலமாக சைவர்களாலும் சமணர்களாலும் வரையப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கொண்டை வைத்த உருவம் துவங்கி தலைமுடி மழித்த உருவம் வரை பல்வேறு வகையில் இப்படங்கள் காணப்பபடுகின்றன. 1960-ஆம்ம் ஆண்டு கே. ஆர். வேணுகோபால சர்மா என்ற ஓவியர் வரைந்த கொண்டை முடியும் தாடியுடனுமான உருவப்படம் ஒன்று [[தமிழக அரசு|தமிழக]] மற்றும் [[இந்திய அரசு|இந்திய அரசாங்கங்களால்]] ஏற்கப்பட்டு பயன்படுத்தப்படத் துவங்கியது.{{sfn|Anbarasan, 2019}} 1960-களுக்குப் பின்னர் இதுவே அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.{{sfn|Parthasarathy, ''The Hindu'', 12 December 2015}} 1964-ஆம்ம் ஆண்டு இப்படத்தினை [[இந்தியப் பாராளுமன்றம்|இந்தியப் பாராளுமன்றத்தில்]] அப்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் திறந்து வைத்தார். 1967-ஆம்ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வள்ளுவரது உருவப்படம் ஒன்று இருக்க வேண்டும் எ்னறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.{{sfn|Sriram Sharma, 2018|pp=41–42}}{{Ref label|L|l|none}}
 
இருபதாம் நூற்றாண்டில் குறளுக்குப் பலர் இசையமைத்துப் அதைப் பாடி அரங்கேற்றியுள்ளனர். இவர்களுள் மயூரம் விஸ்வநாத சாஸ்திரி மற்றும் [[பரத்வாஜ்|ரமணி பரத்வாஜ்]] ஆகியோர் அடங்குவர். குறளை முழுமையாகப் பாடி குறள் கச்சேரி நடத்தியவர்களுள் [[எம். எம். தண்டபாணி தேசிகர்]] மற்றும் [[சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன்]] ஆகியோர் முதன்மை வாய்ந்தவர்களாவர்.{{sfn|Rangan, ''The Hindu'', 19 March 2016}} மதுரை சோமசுந்தரம் மற்றும் சஞ்ஜய் சுப்பிரமணியன் ஆகியோரும் குறளை இசையாகப் பாடியுள்ளனர். மயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறள் முழுவதற்கும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இசையமைத்தார்.{{sfn|Music Academy Conference lectures, 2017}} 2016-ஆம்ம் ஆண்டு ஜனவரி மாதம் [[சித்திரவீணா என். ரவிகிரண்]] குறள் முழுவதற்கும் 16 மணி நேரத்திற்குள் இசையமைத்து சாதனை படைத்தார்.{{sfn|Rangan, ''The Hindu'', 19 March 2016}}{{sfn|''Deccan Herald'', 31 March 2018}}
 
[[File:Kural in Chennai Metro Train.jpg|thumb|right|[[சென்னை மெட்ரோ]] தொடர்வண்டியினுள் காணப்படும் ஒரு குறட்பா பலகை.]]
 
1818-ஆம்ம் ஆண்டு அப்போதைய சென்னை நகர ஆட்சியராக இருந்த [[எல்லீசன்]] வள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டார்.{{sfn|Iraikkuruvanar, 2009|pp=89–90}}{{Ref label|M|m|none}}{{Ref label|N|n|none}} பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் [[வள்ளலார் இராமலிங்க அடிகளார்]] குறளறங்களைப் பரப்பும் பொருட்டு பொதுமக்களுக்கான தினசரி திருக்குறள் வகுப்புகளை நடத்தத் துவங்கினார்.{{sfn|Kolappan, ''The Hindu'', 3 October 2018}} 1968-ஆம்ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் அனைவரும் பார்க்கும்படியாகக் குறட்பாவை ஏந்திய பலகை ஒன்றை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. குறளின் நினைவாகக் [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரியிலிருந்து]] [[புதுதில்லி]] வரை 2,921&nbsp;கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இந்திய இரயில்வே "[[திருக்குறள் அதிவிரைவு வண்டி]]" என்று பெயரிட்டுள்ளது.{{sfn|IndianRailInfo, n.d.}}
 
திருக்குறள் தமிழ் மக்களின் தினசரி வாழ்வோடு ஒன்றிய ஒரு இலக்கியமாகும். குறளின் பாக்கள் எல்லாத் தருணங்களிலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் கையாளப்படுகின்றன. இயக்குனர் [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரின்]] படத் தயாரிப்பு நிறுவனமான [[கவிதாலயா]] தனது படங்களின் துவக்கத்தில் திருக்குறளின் முதற்பாவினைப் பாடித் துவங்குவதை வழக்கமாகக் கொண்டது.{{sfn|Rangan, ''The Hindu'', 19 March 2016}} தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பலவற்றிலும் குறளின் வரிகளும் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|pp=362–366}} இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருக்குறள் சார்ந்த மாநாடுகள் நடத்தும் வழக்கம் துவங்கியது. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு ஒன்று 1941-ஆம்ம் ஆண்டு [[திருக்குறள் வீ. முனிசாமி|திருக்குறளார் வீ. முனுசாமி]] அவர்களாலும்{{sfn|Periyannan, 2013}} பின்னர் 1949-ஆம்ம் ஆண்டு மேலும் ஒரு குறள் மாநாடு [[பெரியார் ஈ. வெ. இராமசாமி]] அவர்களாலும்{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=30}} நடத்தப்பட்டன. இம்மாநாடுகளில் பல அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.{{sfn|Veeramani, 2015|pp=326–348}} அதுமுதல் பல திருக்குறள் மாநாடுகள் தெடர்ந்து நடந்தேறியுள்ளன. ஓவியக்கலை,{{sfn|S. Prasad, ''The Hindu'', 11 August 2020}}{{sfn|Sruthi Raman, ''The Times of India'', 14 April 2021}} இசை,{{sfn|Rangan, ''The Hindu'', 19 March 2016}} நடனம்,{{sfn|Venkatasubramanian, ''The Hindu'', 26 April 2018}} தெருக்கூத்து மற்றும் தெரு நிகழ்ச்சிகள்,{{sfn|Venkataramanan, ''The Hindu'', 22 April 2010}} ஒப்புவித்தல் மற்றும் முற்றோதல்,{{sfn|Madhavan, ''The Hindu'', 26 August 2016}}{{sfn|Krishnamachari, ''The Hindu'', 20 November 2014}} செயற்கூட்ட நிகழ்ச்சிகள்,{{sfn|Ramakrishnan, ''The Hindu'', 4 September 2006}} விடுகதைகள் மற்றும் புதிர்ப்போட்டிகள்{{sfn|Sujatha, ''The Hindu'', 11 July 2016}} எனப் பலவற்றிலும் குறளின் பாக்களும் சிந்தனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆற்றும் மேடை உரைகளனைத்திலும் குறட்பாக்களை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் குறளைப் பரவலாக எடுத்தாள்கின்றனர். இதுபோல் பேசிய தலைவர்களில் [[ராம் நாத் கோவிந்த்]],{{sfn|Ramakrishnan, ''The Hindu'', 1 February 2020}} [[ப. சிதம்பரம்]],{{sfn|Sivapriyan, ''Deccan Herald'', 2 February 2020}} [[நிர்மலா சீதாராமன்]],{{sfn|Sivapriyan, ''Deccan Herald'', 2 February 2020}}{{sfn|PTI, ''Deccan Herald'', 1 February 2021}} [[மு. க. ஸ்டாலின்]].{{sfn|PTI, ''Deccan Herald'', 1 February 2021}} ஆகியோர் அடங்குவர். தமிழகத்தில் [[ஜல்லிக்கட்டு|ஜல்லிக்கட்டினை]] ஆதரித்துப் போராடியவர்கள் "காளைகளை தாங்கள் நேசிப்பதே அவ்விளையாட்டை தாங்கள் ஆதரிப்பதற்குக் காரணம்" என்று கூறியபோது அப்போதைய இந்திய அமைச்சர் [[மேனகா காந்தி|மனேகா காந்தி]] குறளை மேற்கோள் காட்டித் "திருக்குறள் [[விலங்கு வன்கொடுமை]]யை என்றும் ஆதரிப்பதில்லை" என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கூற்றை மறுத்துரைத்தார்.{{sfn|Gandhi, ''New Delhi Times'', 27 March 2017}} இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோதி]] 2020-ல் இந்தியப் படைகளிடம் தாமாற்றிய உரை உட்படப் பல நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.{{sfn| PTI, ''Business Line'', 3 July 2020}} இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் அறிக்கையான "2020 இந்தியப் பொருளாதார மதிப்பாய்வு" தனது அறிக்கையில் குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் அதிகமாகச் சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.{{sfn|''Business Today'', 31 January 2020}}{{sfn|''Outlook'', 31 January 2020}}{{sfn|TNN, ''The Times of India'', 1 February 2020}}
 
===கோயில்களும் நினைவிடங்களும்===
வரிசை 420:
வள்ளுவருக்கு மேலும் பல கோயில்கள் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை தமிழகத்தில் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்திலுள்ள]] [[திருச்சுழி]]{{sfn|Kannan, ''The New Indian Express'', 11 March 2013}} [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள]] [[பெரிய கலையம்புத்தூர்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள]] [[தொண்டி]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள]] [[வில்வாரணி]] ஆகிய ஊர்களும் [[கேரளா|கேரள மாநிலத்தில்]] [[எர்ணாகுளம் மாவட்டம்|எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள]] [[கஞ்சூர்|கஞ்சூர் தட்டன்பாடி]], [[இடுக்கி மாவட்டம்|இடுக்கி மாவட்டத்திலுள்ள]] [[சேனாபதி]] ஆகிய ஊர்களும் ஆகும்.{{sfn|Vedanayagam, 2017|p=113}} இவற்றில் மயிலாப்பூர், திருச்சுழி உள்ளிட்ட இடங்களில் வள்ளுவர் சைவ மதத்தினரால் 64-ஆவது [[நாயன்மார்|நாயன்மாராகப்]] போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.{{sfn|Kannan, ''The New Indian Express'', 11 March 2013}}{{sfn|Bhatt, 2020}}
 
1976-ஆம்ம் ஆண்டு [[சென்னை]]யில் குறளையும் அதன் ஆசிரியரையும் நினைவு கூறும் விதமாக [[வள்ளுவர் கோட்டம்]] கட்டப்பட்டது.{{sfn|Waghorne, 2004|pp=124–125}} இந்நினைவிடத்தின் முக்கிய அம்சமாக [[திருவாரூர்]] தேரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 39 மீட்டர் (128 அடி) உயரத் தேர் விளங்குகிறது. இதனுள் ஆளுயர வள்ளுவர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இத்தேரைச் சுற்றிலும் பளிங்குக் கற்களில் குறட்பாக்கள் பதிப்பிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.{{sfn|Waghorne, 2004|pp=124–125}} இந்நினைவிடத்தின் பிரதான வளாகத்தில் 1,330 குறட்பாக்களும் கல்வெட்டுகளாகச் செதுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.{{sfn|Kabirdoss, ''The Times of India'', 18 July 2018}}
 
வள்ளுவரின் சிலைகள் உலக அளவில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றில் முக்கியமானவை [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]], சென்னை, [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[விசாகப்பட்டினம்]], [[ஹரித்வார்]], [[புத்தளம்]], [[சிங்கப்பூர்]], [[இலண்டன்]], [[தாய்வான்]] ஆகிய இடங்களிலுள்ள சிலைகளாகும்.{{sfn|Vedanayagam, 2017|pp=110–111}}{{sfn|Renganathan, ''The Hindu'', 29 July 2017}} இவற்றுள் மிக உயரமான சிலை கன்னியாக்குமரியில் [[வங்கக் கடல்]], [[அரபிக் கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடமான [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய தீபகற்பத்தின்]] தென்முனையில் 2000-ஆம்ம் ஆண்டு நிறுவப்பட்ட 41 மீட்டர் (133 அடி) உயரக் கற்சிலையாகும்.{{sfn|''The Hindu'', 2 January 2000}} இச்சிலை தற்போது இந்தியாவின் 25-ஆவது பெரிய சிலையாகும். 1968-ஆம்ம் ஆண்டு ஜனவரி 2 அன்று தமிழக அரசு சென்னையில் நடந்த [[உலகத் தமிழ் மாநாடு|உலகத் தமிழ் மாநாட்டை]] முன்னிட்டு சென்னை [[மெரினா கடற்கரை]]யில் நிறுவிய பல ஆளுயரச் சிலைகளில் வள்ளுவரின் முழு உருவச் சிலையும் ஒன்றாகும்.{{sfn|Muthiah, 2014|p=172}}
 
== மரபுத் தாக்கம் ==
வரிசை 431:
தமிழ் மொழியில் அதிகம் சுட்டப்படும் இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகிறது.{{sfn|Maharajan, 2017|p=19}} பண்டைய நூல்களான [[புறநானூறு]], [[மணிமேகலை]], [[சிலப்பதிகாரம்]], [[பெரிய புராணம்]], [[கம்பராமாயணம்]], [[திருவள்ளுவமாலை]] போன்ற அனைத்தும் வள்ளுவராலேயே பெயரிட்டு அழைக்கப்படாத குறளைப் பல்வேறு சிறப்புப் பெயர்களிட்டு தங்களது பாடல்களில் சுட்டுகின்றன.{{sfn|Jagannathan, 2014|pp=16–30}} குறளின் வரிகளும் சிந்தனைகளும் [[புறநானூறு|புறநானூரில்]] 32 இடங்களிலும், [[புறப்பொருள் வெண்பாமாலை]]யில் 35 இடங்களிலும், [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]] ஓரிடத்திலும், [[பத்துப்பாட்டு|பத்துப்பாட்டில்]] ஓரிடத்திலும், [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] 13 இடங்களிலும், [[மணிமேகலை]]யில் 91 இடங்களிலும், [[சீவக சிந்தாமணி]]யில் 20 இடங்களிலும், [[வில்லிபாரதம்|வில்லிபாரதத்தில்]] 12 இடங்களிலும், [[திருவிளையாடற் புராணம்|திருவிளையாடற் புராணத்தில்]] 7 இடங்களிலும், [[கந்தபுராணம்|கந்தபுராணத்தில்]] 4 இடங்களிலும் சுட்டப்படுகின்றன.{{sfn|Perunchithiranar, 1933|p=247}} கம்பராமாயணத்தில் [[கம்பர்]] சுமார் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் குறளைச் சுட்டுகிறார்.{{sfn|Desikar, 1975}}{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=369}} இந்தியாவிலும் உலக அளவிலும் [[சைவ உணவு|சைவ]], [[நனிசைவம்|நனிசைவ]], மற்றும் தாவர உணவுகள் பற்றிய மாநாடுகளில் பரவலாகச் சுட்டப்படும் நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது.{{sfn|Sanjeevi, 1973|pp=10–16}}{{sfn|Maharajan, 2017|pp=71–72}}
 
[[File:KuralDiscourse.jpg|thumb|right|சென்னையில் 2019-ஆம்ம் ஆண்டு நடந்த ஒரு குறள் சொற்பொழிவு.]]
 
ஆங்கிலேய ஆட்சியின் போது திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.{{sfn|TNN, ''The Times of India'', 26 July 2017}} ஆயின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெறும் 275 குறட்பாக்கள் மட்டுமே மூன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிச் சிறார்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.{{sfn|Ashok, ''Live Law.in'', 1 May 2016}} [[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரத்திற்குப்]] பின்னரும் பல ஆண்டுகளாக குறளைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் இருந்து வந்தன.{{sfn|Saravanan, ''The Times of India'', 27 April 2016}} 2016-ஆம்ம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம்ம் தேதி [[சென்னை உயர்நீதிமன்றம்]] "அறம் பிறழாத குடிமக்களைக் கொண்டதாக இந்நாட்டினை ஆக்கவேண்டும்" என்று பணித்து 2017–2018 கல்வியாண்டு முதல் குறளின் முதல் இரண்டு பால்களிலுள்ள 108 அதிகாரங்களில் காணப்படும் 1,080 குறட்பாக்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்ற உத்தரவினைப் பிறப்பித்தது.{{sfn|Saravanan, ''The Times of India'', 27 April 2016}}{{sfn|''India Today'', 27 April 2016}} மேலும் "வாழ்வியலுக்குத் தேவையான அறங்களையும் அறிவினையும் குறளுக்கு நிகராக நல்கக்கூடிய வேறு ஒரு சமய நூலோ மெய்யியல் நூலோ எங்குமில்லை" என்று கூறி உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பினை நல்கியது.{{sfn|''The Hindu'', 27 April 2016}}
 
வரலாற்றில் பலரை அகிம்சையின் வழியில் திருக்குறள் பயணிக்க வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. குறளின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு ஒன்றைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக [[லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்க்கு]] வள்ளுவரின் இன்னா செய்யாமை அதிகாரம் பற்றித் தெரிய வந்ததும் அது வன்முறையை எதிர்க்கும் டால்ஸ்டாயின் சிந்தனைகளுக்கு வலுசேர்த்தது. தனது பொதுவாழ்வின் துவக்கத்தில் [[மகாத்மா காந்தி]] டால்ஸ்டாயிடம் அறிவுரை கேட்க, தனது "[[எ லெட்டர் டு எ இந்து|ஒரு இந்துவுக்கு வரைந்த மடல்]]" (''A Letter to a Hindu'') என்று தலைப்பிட்ட ஒரு கடிதம் வாயிலாக டால்ஸ்டாய் வள்ளுவரது இச்சிந்தனைகளை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்து அவரை அகிம்சை வழியில் நின்று சுதந்திரப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.{{sfn|Rajaram, 2009|pp=xviii–xxi}}{{sfn|Tolstoy, 1908}} அவ்வறிவுரையின் படி காந்தி தனது சிறைவாழ்வின் போது திருக்குறளைப் படிக்கத் துவங்கி அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போர் புரிவதென்று முடிவெடுத்தார்.{{sfn|Lal, 1992|pp=4333–4334}} தனது இளவயதில் முதலே குறளின்பால் ஈர்க்கப்பட்ட [[இராமலிங்க அடிகளார்|'வள்ளலார்' இராமலிங்க அடிகளார்]], கொல்லாமையையும் புலால் மறுப்பினையும் மக்களுக்கு வலியுறுத்தி அகிம்சையையும் ஜீவகாருண்யத்தையும் மக்களிடையே பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.{{sfn|Subbaraman, 2015|pp=39–42}}{{sfn|Sivagnanam, 1974|p=96}}
வரிசை 469:
'''k.''' {{Note label|K|k|none}} ஒரு செய்யுளின் பொருளைத் தற்கால மொழிநடையில் விளக்கிக் கூறுவதே உரை எனப்படும். இது இந்திய மரபில் "பாஷ்யம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆழமாக அலசி ஆராய்ந்ததன் விளைவாக அச்செய்யுளின் ஆழ்பொருளைக் கண்டுணர்ந்த அறிஞர்களால் எழுதப்படுவதாகும்.{{sfn|Monier-Williams, 2002|p=755}}{{sfn|Karin Preisendanz, 2005|pp=55–94}}{{sfn|Kane, 2015|p=29}}
 
'''l.''' {{Note label|L|l|none}} 1967-ஆம்ம் ஆண்டு தேதியிட்ட [[தமிழ்நாடு அரசு]], அரசு ஆணை எண் 1193.{{sfn|Sriram Sharma, 2018|pp=41–42}}
 
'''m.''' {{Note label|M|m|none}} [[சென்னை]] [[இராயப்பேட்டை]]யிலுள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ள கிணற்றின் சுவரில் காணப்படும் கல்வெட்டு [[எல்லீசன்|எல்லீசனின்]] வள்ளுவரின் மீதான பற்றைப் பறைசாற்றுவதாக உள்ளது. இக்கிணறானது அப்போது சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க வேண்டி எல்லீசனின் உத்தரவின் படி 1818-ஆம்ம் ஆண்டு வெட்டப்பட்ட 27 கிணறுகளில் ஒன்றாகும். இந்நீண்ட கல்வெட்டில் எல்லீசன் வள்ளுவரைப் புகழ்ந்துரைத்து தனது குடிநீர் பஞ்சத்தைக் களையும் செயற்பாட்டினை ஒரு குறட்பாவினைக் கொண்டு விளக்குகிறார். எல்லீசன் சென்னை நாணயகத்தின் தலைவராக இருந்தபோது வள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். எல்லீசனின் கல்லறையில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டில் அவரது குறள் உரையைப் பற்றிய குறிப்பையும் காணமுடிகிறது.{{sfn|Mahadevan, n.d.}}{{sfn|Polilan et al., 2019|pp=776–778}}
 
'''n.''' {{Note label|N|n|none}} கல்வெட்டில் காணப்படும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட செய்யுள் பின்வருமாறு (எல்லீசன் எடுத்தாளும் குறட்பா சாய்வெழுத்துக்களில் உள்ளன):{{sfn|Polilan et al., 2019|pp=776–778}}{{sfn|Iraikkuruvanar, 2009|pp=90–91}}<br /> {{lang|ta|சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்}} | {{lang|ta|ஆழியில் இழைத்த வழகுறு மாமணி}} | {{lang|ta|குணகடன் முதலாக குட கடலளவு}} | {{lang|ta|நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்}} | {{lang|ta|பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே}} | {{lang|ta|பண்டாரகாரிய பாரம் சுமக்கையில்}} | {{lang|ta|புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்}} | {{lang|ta|தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்}} | {{lang|ta|திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய்}} | ''{{lang|ta|இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்}}'' | ''{{lang|ta|வல்லரணும் நாட்டிற் குறுப்பு}}'' | {{lang|ta|என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து}} | {{lang|ta|ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வரு}} | {{lang|ta|..றாச் செல்லா நின்ற}} | {{lang|ta|இங்கிலிசு வரு 1818ம் ஆண்டில்}} | {{lang|ta|பிரபவாதி வருக்கு மேற் செல்லா நின்ற}} | {{lang|ta|பஹுதான்ய வரு த்தில் வார திதி}} | {{lang|ta|நக்ஷத்திர யோக கரணம் பார்த்து}} | {{lang|ta|சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு}} | {{lang|ta|துரவு கண்டு புண்ணியாஹவாசநம்}} | {{lang|ta|பண்ணுவித்தேன்}}.
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது