மோனோ சோடியம் குளூட்டாமேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
[[Image:Monosodium glutamate crystals.jpg|thumb|right|300px|படிகப் பொடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட். இதனை மோசோகு (MSG) என்று சுருக்கமாக அழைப்பதுண்டு]]
 
'''மோனோ சோடியம் குளூட்டாமேட்''' (Monosodium glutamate) அல்லது '''ஒற்றை சோடியம் குளூட்டாமேட்''' என்று அழைக்கப்படும் வேதிப்பொருள் [[குளூட்டாமிக் காடி]] என்னும் ஓர் [[அமினோ காடி]]யின் ஒரு சோடிய உப்பு. இது ஒற்றை சோடிய அணுவும், ஐந்து [[கரிமம்|கரிம]] அணுக்களும், ஒரு நைதரசன், நான்கு ஆக்சிசன், மூன்று ஐதரசன் அணுக்களும் கொண்ட ஒரு வேதியியல் சேர்மப்பொருள் (C<sub>5</sub>H<sub>8</sub>NNaO<sub>4</sub>). [[குளூட்டாமிக் காடி]] மாந்தர்களுக்கு அடிப்படைத்தேவை என்றில்லாத ஓர் அமினோகாடி ஆகும். மோனோசோடியம் குளூட்டாமேட் உணவில் சுவைகூட்டி அல்லது [[சுவையூட்டி]]யாக சேர்க்கப்படும் பொருள். இது தரும் சுவையை [[உமாமி]] என்று கூறுகிறார்கள். இது தமிழில் துவர்ப்பு என்னும் சுவையை ஒத்தது. இப்பொருளை [[சப்பான்|நிப்பானிய]] வணிக நிறுவனமாகிய ''அச்சினமோட்டோ'' (''Ajinomoto'') பெருமளவில் உருவாக்கி விற்கின்றது. வெட்டிசின் (''Vetsin''), ஆக்சன்ட் (''Accent'') ஆகிய நிறுவனங்களும் உருவாக்கி விற்கின்றன. <u>மோ</u>னோ <u>சோ</u>டியம் <u>கு</u>ளூட்டாமேட்டை ''மோசோகு'' அல்லது ''எம்.எஸ்.ஜி'' (MSG) என்னும் முதலெழுத்துச் சொல்லாலும் குறிக்கப்படும். மோனோ சோடியம் குளூட்டாமேட் பல பருப்புகளிலும், கடல்வாழ் தாவரங்கள் சிலவற்றிலும் இருந்தாலும் [[1907]] இல் தான் தனியாக பிரித்தெடுத்தார்கள். 1909 இல் நிப்பானிய அச்சினமோட்டோ நிறுவனம் இதற்கான படைப்புக் [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] [[1909]] இல் பெற்றது. தூய வடிவில் மோனோ சோடியம் குளூட்டாமேட் பார்ப்பதற்கு வெள்ளையான பொடி போல் காட்சி தருகின்றது (படத்தைப் பார்க்கவும்). நீரிலோ உமிழ்நீரிலோ கரைந்திருக்கும் பொழுது இது பிரிந்து [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட சோடியமாகவும், எதிர்மின்மம் கொண்ட குளூட்டாமேட்டாகவும் மாறுகின்றது. குளூட்டாமேட் என்பது எதிர்மின்மம் கொண்ட குளூட்டாமிக் காடி. இக் காடி இயற்கையில் கிடைக்கும் ஓர் [[அமினோ காடி]]. மோனோ சோடியம் குளூட்டாமேட்டின் ஒருங்கு செய்த அமையக் குறி (Harmonized System Code) எனப்படும் [[எச்.எசு குறி]] (HS code) 29224220 கொண்டது. உணவில் சேர்க்கப்படும் பொருட்களின் வரிசையில் இதன் ஈ-எண் (E number), E621 ஆகும்.
 
== வேதியியல் பண்புகளும் உற்பத்தியும் ==
"https://ta.wikipedia.org/wiki/மோனோ_சோடியம்_குளூட்டாமேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது