காடவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
BalajijagadeshBot (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2750719 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''காடவர்கள்''' எனப்படுவோர் [[கிபி]] [[13ம் நூற்றாண்டு|13]], [[14ம் நூற்றாண்டு|14]]-ம் நூற்றாண்டுகளில் [[தென்னிந்தியா]]வின் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர். [[பல்லவர்]]களோடு தொடர்புடைய இவர்கள் [[கடலூர்]] பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.
 
[[முதலாம் கோப்பெருஞ்சிம்மன்]], [[இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன்]] ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், [[மூன்றாம் இராசராசன்]], [[மூன்றாம் இராசேந்திரன்]] ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த [[சோழர்| சோழப்]] பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். [[வட ஆற்காடு|வட ஆற்காட்டிலும்]], [[தென் ஆற்காடு|தென் ஆற்காட்டிலும்]], [[செங்கற்பட்டு|செங்கற்பட்டிலும்]] இவ்விரு மன்னர்கள் பலக் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களை]] விட்டுச் சென்றுள்ளனர்.
 
==தோற்றம்==
[[மகேந்திரவர்மன்|மகேந்திரவர்மன் I]], [[முதலாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன் I]], [[இரண்டாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன் II]] ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் '''காடவன்''' என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் '''காடவர்''', '''தொண்டையார்''', '''காடுவெட்டி''' என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள். பல்லவமல்லன் என்றழைக்கப்பட்ட [[இரண்டாம் நந்திவர்மன் | நந்திவர்மன் II]] 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான்.
 
==வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/காடவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது