பொது மரபுவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

239 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
ஒரு [[உயிரினம்|உயிரினக்]] குழுவானது பொது மூதாதையொன்றைக் கொண்டிருப்பின் அக்குழு '''பொது மரபுவழி'''யைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும். உயிரியலில், ''முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு'' (theory of universal common descent), பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிலிருந்தே உருவாகின என்று கூறுகிறது.
 
[[Image:Charles Darwin aged 51.jpg|thumb|200px|''இனங்களின் தோற்றம்'' நூல் வெளியிடப்பட்ட காலத்தில் டார்வினின் தோற்றம்.]]
 
பரிணாமம், அல்லது கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையிலான '''முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு''' [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வினால்]] ''இனங்களின் தோற்றம்'' (1859) (The Origin of Species) மற்றும் ''மனிதனின் மரபுவழி'' (1871) (The Descent of Man) ஆகிய அவரது நூல்களில் முன்மொழியப்பட்டது. இக்கோட்பாடு இன்று உயிரியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் தற்போது வாழும் எல்லா உயிரினங்களினதும் [[இறுதியான முழுமைப் பொது மூதாதை]] (last universal common ancestor), அதாவது [[மிகக் கிட்டிய பொது மூதாதை]] (most recent common ancestor) ஏறத்தாள 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகவும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/33314" இருந்து மீள்விக்கப்பட்டது