"அயூப் கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

262 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
===தலைமைத் தளபதி===
[[Image:Ayubnewarmychief.jpg|thumb|180px|பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்பவரும் ஜெனரல் அயூப் கான் (1951)]]
1951 ஜனவரி 17ல் பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாக இருந்த [[டக்ளஸ் கிரேசி]] என்பவரின் இடத்துக்கு அயூப்கான் நியமிக்கப்பட்டர். இதன் மூலம் இப்பதவியை ஏற்ற முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த [[இஸ்கந்தர் மிர்சா]], அயூப் கானின் பதவி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. மிர்சா பின்னர் ஆளுனர் நாயகம் (Governor General) ஆகவும், 1956 மார்ச் 23ல் பாகிஸ்தான் குடியரசு ஆன பின்னர் சனாதிபதியாகவும் ஆனார். அயூப் கானின் பதவிக் காலத்தில் மூன்று மாதங்களே எஞ்சியிருந்தபோது, இஸ்கந்தர் மிர்சா இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். அயூப் கான் இராணுவச் சட்டத் தளபதி ஆக்கப்பட்டார். ஆனால், அயூப்கான் சதிப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி மிர்சாவைப் பதவியிலிருந்து அகற்றினார்.
 
===பாகிஸ்தான் சனாதிபதி (1958-1969)===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/333699" இருந்து மீள்விக்கப்பட்டது