முக்தி குப்தேசுவர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
இங்கு கருவறையில் 13 ஆவது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. ஏனைய 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்களும் இங்கு உள்ளன. அவை தவிர சிவனின் உருத்திர நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 108 லிங்கங்களும் 1008 சஹஸ்ரநாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் இங்கு உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் சிறிய கோயில்கள் இங்குள்ளது. அதாவது முக்தி குப்தேஸ்வரர் கோயிலுக்குள் 1128 சிறிய கோயில்கள் உள்ளன. இது மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாகும் கருவறையில் 10 மீட்டர் ஆழமுள்ள ஒரு நிலவறையமைப்பு உள்ளது. அதில் 'ஓம் நமசிவாய' என்று உலகம் முழுவதிலுமுள்ள 2 மில்லியன் பக்தர்கள் தத்தமது கைபட எழுதியவை உள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நதிகள் உட்பட 81 நதிகளிலும் 5 சமுத்திரங்களிலும் பெறப்பட்ட நீரும், 8 பெறுமதி வாய்ந்த உலோகங்களும் ஞானிகள் மற்றும் முக்கியமானவர்களது நல்லாசிகளும் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மகாதேவ மந்திருக்கு அருகில் மாதா மந்திர், ராம்பரிவார் மந்திர், கணேஷ மந்திர் ஆகியனவும் உள்ளன.
==பூஜை நேரங்கள்==
முக்தி குப்தீஸ்வரர் மந்திர், வார நாட்களில் 10:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலையில் 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் திறந்திருக்கிறது. வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 10:00 முதல் பகல் 1:00 வரையும் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரையும் திறந்திருக்கிறது. தினமும் காலையில் புரோகிதரால் இந்த 13 ஆவது ஜோதிர்லிங்கம் உட்பட 1128 சிவ வடிவங்களுக்கும் கிரியாபூர்வமாக உணவு படைக்கப்படுகிறது.
==வெளி இணைப்புக்கள்==
[http://www.muktigupteshwar.org/ முக்தி குப்தேஷ்வர் மந்திர் இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/முக்தி_குப்தேசுவர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது