பாலுறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
'''பாலுறவு''' (உடலுறவு) எனப்படுவது பாலியல் ரீதியாக இனப்பெருக்கும் விலங்குகள் தம் பாலுறுப்புக்களைப் பயன்படுத்தி உறவு கொள்ளுதலாகும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமின்றி இன்பத்துக்காகவும் பாலுறவு நடைபெறுகிறது. வழக்கமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான புணர்ச்சி தவிர [[ஓரினச்சேர்க்கை]]யிலும் பாலுறவு நடைபெறுகிறது. [[வாய்வழிப் பாலுறவு]], [[குதவழிப் பாலுறவு]] போன்றன இன்பத்துக்காக மேற்கொள்ளப்படும் பாலுறவு நடவடிக்கைகளாகும்.
 
== வகைகள் ==
பாலியல் செயற்பாடு பல வழிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒருவர் (தானியக்க சிற்றின்பவியல் எனலாம்) சுய இன்பம் அல்லது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களுடன் பெண்ணுறுப்பு வழி பாலுறவு, குதவழிப் பாலுறவு, வாய்வழிப் பாலுறவு அல்லது பரஸ்பர சுய இன்பம் போன்ற வழிகளைக் குறிக்கும். பாலுறவு என்பது இருவருக்கிடையிலான உட்செலுத்துதலைக் குறிக்கலாம், ஆனால் இந்த வரையறை வேறுபடலாம். இரண்டிற்கு மேற்பட்டவர்கள் பாலியல் நடவடிக்கை மேற்கொண்டால், அது குழுப் பாலுறவு எனப்படும். தானியக்க சிற்றின்பச் செயற்பாடு என்பது செயற்கை ஆண்குறிகள், அதிரும் பாலியல் மொம்மைகள், குத அடைப்பான்கள், வேறு பாலியல் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றினூடாகவும் இடம்பெறும். மேலும், இவற்றை தன் பங்காளியுடனும் சேர்த்துச் செய்யலாம்.
 
பாலியல் செயல்பாடுகளை பாலினம், பங்கேற்பாளர்களின் பாலியல் நாட்டம், பங்குகொள்பவர்களுக்கிடையேயான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். உதாரணமாக, உறவுகள் என்பது திருமணம் நெருங்கிய பங்காளிகள், சாதாரண பாலியல் பங்காளிகள் அல்லது அறிமுகமற்றவர்களுடனாக இருக்கலாம். பாலியல் செயல்பாடு வழக்கமானதாகவோ அல்லது திடீரென ஏற்பட்டதாகவோ, பாலியல் நெறிபிறழ்வு நடவடிக்கைகளுக்காகவோ (அடையாளக் காமம், துன்புறுத்தல், அடிமைப்படுத்தல், அடிமையாதல் போன்றனவாகவோ) அமையலாம். அடையாளக் காமம் என்பது குறிப்பிட்டசில உடல் உறுப்புகளான பெரிய மார்பகங்கள், தொப்புள்கள் அல்லது பாத வழிபாடு போன்றவற்றின் மீதான விருப்பம் முதல் கொண்டு பலவிதமானதாகக் காணப்படும். பொருள் மீதான விருப்பம் பொதுவாக காலணிகள், உள்ளாடை, தோல் அல்லது இரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் ஏற்படுகிறது. சில வழக்கமற்ற தானியக்க சிற்றின்ப முறைகள் ஆபத்தானவையாகலாம். சிற்றின்ப மூச்சுத்திணறல் மற்றும் சுய அடிமைத்தனம் ஆகியவை இவற்றில் அடங்கும். இது காயம் அல்லது இறப்புக்கான சாத்தியக்கூறுகளை பங்காளியுடன் செய்யும்போதும் ஏற்படுத்தவல்லது. அடையாளக் காமம் (முறையே மூச்சுத் திணறல் மற்றும் அடிமைத்தனம்)
உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல., உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம்...
 
பாலியல் செயல்பாடு என்பது வழமையானதாக இருக்கலாம், அதாவது பங்கேற்பாளர்கள் இருவரும் பங்கேற்க ஒப்புக்கொள்வதாலோ, அவர்களுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய வயதுடையவர்களாகவோ இருக்கலாம். இல்லாவிடில், பலவந்தமாக அல்லது வலுக்கட்டாயமாக நடைபெறலாம். இது பெரும்பாலும் பாலியல் வன்முறை அல்லது வன்புணர்வு என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்களிலும் நாடுகளிலும், பங்கேற்பவர்களின் வயது, பாலினம், திருமண நிலை அல்லது பிற காரணிகளைப் பொறுத்து சட்டபூர்வமானது அல்லது சட்டவிரோதமானது பாலியல் செயல்பாடு ஆகலாம்.
மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை.
 
== இனச்சேர்க்கை உத்திகள் ==
பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றால் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
பரிணாம உளவியல் மற்றும் நடத்தை சூழலியல் ஆகியவற்றில், மனித இனச்சேர்க்கை உத்திகள் என்பது மற்றவரை ஈர்க்கவும், தேர்ந்தெடுக்கவும், இனச்சேர்க்கைக்குத் தக்கவைக்கவும் பயன்படுத்தப்படும் நடத்தைகளின் தொகுப்பாகும். இனப்பெருக்கம் உத்திகள் இனச்சேர்க்கை உத்திகளுக்கு மேலாகச் செல்கிறது.
 
மற்ற விலங்குகளுடன் தொடர்புபட்டுப்பார்க்கும்போது, மனித இனச்சேர்க்கை உத்திகள் அவர்களின் கலாச்சார தன்மைகளான திருமணம் பந்தம் ஆகியவற்றால் தனித்துவமானது. மனிதன் நீண்டகால நோக்கத்துடன் நெருங்கிய உறவு, திருமணம், சாதாரண உறவு அல்லது நட்பு ஆகியவற்றை நாடலாம். பலமிக்க மனித இயக்கங்களில் ஒள்றாக உறவுக்கான மனித விருப்பம் காணப்படுகின்றது. இது மனித இயல்பின் ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். மேலும் இது பாலியல் இயக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். மனித இனச்சேர்க்கை செயல்முறை சமூக மற்றும் கலாச்சாரச் செயல்முறைகளை உள்ளடக்கியது.
 
== பாலுணர்ச்சியைத் தூண்டுதலின்போது உடலியல் எழுச்சி நிலைகள் ==
பாலுணர்ச்சியைத் தூண்டுதலின்போது உடலியல் செயற்பாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிட்டத்தட்ட மிகவும் ஒத்தவையாகவும் நான்கு கட்டங்களையும் கொண்டதாகவும் இருக்கும்.
 
# உற்சாக கட்டத்தின் போது, பாலியல் உறுப்புகளிலும் அதைச் சுற்றியும் தசை விறைத்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதயம் துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரித்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆணும் பெண்ணும் உடலின் மேற்பகுதியிலும் மற்றும் முகத்திலும் தோல் சிவத்தலை அனுபவிப்பர் (இனப்பிரிவிற்கேற்ப மாறுபடும்). பொதுவாக, பெண்ணின் யோனி வழவழப்பாகி, பெண்குறிக் காம்பு வீக்கம் வீக்கமடையும்.  ஆணின் ஆண்குறி விறைத்துவிடும்.
# உணர்சிக் கட்டத்தின்போது, இதய துடிப்பும் தசை விறைப்பும் மேலும் அதிகரிக்கும். ஆணின் சிறுநீர்ப்பை மூடி, விந்துப் பாய்மம் சிறுநீரிடன் கலப்பதைத் தடுக்கும். பெண்ணின் பெண்குறிக் காம்பு சிறிது விலகக்கூடும். அத்துடன், ஆதிக வழவழப்பும் யோனியின் வெளிப்புறம் வீக்கமடைந்து தசைகள் இறுக்கமடைவதுடன் யோனி விட்டம் குறைவடையும்.
# புணர்ச்சிப் பரவசநிலையின்போது, சுவாசம் மிகவும் விரைவாகி, மற்றும் இடுப்புத் தசைகள் சுருக்கங்களைத் தொடங்கும். ஆணும் பெண்ணும் கீழ் இடுப்புத் தசைகளின் விரைவான சுருக்கத்தை அனுபவிப்பர். பெண்கள் பெரும்பாலும் கருப்பை மற்றும் யோனி சுருக்கங்களை அனுபவிப்பர். இந்த அனுபவத்தை தீவிரமாக இன்பம் என்று விவரிக்க முடியும். ஆனால் சுமார் 15% பெண்கள் ஒருபோதும் புணர்ச்சி பரவசநிலையை அனுபவிப்பதில்லை. பெரும்பாலான அறிக்கைகள் பெண்கள் போலி புணர்ச்சி பரவசநிலையை அடைகின்றனர் என்கின்றன.
# உறவுக்குப் பின்னான கட்டத்தின் போது, தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைந்து, உடல் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆயினும், பெண்கள் அதிக உணர்ச்சிக் கட்டத்தை அனுபவிப்பதில்லை என்று பொதுவாக அறிக்கையிடப்பட்டாலும், அவர்கள் மேலதிக புணர்ச்சிப் பரவசநிலையை அல்லது பல புணர்ச்சிப் பரவசநிலைகளை முதலாவது புணர்ச்சிப் பரவசநிலை அடுத்து விரைவில் அனுபவிக்க முடியும். சில ஆய்வுகள் கூறுகையில், ஆண்களும் பெண்களும் அதிக உணர்ச்சிக் கட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றது.
 
பாலியல் கோளாறு என்பது பாலியல் தூண்டுதலுக்கு உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ செயல்பட இயலாமைக் குறிக்கும். இது பாலியல் வெவ்வேறு கட்டங்களைப் பாதிக்கும். அக்கட்டங்கள ஆசை, உற்சாகம் மற்றும் புணர்ச்சி ஆகியனவாகும்.
 
ஊடகங்கள் பாலியல் கோளாற்றை பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புபடுத்துகிறது. ஆனால், உண்மையில் இது ஆண்களைவிட (31 சதவீதம்) பெண்களில் (43 சதவீதம்) பொதுவாகக் காணப்படுகிறது.
 
== உளவியல் வேறுபாடுகள் ==
பாலியல் செயல்பாடு இரத்த அழுத்தத்தையும் ஒட்டுமொத்த மன அழுத்தத்தினதும் அளவையும் குறைக்கும். இது பதற்றத்தை வெளிவிடவும், மனநிலையை உயர்த்தவும் உதவுகிறது. உயிர்வேதியியல் கண்ணோட்டத்தின்படி, வலி தணிப்புச்சுரப்புகள் வெளியீட்டுக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கவும் உடலுறவு உதவுகின்றது. உயிரியல் உளவியல் இதழ் ஆய்வின்படி, முந்தைய இரவில் உடலுறவில் ஈடுபட்ட ஆண்கள் மறுநாள் மன அழுத்த சூழ்நிலைகளுக்கு சிறப்பாக பதிலளித்தனர் என்கின்றது. உடலுறவு பொதுவாக மன அழுத்த நிவாரணியாக இருந்தாலும், பங்காளி தங்கள் செயல்திறனைப் பற்றி கவலைப்படும்போது, அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 
 
உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல., உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம்...
 
=== மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை. ===
மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம். சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர்.
பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றால் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம். சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர்.
 
சரி போகட்டும்., இந்த உடலுறவு கொள்வதால் மனித உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?. ஸ்பேனிஸ் ஆய்வாளர்களின் ஆய்வின் படி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்த பட்டியல் கீழே...
 
* '''நோய் எதிர்ப்பு சக்தி''' - குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பாலுறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது