சியார்ச் வாசிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 27:
மெக்சிக்கோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமெரிக்க கண்டத்தின் கட்டுப்பாட்டிற்கான போட்டியின் காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகியவை ஓஹியோ நதி பள்ளத்தாக்கின் மீது சச்சரவுகளைக் கொண்டிருந்தன. பிரஞ்சு கனடாவில் இருந்து அந்த பிராந்தியத்தில் நுழைந்து பூர்வீக அமெரிக்கர்களுடன் கூட்டுக்களை உருவாக்கியது. வர்ஜீனியாவில் உள்ள ஆங்கிலேய விசுவாச அரசாங்கம் இந்த ஊடுருவல்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. பிரித்தானிய இராணுவ தூதுவராக பணிபுரிந்த வாசிங்டன், தொலைதூரப் பகுதிக்கு தன் விருப்பத் தொண்டர்கள் குழுவை வழிநடத்திச் சென்று, எதிரி துருப்புக்களின் பலம் பற்றிய தகல்வகளை சேகரித்தார். பிரஞ்சு நாட்டினர் அந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். வாசிங்டன் திரும்பியபோது, மேலும் பிரெஞ்சு விரிவாக்கத்தை நிறுத்துவதற்காக ஓகியோ ஆற்றின் மீது கோட்டை கட்டப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். 1754 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், மிகவும் சிறப்பாக பயிற்சியளிக்கப்படாத, ஆயுதம் தாங்கிய 150 நபர்களைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். ஓகியோ ஆற்றின் கரையில் இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு ஒன்றை அமைக்கக் கிளம்பினார். இம்மரக்கட்டைத் தடுப்பினை அவசியமான கோட்டை என்று அழைத்தார். வழியில், அவர் ஒரு சிறிய பிரெஞ்சு படையை எதிர்கொண்டு உடனடியாக அதைத் தாக்கி, பத்து பிரெஞ்சு வீரர்களைக் கொலை செய்தார். இந்த மோதலின் போது வர்ஜீனியாவில் இருந்து வந்த அறியப்படாத இளம்போராளியும் துப்பாக்கியால் சுடப்பட்டார். பிரிட்டிஷ் தூதருக்கு ஒரு செய்தியை வழங்குவதற்காக துாதுவராக வந்த ஒரு பிரெஞ்சுப் படைவீரர் கொல்லப்பட்டதால், சர்வதேச நெறிமுறைகளின்படி வாசிங்டன் துாதரைக் கொன்ற கடுமையான விதிமீறலில் ஈடுபட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதுவே பிரெஞ்சு-செவ்விந்தியப்படைகளுக்கும் அமெரிக்கர்களுக்குமான போருக்கான முதல் காரணமாயிற்று. இந்த இடையூறுகளின் விளைவுகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை மற்றும் வெர்சாய்ஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றன. இப்பகுதியில் உள்ள பூர்வீக அமெரிக்கர்கள், பிரஞ்சு-அமெரிக்க முரண்பாட்டை உணர்ந்து, பிரஞ்சுக்கு ஆதரவளித்தனர். இந்த பிரெஞ்சு மற்றும் பூர்வீக அமெரிக்க கூட்டுப்படையானது, வாசிங்டன் மற்றும் அவரது படைப்பிரிவை திணறடித்தனர். அவரால் உருவாக்கப்பட்ட மரத்தடுப்புகளை சிதறடித்தனர். வாசிங்டன் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு சரணடையும் பத்திரத்தில் கையொப்பமிட்டு விட்டு அந்த இடத்தை விட்டுச் செல்ல பணிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் வாசிங்டன் இராணுவ நெறிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பிரான்சு தன் மக்களிடம் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது. பிரித்தானிய படையில் வாசிங்டனுக்கான பதவி உயர்வின் போது புறக்கணிக்கப்பட்டார். பிரிட்டிஷார் தன்னை அவமதித்து விட்டதாக உணர்ந்து வாசிங்டன் இராணுவத்திலிருந்து பதவி விலகினார்.
 
ஓகியோ ஆற்றின் பள்ளத்தாக்கில் இருந்து பிரஞ்சுப்படையை ஓட்ட சிறந்த வழி இராயல் இராணுவத்திலிருந்து துருப்புகளில் அனுப்பப்பட வேண்டும் என்று இங்கிலாந்து முடிவு செய்தது. அவர்களுடைய தளபதி ஜெனரல் எட்வர்ட் பிராடோக் மோதலில் அனுபவமுள்ள ஒரு உதவியாளர் தேவை என்பதால் பதவியை வாசிங்டனுக்கு வழங்கினார். ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து சாதகத்தைப் பெறுவதற்காக வாசிங்டன் இந்தப் பொறுப்பை ஆர்வமாக ஏற்றுக்கொண்டார். 1755 ஜூலையில், பிரித்தானியப்படை டுக்கென் கோட்டையில் (Fort Duquesne) பிரெஞ்சுப் படையை அணுகியது. பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியத் துருப்புக்கள் ஐரோப்பாவின் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளை விட மிகவும் வித்தியாசமாகப் போராடினார்கள் என்று வாசிங்டன் பிராடோக்கை எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. ஒரு சில நாட்களுக்குப் பிறகு, பிரித்தானிய படையை பூர்வீக அமெரிக்கப் படையினர் தாக்கி முற்றிலும் முறியடிக்கப்பட்டனர். வாசிங்டன் அமர்ந்து போரிட்ட இரு சுடப்பட்டிருந்த போதிலும், தைரியமாக போராடினார். பிராட்டோக் கொல்லப்பட்டார், அவரது பிரிட்டிஷ் துருப்புக்கள் மிரட்சியடைந்து காடுகளில் ஓடி ஒளிந்து கொண்டனர்.விட்டனர். வாசிங்டனின் மேலங்கி வரை நான்கு தோட்டாக்கள் உரசிச்சென்றன. உயிரோடு தப்பியது பெரிய செயலாயிற்று.<ref>{{cite web | url=https://millercenter.org/president/washington/life-before-the-presidency | title=George Washington: Life Before the Presidency | publisher=UVA MILLER CENTER | accessdate=27 அக்டோபர் 2017 | author=Stephen Knott}}</ref> 1755 ஆம் ஆண்டு ஆகஸ்டில், தனது 23 ஆம் வயதில் விர்ஜினாவினுடைய படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 400 மைல் நீளமுடைய எல்லைப்புறத்தைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் அவருக்கு ஒத்துழைப்பளிக்க விருப்பமில்லாத 700 ஒழுக்கக்கேடான காலணிய படைகளுடன் அனுப்பப்பட்டார். இது சலிப்பூட்டக்கூடிய பணியாக இருந்தது. 1757 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அவர் உடல்நலம் குறைந்து பேதியுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.biography.com/people/george-washington-9524786 | title=George Washington | publisher=Biography.com | accessdate=28 அக்டோபர் 2017}}</ref> தொடர்ந்து கடுமையாகப் பாடுபட்டும் ஆங்கிலேய இராணுவத்தில் உரிய பதவியளிக்கப்படாததால், 1758 ஆம் ஆண்டு டிசம்பரில் இவர் தனது பதவியிலிருந்து விலகினார்.<ref>{{cite web | url=https://www.whatsoproudlywehail.org/wp-content/uploads/2013/02/A-Short-Biography-of-George-Washington.pdf?x65350 | title=A Short Biography of George Washington | publisher=What So*Proudly*We hail | accessdate=28 அக்டோபர் 2017 | archive-date=2018-11-08 | archive-url=https://web.archive.org/web/20181108070214/https://www.whatsoproudlywehail.org/wp-content/uploads/2013/02/A-Short-Biography-of-George-Washington.pdf?x65350 | dead-url=dead }}</ref> 1753 முதல் 1758 வரையிலும் இவர் இராணுவத்தில் பணிபுரிந்த போது பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியப் போர்களில் தீவிரமாகப் பங்குபெற்றது இவருக்கு இராணுவ அனுபவத்தையும், புகழையும் தந்தது.<ref>{{cite book | title=The 100 | publisher=Citadel Press | author=Michael H Hart | pages=129}}</ref>
 
== அமெரிக்கப் புரட்சிக்கு முந்தைய காலம் (1759 - 1774) ==
"https://ta.wikipedia.org/wiki/சியார்ச்_வாசிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது