பேச்சு:பாரத ரத்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==தலைப்பு== ஒவ்வொரு மொழிக்கும் அததற்கே உரித்தான தனிச் சிறப்புகள் பல இருக்கலாம். எமது தமிழ் மொழிக்கும் அங்ஙனமே. பிறமொழிப் பெயர்களைத் தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
==தலைப்பு==
ஒவ்வொரு மொழிக்கும் அததற்கே உரித்தான தனிச் சிறப்புகள் பல இருக்கலாம். எமது தமிழ் மொழிக்கும் அங்ஙனமே. பிறமொழிப் பெயர்களைத் தமிழாக்கும் போது எந்நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் எங்ஙனம் தமிழ்ப்படுத்த வேண்டுமென்றும் எமது இலக்கண நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. இங்கே ''பாரத ரத்னா'' என்று வடமொழிச் சொல்லை அப்படியே ஒலிபெயர்ப்பது இலக்கணத்துக்குப் புறம்பானதும் தமிழைக் கொச்சைப்படுத்திச் சீரழிப்பதும் ஆகும். ஒன்றில் இப்பெயர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பில் இருக்க வேண்டும். கட்டுரையில் '''இந்திய மாமணி''' என்று மொழிபெயர்ப்பு வடிவம் வழங்கப்பட்டிருக்கிறது. அன்றேல் தமிழில் இலக்கணத்தை எதிர்த்துச் சிதைக்காமல் முறையாக '''பாரதவிரத்தினம்''' என்றோ '''பாரத இரத்தினம்''' என்றோ ஒலிபெயர்க்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமக்கு நினைத்தவாறெல்லாம் ஒலிபெயர்க்கவும் மொழிபெயர்க்கவும் முயலாமல், எம் வரலாற்றுச் சான்றோர் காட்டிய முறையில் எழுதும் போது எம் இனிய தமிழ் மொழி மெருகேறிச் செழிப்பாக வாழும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 10:50, 4 சனவரி 2022 (UTC)
:{{like}}--[[பயனர்:A-wiki-guest-user|A-wiki-guest-user]] ([[பயனர் பேச்சு:A-wiki-guest-user|பேச்சு]]) 10:09, 11 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பாரத_ரத்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாரத ரத்னா" page.