உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 339:
நீங்கள் எதற்காக விஞ்ஞான இருசொற் பெயரீட்டுப் பெயர்களை மீண்டும் மீண்டும் உங்களது நடையில் ஒலிபெயர்க்கிறீர்களென்பது தெளிவில்லை. அது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பானது. அவை இலத்தீன் எழுத்துக்களிலேயே இருக்க வேண்டும். அத்துடன் அவற்றுக்கென ஏற்கப்பட்ட முறை எதுவும் தமிழுலகில் கிடையவே கிடையாது. அவ்வாறிருக்கையில், நீங்கள் இவ்வாறு ஒலிபெயர்ப்பது மென்மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 07:28, 12 சனவரி 2022 (UTC)
:: ஒரு விலங்கின் அறிவியல் பெயரினை தமிழில் ஒலிப்பெயர்ப்பு செய்வது தவறு என்று எங்கு உள்ளது என தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பாடநூல்களில் எல்லாம் அறிவியல் பெயர் தமிழில் ஒலிபெயர்ப்பு செய்துதான் வழங்கப்படுகிறது. உம். Panthera tigris பான்தீரா டைகிரிஸ் என்பது புலியினைக் குறிப்பதாகும் (தமிழ்நாடு அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு விலங்கியல் பாடபுத்தகம். பக்கம் 37) ஆனால் ஒரு சிலர் தமிழில் எழுதுகிறேன் என குருவி குடும்பம் குருவி வரிசை குருவி பேரினம் என பொதுவாக அனைத்தையும் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர். இதுபோன்று மொழியாக்கம் செய்வதால்தான் குழப்பம் நிகழும். ஒலிபெயர்ப்பு செய்யாமல் அவ்வாறே ஆங்கிலத்தில் அதன் பெயர்களை விட்டுவிடுவதால் மொழிப்பெயர்ப்பு செய்வதன் பயன் என்ன? புரியவில்லை. (Oriolus என்பது பேரினப் பெயர் இதனை தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யக்கூடாது என்றால் இதன் தலைப்பினை ஆங்கிலத்தில் தமிழ் விக்கிப்பீடியா ஏற்றுக்கொள்ளுமா). விக்கிப்பீடியாவில் நீண்ட அனுபவமிக்க தங்களை போன்றவர்களிடம் இதுகுறித்து மீண்டும் மீண்டும் வாதிட விரும்பவில்லை, எனவே விலங்கினங்கள் தொடர்பான கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதை நிறுத்திக்கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 08:49, 12 சனவரி 2022 (UTC)
 
தமிழகப் பாடநூலில் எங்கே அவ்வாறு கூறுகிறார்கள் என்பதைக் காட்டுவீர்களா? இலத்தீன் எழுத்துக்களிலேயே விஞ்ஞான இருசொற் பெயரீட்டுப் பெயர்கள் இருக்க வேண்டும் என்பதே சர்வதேச நடைமுறை. நிருவாகிகள் இவரது சந்தேகத்தைத் தீர்த்தால் நல்லது. கவனிக்க: {{ping|செல்வா|Mayooranathan|kanags|AntanO|Ravidreams}}--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 10:48, 12 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:சத்திரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது