திரிபுரியின் காலச்சூரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 278:
வடக்கில், கசனவித்துகளின் படையெடுப்புகளால் பலவீனமடைந்த சந்தேலர்களின் இழப்பில் கங்கேயதேவன் தனது இராச்சியத்தை விரிவுபடுத்தினான். {{Sfn|R. K. Dikshit|1976|p=98}} இவன் சந்தேல மன்னன் விசயபாலனுக்கு எதிராப் போரிட்டு தோல்வியடைந்தான். {{Sfn|Sisirkumar Mitra|1977|p=88}} ஆனால் இறுதியில் [[வாரணாசி]], [[அலகாபாத்|பிரயாகை]] ஆகிய புனித நகரங்களின் மீது தனது கட்டுப்பாட்டை நீட்டித்தான். {{Sfn|V. V. Mirashi|1957|p=490}} இவனது ஆட்சியின் போது, கசனவீது தளபதி அகமது நியால்திஜின் கிபி 1033இல் வாரணாசியைத் தாக்கினான்.{{Sfn|R. K. Dikshit|1976|p=100}}
 
கங்கேயதேவனின் வாரிசான இலட்சுமிகர்ணன் (ஆட்சி. 1041-1073 பொ.ச.), வம்சத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தளபதி ஆவான். அண்டை நாடுகளுக்கு எதிராக பல வெற்றிகரமான ப் போர்களையடுத்து இவன் 'சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டான். கிழக்கில், இவன் [[அங்கம்]] , [[வங்காளம்|வங்கம்]] (நவீன [[வங்காளம்]]) மீது படையெடுத்தான். {{Sfn|V. V. Mirashi|1957|p=491}} வங்கத்தில், இவன் ஒரு [[சந்திர வம்சம், வங்காளம்|சந்திர வம்ச]] அரசனைத் தோற்கடித்தான். ஒருவேளை [[கோவிந்தச்சந்திரன் (சந்திர வம்சம்)|கோவிந்தச்சந்திர்னாக]] இருக்கலாம். {{Sfn|V. V. Mirashi|1957|p=491}} பின்னர், [[பாலப் பேரரசு|பாலப் பேரரசின்]] ஆட்சிப் பகுதிகளான [[கௌட பிரதேசம்|கௌடப் பகுதியையும்]] ஆக்கிரமித்தான். {{Sfn|V. V. Mirashi|1957|p=492}} இவனது படையெடுப்பு [[நாயபாலா்நாயபாலர்|நாயபாலனால்]] முறியடிக்கப்பட்டது. பௌத்தத் துறவி [[அதிசர்]] இரு அரசர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக திபெத்திய கணக்குகள் தெரிவிக்கின்றன. {{Sfn|Alaka Chattopadhyaya|1999|p=98}} நாயபாலனின் வாரிசான மூன்றாம் விக்ரகபாலனின் ஆட்சியின் போது இலட்சுமிகர்ணன் கௌடர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இரண்டு அரசர்களும் இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கையில் போரை முடித்துக்கொண்டனர். இதன்மூலம் இலட்சுமிகர்ணனின் மகள் யுவனாசிறீ ஒரு இளவரசனை மணந்தாள். {{Sfn|V. V. Mirashi|1957|p=492}}
 
தென்மேற்கில், இலட்சுமிகர்ணன் மேலைச் சாளுக்கிய மன்னன் [[முதலாம் சோமேசுவரன்|முதலாம் சோமேசுவரனுடன்]] முடிவற்ற போரில் ஈடுபட்டான். {{Sfn|V. V. Mirashi|1957|p=491}} மேலும், இவன் தென்கிழக்கில் [[சோழர்|சோழ]] மன்னன் [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜச் சோழனுடன்]] போரிட்டதாகவும் தெரிகிறது. {{Sfn|V. V. Mirashi|1957|p=491}} கிழக்கில், ஒரு கூர்ஜர மன்னனை தோற்கடித்தான். இவன் [[சோலாங்கிப் பேரரசு|சோலாங்கி]] அரசன் [[முதலாம் பீமதேவன்|முதலாம் பீமனுடன்]] அடையாளம் காணப்படுகிறான். {{Sfn|V. V. Mirashi|1957|p=491}}
"https://ta.wikipedia.org/wiki/திரிபுரியின்_காலச்சூரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது