புர்க்கினா பாசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
சிNo edit summary
வரிசை 96:
}}
[[படிமம்:Burkina-faso-dourtenga.jpg|thumbnail|right|புர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்]]
'''புர்க்கினா பாசோ''' (''Burkina Faso''; {{IPAc-en|uk|b|ɜːr|ˌ|k|iː|n|ə|_|ˈ|f|æ|s|oʊ}}, {{IPAc-en|audio=En-us-Burkina Faso.ogg|us|-|_|ˈ|f|ɑː|s|oʊ}})<ref>{{Cite web|url=http://www.oxfordlearnersdictionaries.com/definition/english/burkina-faso|title=burkina-faso noun – Definition, pictures, pronunciation and usage notes {{!}} Oxford Advanced Learner's Dictionary at OxfordLearnersDictionaries.com|website=www.oxfordlearnersdictionaries.com|access-date=20 November 2017}}</ref> என்பது [[மேற்கு ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு [[நிலம்சூழ் நாடு]] ஆகும். இது ஏறத்தாழ 274,200 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் எல்லைகளாக வடமேற்கில் [[மாலி]], வடகிழக்கில் [[நைஜர்]], தென்கிழக்கில் [[பெனின்]], தெற்கில் [[டோகோ]], [[கானா]], தென்மேற்கில் [[கோட் டிவார்]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் சூலை 2019 மதிப்பீட்டின் படி இதன் மக்கள்தொகை 20,321,378 ஆகும்.<ref name="worldpopulationreview.com">{{Cite web|url=https://worldpopulationreview.com/countries/burkina-faso-population|title=Burkina Faso Population 2021 (Demographics, Maps, Graphs)|website=worldpopulationreview.com}}</ref> முன்னர் மேல் வோல்ட்டா குடியரசு (1958–1984) என அழைக்கப்பட்ட இந்நாடு, 1984 ஆகத்து 4 இல் அரசுத்தலைவர் [[தோமசு சங்காரா]]வினால் "புர்க்கினா பாசோ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[வாகடூகு]] இதன் [[தலைநகரம்|தலைநகரமும்]], மிகப்பெரிய நகரமும் ஆகும்.
 
இன்றைய புர்கினா பாசோவில் உள்ள மிகப் பெரிய இனக்குழுவானது 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் குடியேறிய மோசி இனத்தவர் ஆவர். இவர்கள் ஊகடோகோ, தெங்கோடோகோ, யாத்தெங்கா போன்ற பலம்வாய்ந்த இராச்சியங்களை நிறுவினர். 1896-இல், இது பிரான்சிய மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக பிரான்சின் குடியேற்றநாடாக்கப்பட்டது. 1958 திசம்பர் 11 இல், மேல் வோல்ட்டா பிரான்சிய சமூகத்திற்குள் ஒரு சுயமாக ஆளும் குடியேற்ற நாடாக மாறியது. 1960 ஆகத்து 5 அன்று முழுமையான விடுதலை அடைந்து மோரிசு யமியோகோ அரசுத்தலைவரானார். இதன் ஆரம்ப ஆண்டுகளில், நாடு உறுதியற்ற தன்மை, வறட்சி, பஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு உட்பட்டிருந்தது. நாட்டின் வரலாற்றில் 1966, 1980, 1982, 1983, 1987, 1989, 2015, 2022 ஆம் ஆண்டுகளில் பல்வேறு இராணுவப் புரட்சிகளும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்துள்ளன. [[தோமசு சங்காரா]] 1982 முதல் 1987 ஆம் ஆண்டு பிலாசே கொம்போரே தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்படும் வரை நாட்டை ஆண்டார். கொம்போரே 2014 அக்டோபர் 31 அன்று பதவியிலிருந்து நீக்கப்படும் வரை நாட்டை ஆட்சி செய்தார். [[தோமசு சங்காரா|சங்காரா]]வின் தலைமையின் கீழ், அவர் நாட்டின் பெயரை புர்கினா பாசோ என்று பெயரிட்டார், அத்துடன் தேசிய அளவிலான [[எழுத்தறிவு]] பிரச்சாரம், விவசாயிகளுக்கு [[நிலச்சீர்திருத்தம்|நிலம் மறுபங்கீடு]], தொடருந்துப் பாதை, சாலைக் கட்டுமானம் மற்றும் சட்டத்திற்கு புறம்பான [[பெண் உறுப்பு சிதைப்பு]], [[கட்டாயத் திருமணம்]], [[பலதுணை மணம்]] ஆகியவற்றை நீக்கல் உள்ளடக்கிய ஒரு லட்சிய சமூக பொருளாதார திட்டங்களைத் தொடங்கினார்.<ref>{{cite news|url=https://www.nytimes.com/2014/10/31/world/africa/burkina-faso-protests-blaise-compaore.html|title=Violent Protests Topple Government in Burkina Faso|date=October 31, 2014|work=The New York Times}}</ref><ref>[http://www.aljazeera.com/news/africa/2014/06/tens-thousands-attend-burkina-faso-protest-20146102919189695.html Tens of thousands attend Burkina Faso protest, Protesters voice opposition to referendum that would allow Blaise Campaore to extend his presidential term], Al Jazeera (Reuters). Last updated: 1 June 2014 01:34.</ref><ref name="ReutersChe2">[https://www.reuters.com/assets/print?aid=USL17577712 Burkina Faso Salutes "Africa's Che" Thomas Sankara] by Mathieu Bonkoungou, [[ராய்ட்டர்ஸ்]], 17 October 2007</ref><ref name="UprightDVD">[http://newsreel.org/nav/title.asp?tc=CN0205 ''Thomas Sankara: the Upright Man''] by ''[[California Newsreel]]''</ref><ref name="Grila2">[https://web.archive.org/web/20120124093433/http://www.zcommunications.org/commemorating-thomas-sankara-by-farid-omar Commemorating Thomas Sankara] by Farid Omar, ''Group for Research and Initiative for the Liberation of Africa'' (GRILA), 28 November 2007</ref><ref name="DailyTelegraph">{{cite news|author=<!--Staff writer(s); no by-line.-->|title=Burkina Faso coup: military says it now controls country after arresting leaders|url=https://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/burkinafaso/11870962/Burkina-Faso-coup-military-says-it-now-controls-country-after-arresting-leaders.html|archive-url=https://archive.today/20150919023742/http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/burkinafaso/11870962/Burkina-Faso-coup-military-says-it-now-controls-country-after-arresting-leaders.html|url-status=dead|archive-date=19 September 2015|newspaper=[[த டெயிலி டெலிகிராப்]] (Online edition)|location=United Kingdom|date=17 September 2015|access-date=17 September 2015 }}</ref><ref name="BBC World News">{{cite web|url=https://www.bbc.com/news/world-africa-34334430|title=Burkina Faso coup: Michel Kafando reinstated as president|date=23 September 2015|work=BBC News |access-date=23 September 2015}}</ref>
 
[[2010கள்|2010களின்]] நடுப்பகுதியில் இருந்து இசுலாமியத் தீவிரவாத எழுச்சியால் புர்கினா பாசோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. "[[இசுலாமிய அரசு]]" (IS) அல்லது [[அல் காயிதா]]வுடன் ஓரளவு இணைந்த பல போராளிகள், [[மாலி]], [[நைஜர்]] வரையிலான எல்லைகளைத் தாண்டி செயல்படுகின்றனர். நாட்டின் 21 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 2022 சனவரி 24 அன்று இராணுவமும் அதன் "பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கம்" அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்தது. முன்னதாக, அரசுத்தலைவர் ரோச் மார்க் கபோரேயிற்கு எதிராக இராணுவம் சதிப்புரட்சியை நடத்தியது.
வரிசை 112:
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Burkina Faso|புக்கினா பாசோ}}
* [https://web.archive.org/web/20100915153509/http://www.gouvernement.gov.bf/ Premier Ministère], official government portal. {{in lang|fr}}
* [https://www.cia.gov/the-world-factbook/countries/burkina-faso/ Burkina Faso]. ''[[த வேர்ல்டு ஃபக்ட்புக்]]''. [[நடுவண் ஒற்று முகமை]].
* [https://web.archive.org/web/20080507010159/http://www.lefaso.net/ LeFaso.net], a news information site.
"https://ta.wikipedia.org/wiki/புர்க்கினா_பாசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது