கோபால கிருஷ்ண கோகலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

43 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''கோபால கிருஷ்ண கோகலே''' , CIE ({{lang-mr|गोपाळ कृष्ण गोखले}}) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) [[இந்தியா]]வில் [[ஆங்கிலேயர்]]களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே [[இந்திய தேசிய காங்கிரஸ்]]சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.
 
== பின்னணி மற்றும் கல்வி: ==
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று [[மஹாராஷ்டிரா]]வின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர்.
பல்கலைக்கழக [[கல்வி]]யைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.<ref>ஸ்டான்லி வோல்பெர்ட், ''திலக் அண்ட் கோகலே: ரெவொலூஷன் அண்ட் ரிஃபார்ம் இன் தி மேகிங் ஆஃப் மாடர்ன் இண்டியா'' , பெர்கெலி, யூ. கலிஃபோர்னியா (1962), 22.</ref> ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது..
 
== இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3384905" இருந்து மீள்விக்கப்பட்டது