மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
 
[[படிமம்:Greek vase with runners at the panathenaic games 530 bC.jpg|thumb|right|பண்டைய கிரேக்கத்தில் ஓட்ட வீரர்கள்]][[படிமம்:1896 Olympic marathon.jpg|thumb|left|1896 ஒலிம்பிக் போட்டி மாரத்தான் ஓட்ட வீரர்கள்]]
கி.மு. 490ல் நடந்த [[மாரத்தான் போர்|மாரத்தான் போரில்]] பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ்[[பிலிப்பிடீசு]] என்ற கிரேக்க வீரன், மாரத்தான் நகரில் இருந்து [[ஏதென்ஸ்|ஏதென்சுக்கு]], இடையில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து ஓடிச் சென்றான் என்றும் செய்தியைத் தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கிச் செத்தான் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை உண்மையென உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. [[எரோடோட்டசு]] என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, பெய்டிபைட்ஸ் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய ஒரு தூதுவன் ஆவார். பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. இது போன்ற குறிப்பு கி. பி. முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச்ச் என்பவரால் எழுதப்பட்ட "ஒன் தி குளோரி ஒவ் ஏதென்ஸ்" ''On the Glory of Athens'' என்ற நூலில் காணக்கிடைக்கிறது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கணிப்புப்படி மாரத்தான் போர்க்களத்தில் இருந்து ஏதென்சுக்கு உள்ள தொலைவு 34.5 கி.மீ அல்லது 21.4 மைல்கள் ஆகும்.
 
மாரத்தான் போட்டிகள் முதன்முதலில் 1896 நவீன ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மாரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது