சிரிக்கும் புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சிரிக்கும் புத்தர்''' (''Smiling Buddha'') என்பது [[இந்திரா காந்தி]] இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும். இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் [[பொக்ரான்]] என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்ததுவந்தன. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.<ref>^ a b "India's Nuclear Weapons Program - Smiling Buddha: 1974". Nuclear Weapon Archive. http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html.</ref>
 
===வரலாறு===
 
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று [[பாபா அணு ஆராய்ச்சி மையம்|பாபா அணு ஆராய்ச்சி மைய]]த்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒருஓர் அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். இதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]] ஆகிய நாடுகள் இந்திய அணுமின் திட்டத்துக்கு தொழிற்நுட்ப ஆதரவளித்த போது, அந்த தொழில் நுட்பத்தை போர் காரணங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. அவற்றை அணுகுண்டு செய்வதற்கு பயன்படுத்துவது அந்த நிபந்தனைகளை மீறும் செயலாகும். எனவே அணுகுண்டு சோதனையை “அமைதியான அணுக்கரு வெடிப்பு” (Peaceful nuclear explosion) என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. மேலும் [[புத்தர்]] பிறந்த புத்த பூர்ணிமா தினத்தில் இவ்வெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டதால் இதனை சூசகமாக சிரிக்கும் புத்தர் என்றும் அழைத்து வந்தனர்.
 
===இந்திய வல்லுனர்களின் குழு===
"https://ta.wikipedia.org/wiki/சிரிக்கும்_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது