பூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Herb-1.jpg|thumb|200px|பலவகைப் பூண்டுகள் வளர்ந்திருக்கும் காட்சி]]
[[படிமம்:Herb with Purple Flower.JPG|thumb|200px|பல்வேறு வகைப் பூண்டுகளிடையே ஊதாநிறப் பூக்களுடன் கூடிய பூண்டுத் தாவரம்]]
'''பூண்டு''' அல்லது '''பூடு''' என்பது [[தாவரம்|தாவர]] வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுகள் ஒரு [[மீட்டர்|மீட்டருக்கும்]] குறைவான உயரம் கொண்டவை. இவை [[பருவகாலத் தாவரம்|பருவகாலத் தாவரங்கள்]]. நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான [[இலை]], தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றனவிடும்.
 
பூண்டுகளில் [[ஓராண்டுத் தாவரம்|ஓராண்டுத் தாவரங்கள்]], [[ஈராண்டுத் தாவரம்|ஈராண்டுத் தாவரங்கள்]], [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுத் தாவரங்கள்]] என்னும் வகைகள் இருக்கின்றன. ஓராண்டுத் தாவர வகையைச் சேர்ந்த பூண்டுகள், ஓராண்டுக்குள் அவற்றின் வளரும் காலம் முடிவடைந்ததும் முற்றாகவே அழிந்து விடுகின்றன. ஈராண்டுத் தாவர வகைப் பூண்டுகளில், முதல் ஆண்டுப் பருவகால முடிவில் இலைகளும், தண்டுகளும் அழிந்தாலும், நிலத்துக்குக் கீழ் [[வேர்]]கள், [[கிழங்கு]]கள் போன்ற பகுதிகள் உயிருடன் இருக்கின்றன. அடுத்த பருவகாலத்தில் அவற்றில் இருந்து தண்டுகளும் இலைகளும் வளர்ந்து பூத்து, [[வித்து]]க்களை உருவாக்கியபின் இறந்துவிடுகின்றன. பல்லாண்டுப் பூண்டுகளில், நிலத்தின் கீழுள்ள சில பகுதிகள் பல ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை. ஒவ்வொரு பருவகாலத்திலும் புதிதாகத் தண்டுகளும், இலைகளும் உருவாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது