முப்பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: பராமரிப்பு using AWB)
No edit summary
 
[[வேதியியல்|வேதியியலில்]] '''முப்பிணைப்பு''' அல்லது '''மும்மைப் பிணைப்பு''' ''(Triple bond)'' என்பது இரண்டு [[அணு]]க்களுக்கு இடையேயான ஒரு [[வேதிப் பிணைப்பு]] வகையாகும். வழக்கமாக [[சகப்பிணைப்பு]] வகையிலான [[ஒற்றைப் பிணைப்பு]]களில் இரண்டு பிணைப்பு [[எலக்ட்ரான்]]கள் மட்டுமே பங்கேற்கும். ஆனால், முப்பிணைப்பில் ஆறு பிணைப்பு எலக்ட்ரான்கள் பங்கேற்கின்றன. இரண்டு [[கார்பன்]] அணுக்களுக்கிடையே காணப்படும் இத்தகைய முப்பிணைப்பைமுப்பிணைப்பைப் பொதுவாக [[ஆல்க்கைன்]]களில் காணமுடியும். இவைகளைத் தவிர [[சயனைடு]]கள் மற்றும் [[சமசயனைடு]]கள் போன்ற [[வேதி வினைக்குழு]]க்கள் இத்தகைய முப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. [[இருநைட்ரசன்]] மற்றும் [[கார்பனோராக்சைடு|கார்பன் ஓராக்சைடு]] போன்ற [[ஈரணு மூலக்கூறு]]களும் இவ்வகை முப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. அடிப்படை வேதி வாய்ப்பாட்டில் இரண்டு அணுக்களுக்கு இடையேயான முப்பிணைப்பை அவற்றின் குறியீடுகளுக்கு இடையில் மூன்று சிறிய இணைகோடுகள் வரைந்து குறிப்பிடுவர்(≡)<!--may be encoded on WP as &equiv;--> . முப்பிணைப்பை அடையாளப்படுத்த உதவும் கருவியாக [[அச்சுக்கலை]]யிலும் இந்தக் குறியீடே பயன்படுகிறது<ref>{{JerryMarch}}</ref><ref>''Organic Chemistry'' 2nd Ed. John McMurry</ref><ref>{{cite journal|doi=10.1002/chem.200401299|title=Triple-Bond Covalent Radii|year=2005|last1=Pyykkö|first1=Pekka|last2=Riedel|first2=Sebastian|last3=Patzschke|first3=Michael|journal=Chemistry - A European Journal|volume=11|issue=12|pages=3511–20|pmid=15832398}}</ref>.
 
முப்பிணைப்புகள் இரட்டைப் பிணைப்பு மற்றும் ஒற்றைப் பிணைப்புகளைவிட வலிமையானவையாகும். குறுகிய பிணைப்பு நீளம் கொண்ட முப்பிணைப்பின் [[பிணைப்பு வரிசை]] 3 ஆகும்.
அ== பிணைப்பு உருவாதல் ==
 
இவ்வகையான முப்பிணைப்பை [[ஒழுக்குக் கலப்பு|சுற்றுப்பாதை இனக்கலப்பு]] விளக்குகிறது. உதாரணத்திற்கு [[அசிட்டிலீன்|அசிட்டிலீனை]] எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு கார்பன் அணுவும் இரண்டு sp [[சுற்றுப் பாதை]]கள் மற்றும் இரண்டு p சுற்றுப்பாதைகளைப் பெற்றுள்ளன. (1s<sup>2</sup> 2s<sup>2</sup> 2px<sup>1</sup> 2px<sup>2</sup>) இரண்டு sp சுற்றுப்பாதைகளும் 180 [[பாகை]] [[கோணம்|கோணத்தைக்]] கொண்டு [[நேரியல்|நேரியலாக]] x அச்சை நிரப்புகின்றன. ([[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை]]த் திட்டம்). p சுற்றுப்பாதைகள் y மற்றும் z அச்சுகளுக்கு மேல் [[நேர்குத்து|நேர்குத்தாக]] உள்ளன. இரண்டு கார்பன் அணுக்களும் ஒன்றையொன்று அணுகும்போது அவற்றின் sp சுற்றுப்பாதைகள் மேற்பொருந்தி [[சிக்மா]] பிணைப்புகளை sp-sp உருவாக்குகின்றன. அதேநேரத்தில் p<sub>z</sub> சுற்றுப்பாதையும் ஒன்றை ஒன்று அணுகி மேற்பொருந்தி p<sub>z</sub>-p<sub>z</sub> பிணைப்பு அதாவது [[பை]] பிணைப்பை உருவாக்குகின்றன. இதைப்போலவே அடுத்த இணையான p<sub>z</sub> சுற்றுப்பாதையும் மேற்பொருந்தி மேலும் ஒரு p<sub>z</sub>-p<sub>z</sub> பிணைப்பு பை பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் இறுதியாக ஒரு சிக்மா பிணைப்பும் இரு பை பிணைப்புகளும் உருவாகின்றன.
[[வளைத்த பிணைப்பு]] மாதிரியில் மூன்று sp3 மடல்கள் ஒரு பை பிணைப்பின் தேவையில்லாமலேயே முப்பிணைப்பை உருவாக்கிவிடுகின்றன<ref>''Advanced Organic Chemistry'' Carey, Francis A., Sundberg, Richard J. 5th ed. 2007</ref>.
 
2,444

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3403478" இருந்து மீள்விக்கப்பட்டது