வாழ்க்கை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வாழ்க்கை வரலாறு''' என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான [[விளக்கவுரை]]யாகும். இது ஒருவருடைய [[கல்வி]], [[வேலை]], [[உறவுகள்]] மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் [[சாித்திரம்]] என்பது அவருடைய [[வாழ்க்கை]] நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு போல் அல்லாது, ஒருவருடைய [[வாழ்க்கை]] முழுவதையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் உதாரணமாக ஒருவருடைய நெருக்கமான வாழ்க்கை அனுபவங்களையும், அவருடைய [[ஆளுமை]]யைப்பற்றி விளக்குவதாகவும் உள்ளது.
 
பயோகிராஃபி என்பது கதையல்ல. ஆனால் ஒரு கதையில் ஒருவருடைய வாழ்க்கை சாிதத்தை சித்தாிக்கலாம். [[இலக்கியம்]] முதல் [[சினிமா]] வரையிலான பல்வேறு ஊடகங்களிலிருந்து இந்த தனிநடையானது உருவானது. அதிகாரம் பெற்ற [[வாழ்க்கை வரலாறு]] என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். [[சுய சாிதை]] என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானே அல்லது உதவியாளரை வைத்தோ எழுதுவது.
 
முதலில் ஒருவருடைய வரலாற்றை எழுதும் முறை வரலாற்றின் ஒரு துணைப் பகுதியாகவே கருதப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரைப் பற்றி எழுதக் கூடியதாகவே இருந்தது. சுதந்திர வகை வாழ்க்கை [[வரலாறு]] எழுதுதல் முறையானது பொது வரலாறு எழுதுதல் முறையிலிருந்து வேறுபட்டது. இந்த முறை 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தற்போதைய நிலையை இது 20-ஆம் நூற்றாண்டில் தான்நூற்றாண்டில்தான் அடைந்தது.
 
== வரலாறு ==
 
கார்னீலியஸ் நீபோஸ் என்பவர் முந்தைய பயோகிராஃபி எழுத்தாளர்களில் ஒருவராவார். அவர் கி.மு. 44-ல் எக்லென்ஸியம் கிம்பரேடாரம் விட்டேயி (லைவ்ஸ் ஆப் அவுட்ஸ்டேன்டிங் ஜென்ரல்ஸ்) என்ற நூலை வெளியிட்டார். மிக நீளமான வாழ்க்கை வரலாறான "பாரலல் லைவ்ஸ்" புளுடார்ச் என்பவரால் கிரேக்க மொழியில் எழுதி கி.பி.80-ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற கிரேக்கர்களை புகழ்பெற்ற ரோமானியர்களுடன் இணைத்து கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு பேச்சாளர் டீமாஸ்தீனன் மற்றும் சீசரோ அல்லது தி கிரேட் அலெக்ஸாண்டர் மற்றும் கீலியஸ் சீசர் மற்றுமொரு பழமையான வாழ்க்கை வரலாறு "டீ விட்டா சீசரம்" சியுடோனியசால் கி.பி. 121-ல் [[அரசர்]] காட்ரியன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
 
முந்தைய இடைக்காலத்தில் (கி.பி.400 - 1450) ஐரோப்பாவில் நாகாிகத்தைப்பற்றிய விழிப்புணர்வு குறைந்தது. அந்த சமயத்தில் ஒரே ஒரு அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத் [[துறவிகள்]], [[மதகுருமார்கள்]] இக்காலத்தை [[வாழ்க்கை வரலாறு ]]ழுதுவதற்கு எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடைய படைப்புகள் மக்களிடையே அகத்தூண்டலை உண்டுபண்ணுவதாகவும் மதமாற்றத்திற்கான ஊடகமாகவும் திகழ்ந்தன. இக்காலகட்டத்தின் வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கியமான உதாரணமாக உள்ளது. எயின்கார்ட் எழுதிய "சார்ல்மாங்கி்ன் வாழ்க்கை" இடைக்கால இசுலாமிய நாகரீகம் (கி.பி.750 - 1258 ) இக்காலத்தில் [[முகமது]] மற்றும் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. மற்ற படைப்புகளைக் காட்டிலும் இவ்வகை வாழ்க்கை [[வரலாறுகள்]] அதிக சமூக செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முந்தைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கையை கவனம் செலுத்தின.
 
அமொிக்க பயோகிராஃபி எழுதும் முறை ஆங்கில முறையை ஒத்திருக்கிறது. இந்த முறை தாமஸ் கார்லியின் கருத்தான வாழ்க்கை வரலாறு என்பது வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்ற கருத்தை ஒருங்கினைத்து இருக்கிறது. சமுதாயத்தைப் புாிந்துகொள்ள சிறந்த மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு மிக அவசியமானது என்று கார்லி வலியுறுத்தினார்.
{{Wikiquote|வாழ்க்கை வரலாறு}}
== பார்வை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வாழ்க்கை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது