விஜயநகரக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Karnataka Hampi IMG 0730.jpg|thumb|right|250px|[[ஹம்பி]]யில் உள்ள விஜயநகர ராய கோபுரம்]]
'''விஜயநகரக் கட்டிடக்கலை''' என்பது, [[கிபி]] 1336–1565 காலப்பகுதியில், [[தென்னிந்தியா]]வின் பெரும்பகுதியில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]] ஆற்றங்கரையில் அமைந்திருந்த விஜயநகரம் இப்பேரரசின் [[தலைநகரம்|தலைநகரமாக]] இருந்தது. இதனால் இக் காலத்தில்இக்காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான [[கோயில்]]கள், [[மாளிகை]]கள் மற்றும் பல கட்டிடங்கள் இப் பகுதியிலேயே செறிந்து காணப்படுகின்றன. இவற்றுள் விஜயநகரத்தினுள் அடங்கும் [[ஹம்பி]] பகுதியில் இருக்கும் கட்டிடச் சின்னங்களின் தொகுதி [[யுனெஸ்கோ]]வினால் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல நூற்றுக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்தவேலைகளும் செய்யப்பட்டன. பழைய தலைநகரப் பகுதியில் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கட்டிடச் சின்னங்கள் இன்றும் காணப்படுகின்றன. இவற்றுள் 56 சின்னங்கள் [[யுனெஸ்கோ]]வினால் பாதுகாக்கப்படுகின்றன. அறுநூற்று ஐம்பது சின்னங்கள் கர்நாடக அரசினால் பாதுகாக்கப்படுகின்றன. இன்னும் 350 வரையிலான சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டி உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/விஜயநகரக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது