ஐதராபாத் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 53:
தற்கால [[உசுபெக்கிசுத்தான்|உசுபெக்கிசுத்தானின்]] [[சமர்கந்து]] பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர். இவர்கள் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசில்]] பணிக்குச் சேர்ந்தனர். 1680களில் இப்பகுதி முகலாயர் வசப்பட்டது. 18ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை [[ஐதராபாத் நிசாம்]] தோல்வியடையச் செய்து 1724இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார். [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்களின்]] தாக்குதல்களை எதிர்ப்பதில் முனைந்திருந்த முகலாய பேரரசரால் இதனைத் தடுக்க முடியவில்லை.
 
முகலாய பேரரசு நலிவுற்று [[மராட்டியப் பேரரசு]] வலிவடைந்துநலிவடைந்து வந்தது. நிசாம் மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றில் முக்கியமானவை இராக்‌ஷஸ்புவன் சண்டை, பால்கெட் சண்டை மற்றும் கர்தா சண்டை ஆகியனவாகும். இவை அனைத்திலும் மராட்டியர்கள் வெற்றி கண்டனர். நிசாம் மராட்டியர்களின் தலைமையை ஏற்று கப்பம் கட்டி வந்தார்.<ref name="Jaques2007">{{cite book|author=Tony Jaques|title=Dictionary of Battles and Sieges: F-O|url=http://books.google.com/books?id=Dh6jydKXikoC|year=2007|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-33538-9}}</ref><ref name="Barua2005">{{cite book|author=Pradeep Barua|title=The State at War in South Asia|url=http://books.google.com/books?id=FIIQhuAOGaIC|year=2005|publisher=U of Nebraska Press|isbn=0-8032-1344-1}}</ref>
 
1817-ஆம் ஆண்டு வரை ஐதராபாத் இராச்சியம் தன்னாட்சியுடன் [[முடியாட்சி]]யாக செயல்பட்டது. பின்னர் [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த [[துணைப்படைத் திட்டம்|இந்தியத் துணைப்படைத் திட்டத்தின்]] கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், [[பிரித்தானிய இந்தியா]] அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் [[திறை]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சமஸ்தானமானது]]. <ref>[[http://www.worldstatesmen.org/India_princes_K-W.html WorldStatesmen - India Princely States K-Z]</ref><ref>http://www.thefreedictionary.com/Princely+state</ref><ref>http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277</ref> 1903இல் ஐதராபாத் இராச்சியத்தின் பீரார் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் இணைக்கப்பட்டது.
வரிசை 59:
1818-இல் ஐதராபாத்து [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] கீழான [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமானது]] அந்நிறுவனத்திடம் [[துணைப்படைத் திட்டம்]] மூலமாக தனது வெளியுறவுகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒப்படைத்தது. 1903இல் நாட்டின் பீரார் மாகாணப் பகுதியை இழந்தது; அந்த மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் [[மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா|மத்திய மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது.
 
1947இல் [[இந்தியப் பிரிவினை]]யின்போது இந்திய மன்னராட்சிகளிலேயே அப்போது ஐதராபாத்து மன்னராட்சி தான் மிகப் பெரியதாக இருந்தது. அதன் பரப்பளவு {{convert|82698|sqmi|km2}} ஆக இருந்தது. 16.34 மில்லியன் மக்கள் (1941 கணக்கெடுப்பு) வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் (85%) [[இந்து]]க்கள். ஐதராபாத்து மன்னராட்சிக்கு தனி படைத்துறை, வான்வழிச்சேவை, தொலைத்தொடர்பு அமைப்பு, தொடருந்து அமைப்பு, அஞ்சல்துறை, நாணயவியல் மற்றும் வானொலி சேவை அமைப்புக்கள் இருந்தன.
 
==இந்தியாவுடன் இணைத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/ஐதராபாத்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது