பண்டத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8,636 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த மறைப்பரப்பாளரும் வைத்தியருமான ஜோன் ஸ்கூட்டர்
(DR. John Scudder ) தெற்க்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்க்கத்தேய மருந்தகத்தினை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் . அது மட்டுமல்லாமல் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடிய மகளீர் கல்லூரி யாக பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியும் அமைக்கப்பட்டது.
பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியை விட பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி, பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலை என்கிற இரண்டு கபொத உயர்தரம்,மற்றும் கபொத சாதரணதரம் வரையான மொத்தம் மூன்று பாடசாலைகளை கொண்டு காணப்படுகின்றது.
 
*மக்களும்_ சமயமும்*
பண்டத்தரிப்பில் இலங்கை தமிழ்பேசும் இனக்குழுமத்தினரே பொரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள் சமய ரீதியில் கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகிறவர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளபோதும் சைவசமயத்தவர்களும் சராசரியாக 50:50 என குறிப்பிடத்தக்க அளவிலே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவுகளை(புரட்டஸ்தாந்து ,ஆவிக்குரிய பெந்தக்கோஸ்தோ ) சபைகளினை பின்பற்றுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள்.
இப்படியாக பண்டைக்காலம் முதல் இன்றுவரை சிறப்புமிக்க கிராமமாக விளங்கிவந்த பண்டத்தரிப்பு உள்நாட்டு யுத்தம் தீவிரமான காலப்பகுதியில் 1993களில் இலங்கை இராணுவத்தின் இராணுவநடவடிக்கைகள் காரணமாக அதிகமாக மக்கள் இடம்பெயர தொடங்கியமையினால் வெறிச்சோடி போனதுடன் சில குறிப்பிட்ட காலம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவும் காணப்பட்டதினால் தனது முக்கியத்துவத்தை இழந்து பண்டத்தரிப்பு நகரம் பழடைந்த நகராக தள்ளப்பட்டாலும் பின்னர் சிறிதுசிறிதாக மக்கள் மீளக்குடியேற தொடங்கியதனால் இராணுவத்தினர் வசமிருந்த பலபகுதிகள் விடுவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பினாலும் முன்னர் இருந்த வர்த்தக வணிக மைய நிலையினை பெருமளவு மீட்டுக்கொள்ள முடியவில்லை பண்டத்தரிப்பு நகரம் இராணுவத்தினர் வசமிருந்த குறுகிய காலப்பகுதியில் சங்கானை நகரம் அதற்குரிய முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்டதினால் இந்நிலை ஏற்பட்டது ஆயினும் காலசுழற்சியின் வேகத்தில் பண்டத்தரிப்பு நகர் தனக்கான மீள் முக்கியத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டே உள்ளது.
*பண்டத்தரிப்பில் உள்ள புகழ்மிக்க வழிபாட்டு தலங்கள் ,கட்டிடங்கள் *
 
வழிபாட்டு தலங்கள்
 
1- பண்டத்தரிப்பு புனித பற்றிமா மாதா தேவாலயம் -
(யாழ்மாவட்ட கத்தோலிக்கர்களின் யாத்திரைக்குரிய தலமாக உள்ளது)
2- பண்டத்தரிப்பு புனித செபமாலை மாதா தேவாலயம்
3-பண்டத்தரிப்பு புனித அந்தோணியார் தேவாலயம்
4- பண்டத்தரிப்பு குழந்தையேசு
தேவாலயம்
5-பண்டத்தரிப்பு அன்னை வேளாங்கன்னி ஆலயம்(அம்மன் வீதி)
6-பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை அன்னை வேளாங்கன்னி ஆலயம் (கடாப்புலம்)
7-பண்டத்தரிப்பு சந்தி அருகே உள்ள சிலோன் அமெரிக்கன் மிசன் தேவாலயம் (முன்னைய தென்னிந்திய திருச்சபை தேவாலயம்)
8- முல்லையடி அருள்மிகு வைரவர் ஆலயம்
9-பண்டத்தரிப்பு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்
10-பண்டத்தரிப்பு சித்தங்கேணி வீதி ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம்
11- கேணிக்கட்டு அருள்மிகு கன்னிமார் ஆலயம்
12- பண்டத்தரிப்பு அம்மன்வீதி முருகன் ஆலயம்
13-பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை ஞானவைரவர் ஆலயம்(காடாப்புலம்)
14-பண்டத்தரிப்பு விளாவெளி இந்துமயான வைரவர் ஆலயம்
 
கட்டிடங்கள்
1-கத்தோலிக்க தியான இல்லம் - திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வதிவிட மடம்
2-தெற்க்காசியாவின் முதல் ஆங்கில மருந்தகம் அமைந்த மிசனறி ஜோன் ஸ்கூட்டர் இல்லம்
3- ஹரியோட் வின்சிலோ அம்மையார் ஞாபகார்த்த மகளீர் பராமரிப்பு விடுதி
4-பண்டத்தரிப்பு பொதுச்சந்தைக்கட்டிடம்
5-YMCA கட்டிடம்
6- பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி முன்பாகவுள்ள நீர்நிலை கேணி
 
பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அரசபணி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு விடயங்கள்
 
1- சண்டிலிப்பாய் பிரதேச அரச கால்நடை வைத்தியசாலை
2-பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை (காடாப்புலம்)
3- பண்டத்தரிப்பு பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலை
4-சண்டிலிப்பாய் பிரதேச தொழிற்பயிற்ச்சி மையம்( VTA)
5-வலிதென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபை பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலகம்
6-இளவாலை பொலீஸ் நிலையம்
7-பண்டத்தரிப்பு தபால்நிலையம்
8-கிராமிய செயலகம்
9-பாடசாலைகள்
1- பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி
2-பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
3-பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோதக
பாடசாலை
10- விளாவெளி இந்துமயானம்
11-பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்
12- பண்டத்தரிப்பு பனைதென்னை வள கூட்டுறவுச்சங்கம்
14-ஆயுள்வேத மருந்து உற்பத்தி கூட்டுறவுச்சங்கம் பண்டத்தரிப்பு
 
 
1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3422352" இருந்து மீள்விக்கப்பட்டது