பண்டத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
*மக்களும்_ சமயமும்*
பண்டத்தரிப்பில் இலங்கை தமிழ்பேசும் இனக்குழுமத்தினரே பொரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள் சமய ரீதியில் கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகிறவர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளபோதும் சைவசமயத்தவர்களும் சராசரியாக 50:50 என குறிப்பிடத்தக்க அளவிலே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவுகளை(புரட்டஸ்தாந்து ,ஆவிக்குரிய பெந்தக்கோஸ்தோ ) சபைகளினை பின்பற்றுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள்.
 
பிரதானமான தொழிற்துறை
இங்கு வாழும் மக்களின் பிரதானமான தொழிலாக விவசாயமே உள்ளது அத்துடன் பனைசார் பதனீர் தொழில் மற்றும் எள்ளு சார்ந்த நல்லெண்ணை உற்பத்தி தொழில்களும் பிரதானமான வாழ்வாதார தொழில்களாக உள்ளதோடு மரவேலைப்பாடுகள் தேர்சிற்ப உருவாக்கம் போன்ற கைத்தொழில்களும் இங்கே காணப்படுகின்றன. அன்றும் சரி இன்றும் சரி குறிப்பிடத்தக்க தொகையினர் பல அரச துறைகளிலும் அரசாங்க உத்தியோகங்களில் ஈடுபடுவோராகவும் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல்
பண்டத்தரிப்பு கிராமம் அன்றுதொட்டு இன்று வரை அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகவே விளங்கி வந்துள்ளது இக்கிராமத்திலிருந்து பலர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் அதிபராக இலங்கையின் புகழ்பூத்த தமிழ் கம்யூனிசவாதி தோழர் கார்த்திகேசன் செயற்பட்டதும் அவர் இங்கே பணியாற்றிய காலங்களில் இக்கிராமத்தில் கம்யூனிச சித்தாந்த அரசியலில் கணிசமாக ஈடுபட்டிருந்தார் மறுபுறம் அன்றைய தமிழரசுக்கட்சியின் தளபதி அ.அமிர்தலிங்கத்தின் உறவினர்கள் சிலரும் இக்கிராமத்தவர்களாக இருந்தமையால் தமிழரசுக்கட்சியின் கோட்டைகளில் ஒன்றாகவும் இக்கிராமம் விளங்கியது. தற்போது 2018இன் பின்னரான உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின்படி இக்கிராமத்திலிருந்து தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற திரு அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவர் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற அரசியல் பிரதிநிதியாக உள்ளார்.
 
இப்படியாக பண்டைக்காலம் முதல் இன்றுவரை சிறப்புமிக்க கிராமமாக விளங்கிவந்த பண்டத்தரிப்பு உள்நாட்டு யுத்தம் தீவிரமான காலப்பகுதியில் 1993களில் இலங்கை இராணுவத்தின் இராணுவநடவடிக்கைகள் காரணமாக அதிகமாக மக்கள் இடம்பெயர தொடங்கியமையினால் வெறிச்சோடி போனதுடன் சில குறிப்பிட்ட காலம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவும் காணப்பட்டதினால் தனது முக்கியத்துவத்தை இழந்து பண்டத்தரிப்பு நகரம் பழடைந்த நகராக தள்ளப்பட்டாலும் பின்னர் சிறிதுசிறிதாக மக்கள் மீளக்குடியேற தொடங்கியதனால் இராணுவத்தினர் வசமிருந்த பலபகுதிகள் விடுவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பினாலும் முன்னர் இருந்த வர்த்தக வணிக மைய நிலையினை பெருமளவு மீட்டுக்கொள்ள முடியவில்லை பண்டத்தரிப்பு நகரம் இராணுவத்தினர் வசமிருந்த குறுகிய காலப்பகுதியில் சங்கானை நகரம் அதற்குரிய முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்டதினால் இந்நிலை ஏற்பட்டது ஆயினும் காலசுழற்சியின் வேகத்தில் பண்டத்தரிப்பு நகர் தனக்கான மீள் முக்கியத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டே உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பண்டத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது