இந்துக் கடவுள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

17:33, 17 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்

இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும்.

இந்து சமயத்தின் கடவுட் கொள்கை

இந்து சமயத்தில், இவாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்த சமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.

வேதகாலக் கடவுள்கள்

வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துக்_கடவுள்கள்&oldid=34238" இலிருந்து மீள்விக்கப்பட்டது