வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
வீரவநல்லுரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம்.
இரு மருத மரங்களிடையே மகாதேவன் உதித்ததால் இடைமருதூர் எனும் தலத்தில் ஈசன், மகாலிங்கமானான்.தென் மாவட்டத்தில் நெல்லைச் சீமை தாமிரபரணி நதி தீரத்தில் திகழும் திருப்புடைமருதூரை புடார்ச்சுனம் என்று புகழ்ந்தார்கள்.
 
இதற்கு தட்சிண காசி என்று ஏற்றம் கொடுத்தார்கள். நீதி நெறி சிறக்க வாழ்ந்த தர்ம சக்கரவர்த்தியான ஆதிமனு, பூவுலகிலுள்ள சிவத் தலங்களை தரிசிக்க ஆவலுற்றார். அதற்கு வழிகாட்ட குறுமுனியான அகத்தியரை தரிசிக்க பொதிகை மலை சென்றார்.
 
மன்னனுக்கு தாமிரபரணி மகாத்மியத்தை கூறி உள்ளம் குளிரச் செய்தார், அகத்தியர். அதைக் கேட்ட ஆதிமனு, அந்த நதிக் கரையிலுள்ள சிவத் தலங்களை கண்ணாரக் கண்டு கொண்டே வந்தார்.
 
திருப்புடை மருதூரை அடைந்தார். தேவேந்திரன் தன் பாவம் நீங்க, அங்கே மருத மரமாக மாறி தவம் செய்யும் கோலம் பார்த்து மகிழ்ந்தார். தேவேந்திரனின் தவத்திற்கு இணங்கி சிவபெருமான், மருத மரத்தினடியில் லிங்க வடிவினனாகத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமுற்றார்.
 
சரஸ்வதி, லட்சுமி, பூமாதேவி ஆகிய முப்பெரும் தேவியரும் ஈசனை ஆராதிக்கும் அழகைக் கண்டார். தமக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமோ என்று ஏங்கிய ஆதிமனு, மருத மரத்தின் அருகே ஓடினார். ஆனால், தேவியர்கள் மருத மரத்தினுள் மறைந்தனர்.
 
அவர் உள்ளம் மருகியது. ஈசனை காண வந்த எனக்கு இதென்ன சோதனை! தன்னுயிர் நீத்தாவது அந்த பாக்கியம் அடையத் துணிந்த அவர், இடுப்பிலிருந்து வாளை உருவி தன் சிரத்தை கொய்துகொள்ளப் போனார். ஏதோ ஒரு சக்தி சிரத்தை நோக்கி நகர்ந்த வாளை திசை மாற்ற, திசை மாறிய வாள், மருத மரத்திற்குள் இறங்கியது.
 
மரத்தினின்று சட்டென்று குருதி ஊற்றாக பெருகியது. ஆதிமனு அதிர்ச்சியடைந்தார். மேலும் பாவம் செய்கிறோமே என வருந்தி மறுபடியும் தன் தலையை வெட்ட முயன்றார். அப்போது ‘‘நிறுத்து...’’ என கம்பீரக் குரல் கேட்டது.
 
குரல் வந்த திசையை உற்றுப் பார்க்க, மாபெரும் விருட்சத்தின் மத்தியில் சகல தேவியர்களுடன் மருதூரான் திருக்காட்சி அளித்தார். கண்டவர் பிரமித்தார். ‘‘மருதக் காட்டிற்கும், தாமிரபரணிக்கும் அருகே அருங்கோயில் ஒன்றை எடுப்பிக்க அனுமதி தாருங்கள்’’ என்றார், ஆதிமனு.
 
மன்னனின் விருப்பத்தை ஏற்ற சிவன், ‘‘சுயம்புவாக நான் பொங்கிய இடத்தில் கோயில் அமைத்து தொழுது நில்’’ என்றார். ஆதிமனு அழகான கோயில் கட்டினார். லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். சக்தி சொரூபமான அம்பாளையும் பிரதிஷ்டை செய்ய வேண்டுமே என்று கவலை கொண்டார்.
 
உள்ளுக்குள் ஞானதேவி சிரித்தாள். ‘‘கோமா எனும் சிகரத்தில் உள்ள அம்பிகையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்’’ என்று தீர்வு சொன்னாள். மங்கள வாத்தியங்கள் முழங்க தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிய, வேத கோஷங்கள் ஒலிக்க கோமா எனும் மலையிலிருந்து அழைத்து வந்த அம்பிகையை ‘கோமதி’ என்று திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார்.
 
அவளை சுற்றி பரிவார தெய்வங்களை நிறுவினார். சிவசக்தி அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமாக பரவினார்கள். ஆதிமனு தனது வாளை உருவும் போது மருத மரத்தில் வெட்டுப்பட்டு ரத்தம் வடிந்தது அல்லவா? அது, இறைவன் தலையில் காயமாக இருந்தது.
 
அந்த தழும்பிற்கு சந்தனாதி தைலம் மற்றும் வாசனை திரவியம் பூசி குளிர்வித்து தானும் குளிர்ந்து தொடர்ந்து வழிபட்டு முக்தியடைந்தார், ஆதிமனு. திருப்புடைமருதூரானுக்கு நாறும்பூநாதன் என்றொரு திருப்பெயரும் உண்டு. இப்பெயரை சூட்டியவர் கருவூர் சித்தர்.
 
ஒரு சமயம் கருவூர் சித்தர் தாமிரபரணி ஆற்றின் வடகரை வழியாக வந்தார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. தென்கரையிலிருந்த மருத மலர் வாசம் கருவூர் சித்தரை ஈர்த்தது. அந்த வாசம், ஈசனின் சாந்நித்தியம் அருகிலிருப்பதை உணர்த்தியது.
 
இறைவனின் திருப்பெயர் தெரியாமல் ‘‘நாறும்பூ நாதனே நலம் தருவாயா...’’ என்று பாடினார். தேன் தமிழில் தன்னை மறந்த மகேசன் மெல்ல தலையை இடப்புறமாக சாய்த்து கேட்டார். சித்தரை இக்கரைக்கு அழைத்து வர வெள்ளத்தை சற்றே தடுத்தார்.
 
புயலாக சீறிய வெள்ளம், மென்மையான ஆறாக நடந்தது. ஈசன் கருவறைக்குச் சென்றார் கருவூர் சித்தர். தனக்காக இடப்புறம் சாய்ந்திருந்த இறைவனை நோக்கி ‘‘உம்மை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தர தாங்கள் இடது புறம் சாய்ந்த நிலையிலேயே இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
 
அதன்படி இறைவன் அப்படியே சாய்ந்த நிலையில் பக்தர்களுக்கு இன்றும் காட்சியளிக்கிறார். மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு ரம்மியமாக காட்சியளிக்கும் கிராமம் திருப்புடைமருதூர். தாமிரபரணியுடன் கங்கையே கடனா நதியாக வந்து சங்கமிக்கும் இடத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
 
இரு கண் கொள்ளாது கடனா நதியின் கொள்ளை அழகைக் காண. பத்து புண்ணிய தீர்த்தங்களையும் ஒரே இடத்தில் கொண்டுள்ளது இத்தலம்!
 
ஊர்க்காட்டில் உள்ள சக்கர தீர்த்தம், அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திர வரதர், படித்துறைக்கு தென்புறமுள்ள விஷ்ணு தீர்த்தம், அதன் வடபகுதியில் உள்ள அகத்தியர் தீர்த்தம், சிங்க தீர்த்தம், திருப்புடைமருதூர் அருகே கடனா
 
நதி சேரும் இடத்தில் கடனா சங்கம தீர்த்தம், கோயில் பின்புறம் படித்துறையில் தெற்கு ஓரமுள்ள பைசாச மேனாசா தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், படித்துறையின் வடக்கு பகுதியில் கரும தீர்த்தம், அதற்கு எதிர்புறம் தண்ட பிரம்மசாரி தீர்த்தம், நதி கிழக்காக திரும்பும் இடத்தில் மானவ தீர்த்தம் என்று இங்குள்ள சகல தீர்த்தங்களும் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை பயக்கும். தீர்த்த தரிசனமும், நீராடலும் சகல வளத்தையும் தானாக கொண்டு வந்து சேர்க்கும்.
 
பாவத்தை தீயிலிட்ட தூசாகப் பொசுக்கும். தாமிரபரணி கரையில் ஆதிமனுவிற்கு மரப்புடையில் இறைவன் காட்சியளித்த இடம் உள்ளது. அந்த இடத்தில் உடைந்த மருதமரப்புடை உள்ளது. அதை கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. அதை அடுத்து மிகப் பெரிய சுற்றுச்சுவர்.
 
கோயில் முன்புறம், முழுமையடையாத ஏழு அடுக்கு பிரமாண்டமான கோபுரம். உள்ளே நுழைந்தவுடன் ஐந்தடுக்கு கொண்ட அடுத்த கோபுரம். அந்த கோபுரத்தின் உள்ளே கோயில் தல புராணங்கள் மற்றும் பல்வேறு கருத்துகளைச் சொல்லும் வண்ண ஓவியங்களும், மரச்சிற்பங்களும் காணப்படுகின்றன.
 
16&ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அவை, இன்றலர்ந்த மலர் போல் புத்துணர்வோடு பொலிகின்றன. கொடிமரம், பலிபீடம் தாண்டி சென்றால் உள்ளே உடலில் காயங்களுடன் உலகை கட்டிக் காக்கும் மருதீசனும், கருவூராருக்கு காட்சி தந்து இடதுபுறம் செவிசாய்த்த நாறும்பூநாதனும் பேரருள் பொழிந்தபடி காட்சி தருகிறார்கள்.
 
 
இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர்.
 
தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் படி பாயசம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். தாங்களும் அந்த படி பாயசத்தினை உண்டு நோயிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர். சுவாமியின் அருகிலேயே கோமதி அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
 
சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்று பக்தர்கள் கருப்பு வளையலை காணிக்கையாக கொடுத்து பயன் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள் இங்கு அநேகம். எல்லாவற்றிற்கும் மேலாக மரண பயம் தீர்க்கும் தலமாகவும் திருப்புடைமருதூர் விளங்குகின்றது.
 
மீண்டும் மீண்டும் பிறக்கும் சிறை உடலை நீக்கி பேரின்ப பெருவீடு அருள்கிறார், புடார்சுனர் எனும் புடைமருதீசர். கோயிலைச்சுற்றி அறுபத்து மூன்று நாயன்மார்களும், அருகிலேயே கருவூர் சித்தரும் அமர்ந்து அருட் கோலம் காட்டுகிறார்கள்.
 
கன்னி மூல விநாயகர், வள்ளி&தெய்வானையுடன் முருகனை வணங்கி விட்டு சனீஸ்வரன் அருகே வந்தால் அங்கே சகஸ்ர லிங்கம் பிரமாண்டமாக இருக்கிறது. இதைச் சுற்றி வணங்கினால் ஆயிரத்தெட்டு சிவாலயத்தை தரிசித்த பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
 
இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.
 
 
===வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/வீரவநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது