சோ. ந. கந்தசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வாழ்க்கைக் குறிப்பு: இணைப்புத் திருத்தம்
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கில வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் [[தமிழ்நாடு]], [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]], [[உடையார்பாளையம்]] வட்டம், [[செயங்கொண்ட சோழபுரம்]] அருகில் உள்ள [[இலையூர்]] என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலை (பொருளாதாரம்) ([[1958]]) பயின்றார். எம்.லிட் ([[1963]]), முனைவர் ([[1971]]) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். [[மொழியியல்]] பட்டயம், [[வடமொழி]]ப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், [[தெ. பொ. மீனாட்சி சுந்தரம்|தெ.பொ.மீ]] ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 
தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். பின்னர் [[மலேசியப் பல்கலைக்கழகம்|மலேசியப் பல்கலைக்கழகத்திலும்]] ([[1979]]-[[1985|85]]), [[தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும்]] (1985-1997), சில காலம் சென்னை [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும்]] தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும்
"https://ta.wikipedia.org/wiki/சோ._ந._கந்தசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது