இந்துஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
வரிசை 3:
 
==சொற்பிறப்பியல்==
இந்துஸ்தான் என்ற சொல் [[பாரசீக மொழி|பாரசீகச்]] சொல்லான ''இந்து''விலிருந்து பெறப்பட்டதாகும். இச்சொல்லும் சமசுகிருத சொல்லான ''சிந்து''வும் ஒரே பொருள் உடையவை ஆகும்.{{sfnp|Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva|2002|p=3}} [[அஸ்கோ பார்ப்போலா]]வின் கூற்றுப்படி முன் ஈரானிய சத்தமான ''*சி'' என்பது ''இ'' என்று கி.[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 850 முதல் 600 ஆம் ஆண்டுகளில் மாற்றமடைந்தது.{{sfnp|Parpola, The Roots of Hinduism|2015|loc=Chapter 9}} இவ்வாறாக [[இருக்கு வேதம்|இருக்கு வேத]] கால ''சப்த சிந்தவா'' (ஏழு ஆறுகளின் நிலம்) [[அவெத்தா]]வில் ''அப்த இந்து'' என்று மாறியது. இது [[அகுரா மஸ்தா]]வால் உருவாக்கப்பட்ட "பதினைந்தாவது இராச்சியம்" எனக் கூறப்பட்டது. 'அதிக வெப்பம்' உடைய நிலம் என்று கூறப்பட்டது.{{sfnp|Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva|2002|p=2}} கிபொ.ஊ. மு. 515 ஆம் ஆண்டு [[முதலாம் டேரியஸ்]] ''சிந்து'' பகுதி (தற்கால [[சிந்து மாகாணம்]]) உள்ளிட்ட சிந்து சமவெளியை தனது அரசில் இணைத்துக்கொண்டார். பாரசீக மொழியில் இந்த இடம் இந்து என்று அழைக்கப்பட்டது.{{sfnp|Parpola, The Roots of Hinduism|2015|loc=Chapter 1}} [[முதலாம் செர்கஸ்|முதலாம் செர்கசின்]] காலத்தில் சிந்து ஆற்றுக்கு கிழக்கில் இருந்த அனைத்து நிலப்பகுதிகளையும் குறிக்க "இந்து" என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.{{sfnp|Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva|2002|p=3}}
 
நடு பாரசீக மொழியில், அநேகமாக கி.[[பொது பிஊழி|பொ.ஊ.]] முதலாம் நூற்றாண்டிலிருந்து பின்னொட்டான -''ஸ்தான்'' என்ற சொல் இணைக்கப்பட்டது. இதற்கு ஒரு நாடு அல்லது பகுதி என்று பொருள். இவ்வாறாக தற்போதைய சொல்லான ''இந்துஸ்தான்'' உருவானது.{{sfnp|Habib, Hindi/Hindwi in Medieval Times|2011|p=105}} {{circa}} கிபொ. பி. 262 ஆண்டின் போது முதலாம் சாபுரின் நக்‌சு-இ-ருசுதம் கல்வெட்டில் சிந்து என்பது ''இந்துஸ்தான்'' என்று குறிக்கப்பட்டது.{{sfnp|Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent|1989|p=46}}{{sfnp|Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization|2000|p=553}}
 
வரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான ''இந்துஸ்தான்'' படிப்படியாக விரிவடைந்து "கிட்டத்தட்ட அனைத்து [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தையும்]]" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க-உரோமானியப் பெயரான "இந்தியா" மற்றும் சீனப் பெயரான ''சென்டு'' ஆகியவையும் இதேபோன்ற ஒத்த பரிணாமத்தை பின்பற்றின.{{sfnp|Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent|1989|p=46}}{{sfnp|Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization|2000|p=555}}
"https://ta.wikipedia.org/wiki/இந்துஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது