ஹரிசரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 14:
}}
'''ஹரிசரண்''' (''Haricharan'') தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். இவர் தன் பதினேழாவது அகவையில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த [[காதல் (திரைப்படம்)|காதல்]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர் [[ஜோஷ்வா ஸ்ரீதர்]] ஆவார். அரங்கேற்ற திரைப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார். 2005இல் காதல் திரைப்படத்தில் இவர் பாடிய "உனக்கென இருப்பேன்" பாடல் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளுக்கு]] பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{cite news|url=http://www.hindu.com/mp/2006/06/03/stories/2006060300280100.htm |archive-url=https://web.archive.org/web/20071209125227/http://www.hindu.com/mp/2006/06/03/stories/2006060300280100.htm |url-status=dead |archive-date=9 December 2007 |title=Metro Plus Madurai / Music : Successful note |work=[[தி இந்து]] |date=3 June 2006 |access-date=29 November 2011 |location=Chennai, India}}</ref>2010இல் [[பையா (திரைப்படம்)|பையா]] திரைப்படத்திற்காக [[யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைத்த " துளி துளி " என்ற பாடலைப் பாடிய பின் இவர் பிரபலமானார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஹரிசரண் சென்னை தமிழ் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் . இவருடைய தாத்தா பி.எஸ்.கணபதி 60களில் "ஆலாபனா" என்ற பெயரில் ஒலிவாங்கி இல்லாத கருநாடக இசை நிகழ்ச்சிகளின் அமைப்பாளராக இருந்தார். இவருடைய பாட்டி ஸ்ரீமதி அலமேலு கணபதி கணிதத்தில் தேசிய விருது பெற்றவரும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் பணியாற்றுபவரும் ஆவார். ஹரிசரணின் தந்தை ஜி. சேசாத்ரி அகில இந்திய வானொலிக் கலைஞராகவும் வங்கி ஊழியராகவும் இருக்கிறார். இவரின் தாயார் லதா பி. எஸ். மேனிலைப்பள்ளியின் நூலகர் ஆவார். ஹரிசரண் தனது ஏழு வயதிலேயே ஸ்ரீமதியிடம் கர்நாடக இசை கற்கத் தொடங்கினார். [[சேது மகாதேவன்]], [[கே. வி. நாராயணசுவாமி]], டி.எம்.பிரபாவதி, [[புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி|பி.எஸ்.நாராயணசாமி]] ஆகியோரிடம் இசை பயின்றார் .
 
ஹரிசரண் 2014 இல் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தில் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பில் '' மாற்றம் ஒன்றுதான்'' பாடலை ரஜினிகாந்துடன் இணைந்து பாடினார்.
 
== பாடிய சில பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹரிசரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது