பீட்டர் சிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பிழைத்திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பிழைத்திருத்தம்
வரிசை 78:
}}
 
'''பீட்டர் ஆல்பர்ட் டேவிட் சிங்கர்''', ஏசி ([[ஆங்கிலம்]]: Peter Albert David Singer) (பிறப்பு: ஜூலை 6, 1946)<ref name="bio">https://www.britannica.com/biography/Peter-Singer</ref> ஒரு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] தார்மீக மெய்யியலாளர் ஆவார். தற்போது [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்|பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில்]] உயிர்சார் நெறியியல் துறையில் ஐரா டபுள்யூ. டிகாம்ப் பேராசிரியராக உள்ளார். [[பயனெறிமுறைக் கோட்பாடு]]களில் நிபுணத்துவம் பெற்றவரான சிங்கர், மதச்சார்பற்ற, [[பயனெறிமுறைக் கோட்பாடு|பயனெறிமுறைக் கோட்பாட்டுக்]] கண்ணோட்டத்தில் நெறிமுறை சிக்கல்களை அணுகுபவர். அவர் குறிப்பாக [[நனிசைவம்|நனிசைவ]] வாழ்க்கை முறையை ஆதரிக்கும் ''அனிமல் லிபரேஷன்'' (விலங்கு விடுதலை) என்ற தனது 1975-ம் ஆண்டு புத்தகத்திற்காக பெரிதாக அறியப்படுகிறார். மேலும் "ஃபாமின், அஃப்ளுயன்ஸ், அண்டு மொராலிடி" ("பஞ்சம், செல்வம் மற்றும் ஒழுக்கம்") என்ற தனது கட்டுரையில் உலக அளவில் ஏழைகளுக்கு நன்கொடை வழங்கி உதவ வலியுறுத்துகிறார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு விருப்பத் தேர்வு பயனெறிமுறைக் கோட்பாட்டாளராக (preference utilitarian) இருந்ததாகக் குறிப்பிடும் அவர், தற்போது ஒரு ஹெடோனிஸ்டிக் பயனெறிமுறைக் கோட்பாட்டாளராக மாறிவிட்டதாக கடர்சினா டி லாசரி-ராடெக் என்பவரோடு இணைந்து எழுதிய ''தி பாயின்ட் ஆஃப்ஆவ் வியூ ஆஃப்ஆவ் தி யுனிவர்ஸ்'' என்ற 2014-ம் ஆண்டு நூலில் கூறியுள்ளார்.
 
இரண்டு சந்தர்ப்பங்களில், சிங்கர் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையின் தலைவராக பணியாற்றினார். அங்கு அவர் மனித உயிர்சார் நெறியியல் மையத்தை நிறுவினார். 1996-ல் அவர் ஆஸ்திரேலிய செனட்டின் பசுமைக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2004-ம் ஆண்டில், சிங்கர் ஆஸ்திரேலிய மனிதநேய சங்கங்களின் கவுன்சிலால் ஆண்டின் ஆஸ்திரேலிய மனிதநேயவாதியாக அங்கீகரிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில், ''தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்'' நாளிதழ் அவரை ஆஸ்திரேலியாவின் பத்து செல்வாக்கு மிக்க பொது மேதைகளின் பட்டியலில் சேர்த்தது.<ref>{{cite news |last1=Visontay |first1=Michael |title=Australia's top 100 public intellectuals |url=https://www.smh.com.au/national/australias-top-100-public-intellectuals-20050312-gdkwox.html |access-date=27 October 2018 |work=The Sydney Morning Herald |date=12 March 2005}}</ref> சிங்கர் "அனிமல்ஸ் ஆஸ்திரேலியா"வின் இணை நிறுவனரும் "தி லைஃப் யூ கேன் சேவ்" அமைப்பின் நிறுவனரும் ஆவார்.<ref>{{Cite web |url=http://thelifeyoucansave.org/ |title = The Life You Can Save}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_சிங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது