ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (18.04.1858 - 02-.11-.1917, [[மானிப்பாய்]], [[யாழ்ப்பாணம்]]) அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் [[சண்டிலிப்பாய்|சண்டிலிப்பாயைச்]] சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.
 
பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். [[ஆங்கிலம்]], [[தமிழ்]], வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய [[சுன்னாகம்]] முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.
வரிசை 9:
1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, [[வண்ணார்பண்ணை]]யில் தவத்திரு [[ஆறுமுக நாவலர்]] குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.
 
ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் [[தமிழ் வைத்திய விசாரணி (சஞ்சிகை)|தமிழ் வைத்திய விசாரணி]] என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது.
 
1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளைகளுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய '''செந்தமிழ்''' மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார்.
 
முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. [[அபிதான கோசம்அபிதானகோசம்]] 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவர முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
 
==இயற்றிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆ._முத்துத்தம்பிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது