புனித ஜார்ஜ் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இடைவெளி
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பத்தி ஒருங்கிணைத்தல்
வரிசை 40:
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே [[ஜார்ஜ் டவுன்]] என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், [[ஆர்க்காடு]] மற்றும் [[ஸ்ரீரங்கப்பட்டணம்|ஸ்ரீரங்கப்பட்டின]] அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது. 6 [[மீட்டர்]] உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, [[18ம் நூற்றாண்டு|18 ஆம் நூற்றாண்டில்]] இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.
 
1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் [[தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)|தலைமைச் செயலகம்]], அமைச்சர் அலுவலகங்கள், [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றம்]] ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர [[புனித மேரி கிறித்தவ ஆலயம் (சென்னை)|புனித மேரி கிறித்தவ ஆலயம்]], [[கிளைவ் மாளிகை]], மற்றும் [[கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)|கோட்டை அருங்காட்சியகம்]]<ref>[http://asi.nic.in/asi_museums_chennai.asp Fort Museum, Fort, St. George (Chennai)]</ref> ஆகிய மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன.<ref name="புனித ஜார்ஜ் கோட்டை">{{cite book | title=தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் | publisher=பழனியப்பா பிரதர்ஸ் | author=வி. கந்தசாமி | year=2011 (மூன்றாம் பதிப்பு) | location=சென்னை | pages=31 | isbn=978-81-8379-008-6}}</ref> அவை:
 
# [[புனித மேரி கிறித்தவ ஆலயம் (சென்னை)|புனித மேரி கிறித்தவ ஆலயம்]]
# [[கிளைவ் மாளிகை]]
# [[கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)|கோட்டை அருங்காட்சியகம்]] <ref>[http://asi.nic.in/asi_museums_chennai.asp Fort Museum, Fort, St. George (Chennai)]</ref>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புனித_ஜார்ஜ்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது