குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 34:
நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். ''வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்'' என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
1935 இல் தமிழ்நாட்டின் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்திலுள்ள [[குன்றக்குடி|குன்றக்குடியில்]] இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
 
வரிசை 41:
அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் [[தவில்|தவிலுடன்]] பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.
 
== திரைப்பட உலகில் ==
[[வா ராஜா வா]] ([[1969]]) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதனுக்கு [[திருமலை தென்குமரி]] (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
 
=== இசையமைத்த பிற திரைப்படங்கள் ===
# [[தெய்வம் (திரைப்படம்)|தெய்வம்]]
# [[மேல்நாட்டு மருமகள் (திரைப்படம்)|மேல்நாட்டு மருமகள்]]
# [[திருவருள்]]
# [[கந்தர் அலங்காரம் (திரைப்படம்)]]
 
=== பிற பங்களிப்புகள் ===
[[தோடிராகம் (திரைப்படம்)|தோடிராகம்]] (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். [[டி. என். சேஷகோபாலன்]] இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
 
== சிறப்புகள் ==
திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம்ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
 
ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி [[இசை]]யால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.
 
== விருதுகள் ==
* [[இசைப்பேரறிஞர் விருது]], 1989. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref name="TIS">{{cite web|title=இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்|url=http://www.tamilisaisangam.in/virudhukal.html|publisher=[[தமிழ் இசைச் சங்கம்]]|date=22 டிசம்பர் 2018|accessdate=22 டிசம்பர் 2018|archive-date=2012-02-12|archive-url=https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html|dead-url=deadyes}}</ref>
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1993 <ref name="SNA">{{cite news|title=Akademi Awardee|url=http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa|publisher=[[ சங்கீத நாடக அகாதமி]]|date=16 டிசம்பர் 2018|accessdate=16 டிசம்பர் 2018|archivedate=2018-03-16|archiveurl=https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa|deadurl=dead}}</ref>
* [[சங்கீத கலாசிகாமணி விருது]], 1996; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
வரிசை 65:
* [[கலைமாமணி விருது]]; வழங்கியது: தமிழக அரசு
 
== மறைவு ==
இவர் [[2008]], [[செப்டம்பர் 8]] ஆம் நாள் தனது 73 ஆவது வயதில் [[சென்னை]] போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார். வைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
 
வரிசை 71:
{{Reflist}}
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/09/1080909001_1.htm வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன்]
* [https://web.archive.org/web/20160314041342/https://tamil.oneindia.com/news/2008/09/09/tn-kunnakudi-vaidyanathan-is-no-more.html பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்]
வரிசை 77:
{{பத்மசிறீ விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:2008 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய வயலின் கலைஞர்கள்]]
[[பகுப்பு:இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது