சந்திரகுப்த மௌரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
== எழுச்சி ==
[[நந்தர்|நந்தனனின்]] அரசவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் இருந்த அந்தணரான [[சாணக்கியர்]] (கௌடில்யர்)
[[நந்தர்|நந்த வம்சத்தை]] வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார். [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்திலிருந்து]] (இன்றைய [[பாட்னா]]) [[தக்சசீலா|தட்சசீலத்துக்குத்]] திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்.அந்த இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்த மௌரியர். 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. [[நந்தர்|நந்த வம்ச]] ஆணுக்கும்('''மகாபத்ம நந்த'''ணுக்கும்) சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்தவர் என்பார்கள் சிலர். பரம்பரையாகவே வேடர் என்றும் சொல்வார்கள் சிலர்.
 
கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்தப் பேரரசு) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்தப் பேரரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரகுப்த_மௌரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது