நாடு கடந்த இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
l
 
வரிசை 56:
 
இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய [[சுபாஷ் சந்திர போஸ்]] அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். பிரித்தானிய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.<ref> https://archive.is/20121218143904/ilanthalirabcd.blogspot.in/2011/10/blog-post.html</ref>
 
பிரதமர் பதவியையும், பிரதம படைத்தளபதி பொறுப்பையும் போஸ் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் [[லட்சுமி சாகல்|லட்சுமி சுவாமிநாதன்]] நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான [[போர் சாற்றல்|போர்ப்பிரகடனத்தை]] நேதாஜி வெளியிட்டார்.அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் வலுப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்து பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/நாடு_கடந்த_இந்திய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது