சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
புள்ளித் திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎காலம்: தனிச்சொல் நீக்கம்
வரிசை 9:
== காலம் ==
இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான [[கண்ணகி]]க்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான [[மகாவம்சம்]] போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.
 
மாற்றுக்கருத்து.
 
சங்க கால புலவர் மாமூலனார் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4 ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் அவர்களுக்கு பிறகு மகதத்தை ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.பரணர் தன் இள வயதில் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.சேரர்களில் கரிகாலனால் நெடுஞ்சேரலாதன் வெல்லப்பட்ட பிறகு சில காலம் கழித்து அரியணை ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். செங்குட்டுவன் பற்றி பரணர் பாடியுள்ளார். இதன் மூலம் கரிகாலன் சேரனை விட சில வருடம் முதியவன் என்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் காலம் பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டு ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது