எழுதுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரலாறு விரிவு செய்யப்பட்டுள்ளது
வரிசை 16:
==வரலாறு==
[[Image:Tamil-Palm-1.JPG|thumb|A page from a Tamil Palm Leaf Manuscript.]]
பழங்காலத்து [[எகிப்து|எகிப்தியர்]] பாப்பிரசு (papyrus) சுருள்களில் எழுத சிறு நாணலால் (reed) ஆன எழுதுகோல்களைப் பயன்படுத்தினர். இந்த நாணல் போன்ற செடிக்கு ''சங்க்கசு மாரிட்டிமசு'' (Juncus Maritimus) என்று பெயர்<ref>[http://www.lib.umich.edu/pap/exhibits/writing/reed_pen.html Egyptian reed pen] Retrieved March 16, 2007.</ref>. சிட்டீவன் ரோச்சர் ஃவிசர் (Steven Roger Fischer) தான் எழுதிய ''எழுதுதலில் வரலாறு'' (''A History of Writing'') என்னும் நூலில் எகிப்தில் சக்காரா என்னும் இடத்தில் கிடைத்துள்ள சான்றுகளின்படி நாணல்-போன்ற எழுதுகோல்கள் எகிப்திய அரசர்களின் முதற்பரம்பரையினர் காலத்திலேயே, அதாவது கி.மு 3000 ஆண்டு தொடக்கத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றார். ஏறத்தாழ இன்றைக்கு 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை, கி.பி. 17 ஆவது நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன.
 
பறவைகளின் இறகாகிய தூவல் (quill) எழுதுகோல்கள் இசுரேல்-பாலசுத்தீனத்தில் (சுடியாவில்), [[மேற்குக் கரை]] என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் (Qumran) என்னும் இடத்தில் இருந்து கிடைத்த [[சாக்கடல்|செத்தக் கடல்]] சுருள்கள் (Dead Sea Scrolls) எழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி 700களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை தூவல் எழுதுகோலே 1787 இல் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அரசியல் சட்டம் எழுதவும், கையெழுத்திடவும் பயன்பட்டது. செத்த கடல் சுருள்கள் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது கி.மு 100 இல் எழுதியதாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பியர்கள் நாணல் போன்ற குழல்கள் கிடைக்காததால் தூவல் எழுதுகோலை வரவேற்றனர். செவில்லைச் சேர்ந்த கி. பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித இசிடோர் (St. Isidore of Seville) அவர்கள் எழுதி வைத்துள்ளதில், தூவல் எழுதுகோலைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது.
<ref>[http://www.cambridge.org/catalogue/catalogue.asp?isbn=9780511217593&ss=ind The Etymologies of Isidore of Seville], Cambridge Catalogue Retrieved March 11, 2007.</ref>. தூவல் எழுதுகோல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன
 
[[வெண்கலம்|வெண்கலத்தால்]] ஆன எழுதுகோல் நுனி உடையது ஒன்று கி.பி 79 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது என்பற்கான சான்றுகோள் அழிந்து பட்ட [[பாம்ப்பை]] நகரில் கிடைத்துள்ளது.
<ref>[http://www.arnoldwagner.com/dippens/dip_pens1.htm Arnold Wagner - Dip Pens]. Retrieved March 11, 2007.</ref>. [[சாமுவேல் பெப்பீசு]] என்பாரின் தன்வாழ்க்கைக் குறிப்பேட்டில் ஆகசட்டு 1663 ஆம் ஆண்டிற்கான பதிவில் இது பற்றிய குறிப்பொன்றும் உள்ளது. 1803 இல் [[மாழை]]யால் (உலோகத்தால்) ஆன எழுதுகோல் நுனிக்கான காப்புரிமம் ஒன்று உள்ளது ஆனால் செய்து விற்பனை செய்யவில்ல்லை. 1822இல் பர்மிங்காம் என்னும் இடத்தைச் சேர்ந்த சான் மிட்செல் (John Mitchell) மாழை நுனி உடைய எழுதுகோல்களை அதிக எண்ணிக்கையில் படைத்து விற்பனை செய்தார்<ref>[http://jquarter.members.beeb.net/morepentrade.htm More about the pen trade] from The Birmingham Jewellery Quarter site. Retrieved March 11, 2007.</ref>.
 
 
 
 
 
 
எழுதுகோல் பல்வெரு காலங்களில் பலவிதமன கருவிகளக‌ உருவேடுத்துள்ளது.
==தயாரிப்பாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எழுதுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது